ஆண்களும் பெண்களும் (தனித் தனியே) ஒரே இடத்தில் இருந்து கொண்டு கல்வி கற்ற இஸ்லாத்தில் தடை உள்ளதா?
ஆண்களும் பெண்களும் (தனித் தனியே) ஒரே இடத்தில் இருந்து கொண்டு கல்வி கற்க இஸ்லாத்தில் தடை இல்லை.
“(யா அல்லாஹ்!)உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! (அல் குர் ஆன் 1 : 4,5 )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களையும் பெண்களையும் (தனித் தனியே) ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு போதனை, அறிவுறை, விளக்கமளிப்பது போன்றவைகளை செய்துள்ளார்கள், அல்லது ஆண்களும் பெண்களும் (தனித் தனியே) ஒரே இடத்தில் இருந்து கொண்டு பிரச்சாரங்களை கேட்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கவில்லை. இதையே முக்கிய ஆதாரமாக நான் வைக்கின்றேன். (ஆதாரமாக சில ஹதீஸ்களை குறிப்பிட்டுளேன்.)
1. நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா? என நான் கேட்டதற்கு, அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி ஹதீஸ் எண் : 324) (முழு ஹதீஸ் கீழே தரப்பட்டுள்ளது).
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களையும் பெண்களையும் ஒரே இடத்தில் (தனித் தனியே) வைத்து பிரச்சாரம் செய்கின்றார்கள் பெண்களுக்கு கேட்கவில்லை என்பதால் பெண்கள் பகுதிக்கு சென்று அறிவுறை வழங்குகின்றார்கள். பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருதி, பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். (புகாரி ஹதீஸ் எண் : 98) (முழு ஹதீஸ் கீழே தரப்பட்டுள்ளது).
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களையும் பெண்களையும் ஒரே இடத்தில் (தனித் தனியே) வைத்து பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆண்களே அதிகம் விளக்கங்கள் கேட்பதால் தனியாக ஒரு நாளை ஒதுக்கிதாருங்கள் என்று ஸஹாபிய பெண்கள் கேட்கின்றனர். (புகாரி ஹதீஸ் எண் : 101) (நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (முழு ஹதீஸ் கீழே தரப்பட்டுள்ளது).
இந்த ஹதீஸ்களில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களையும் பெண்களையும் ஒரே இடத்தில் (தனித் தனியே) வைத்து போதனை செய்துள்ளார்கள் என்பது எனது கருத்து.விரிவான 3 முழு ஹதீஸ்கள்:
புகாரி ஹதீஸ் எண் : 324
நாங்கள் இரண்டு பெரு நாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை கூறினார்கள். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா? என நான் கேட்டதற்கு, அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்றார்.
உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா வந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா? என நான் கேட்டதற்கு என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும் ஆம்! கேட்டேன் எனக் கூறினார். இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார். கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்றும் உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.
இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார் என ஃப்ஸா கூறினார்கள்.
புகாரி ஹதீஸ் எண் : 98
பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கருதி, பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால் ரளியல்லாஹு அன்ஹு தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்” இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
(நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள்.
அவர்கள் தங்களின் அறிவுரையில் ‘உங்களில் ஒரு பெண் தன்குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?’ என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்’ என்று கூறினார்கள்” அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
– முஹம்மது இம்தியாஸ்
[ இவ்வாக்கம் ஒரு சகோதரரின் கண்ணோட்டம். மற்றவர்களின் கருத்து இதற்கு மாற்றமாகவும் இருக்கலாம் . Adm ]