M U S T R E A D
ஸஜ்தாவின் சிறப்பு
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறியதாவது: மக்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) ‘அல்லாஹ்வின் தூதரே! நாஙகள் எஙகள் இறைவனைக் காண்போமா?’ என்று வினவினர்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள்.
மக்கள் ‘இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்) அல்லாஹ்வின் தூதரே!’ என்றார்கள்.
மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா?’ எனக் கேட்டார்கள்.
அதற்கும் மக்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தனர்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், ‘இவ்வாறுதான் உறுதியாக நீஙகள் இறைவனைக் காண்பீர்கள்,’ என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:
”மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது, ‘(உலகத்தில்) யார் எதனை வணஙகிக் கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும்’ என்பான் (இறவைன்).
ஆகவே சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான சாத்தான்கள்/ சிலைகள்/ மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தஙகளிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும்.
அப்போது வலிவும் மான்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, ‘நான் உஙகள் இறைவன்’ என்பான். உடனே அவர்கள் ‘எஙகள் இறைவன் எஙகளிடம் வரும்வரை நாஙகள் இஙகேயே இருப்போம். எஙகள் இறைவன் எஙகளிடம் வந்தால் அவனை நாஙகள் அறிந்துகொள்வோம்’ என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, ‘நானே உஙகள் இறைவன்’ என்பான். அப்போது அவர்கள், ‘நீ எஙகள் இறைவன்தான்’ என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான்.
நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில், ‘இறைவா! காப்பாற்று! காப்பாற்று!, என்பதே இறைத்தூதர்களின் பிரார்த்தனையாகும்.’
தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தஙகாயின் முள்வடிவில்) ,சஅதான், செடியின் முள்ளைப் போன்றிருக்கும்,, என்று கூறிவிட்டு, ‘சஅதான், செடியின் முள்ளை நீஙகள் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.
மக்கள், ‘ஆம்(பார்த்திருக்கிறோம்)’ என்று பதிலளித்தார்கள்.
தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்: ‘அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.
அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர்களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடுமாறிய பின் தப்புபவர்களும் உண்டு.
இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அல்லாஹ்வை வணஙகிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள்.
சஜ்தாச் செய்த அடையாளஙகளை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள்.
சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளஙகளைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணஙகியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.
இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள். பின்னர் அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான்.
இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி, இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது’ என்று கூறுவான்.
அப்போது அல்லாஹ், ‘( உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?’ என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், ‘இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)’ என்பான்.
அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழஙகுவான். அல்லாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான்.
பிறகு ‘இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக!” என்று கேட்பான். அதற்கு இறைவன்,’ முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே’ என்று கேட்பான்.
அதற்கு அம்மனிதன், ‘இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!’ என்று கூறுவான்.
அதற்கு இறைவன்; ‘(நீ கேட்டது) உனக்கு வழஙகப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா” என்பான்.
அம்மனிதன், ‘இல்லை’ உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான்.
உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான். அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான்.
பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், ”இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!,,’ என்று கூறுவான்.
அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், ‘ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய் முன்பு வழஙகப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!’ என்று கேட்பான்.
அதற்கு அம்மனிதன், ‘இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கிவிடாதே!’ என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான்.
பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், ‘நீ ஆசைப்படுவதைக்கேள்!’ என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான்.
இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், ‘இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!’ என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும்போது உன்னதனாகிய அல்லாஹ் ‘உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடஙகும் உண்டு” என்பான்.
இதன் அறிவிப்பாளரான அபூ சயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம், ”உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடஙகும் உண்டு, என்றா அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள்!’ என்று கேட்டார்கள்.
அதற்கு அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள், ”நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடமிருந்து, ”உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடஙகும் உண்டு, என்றே இறைவன் கூறியதாகவே மனனமிட்டேன்” என்றார்கள்.
அதற்கு அபூ சயீத் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள், ”இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடஙகும் உண்டு, என்றே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.
[ ஸஹீஹுல் புகாரி, பாகம்:1 அத்தியாயம்: 10 – பாங்கு, பாடம்: 129, ஹதீஸ் எண்: 0806 (ஸஜ்தாவின் சிறப்பு.)]