ஏழை யார்?
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஏழை யார்? என்பதை நீங்கள் அறிவீர்களா? என எங்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்.
”எவரிடம் வெள்ளிக் காசும், பொருள்களும்,இல்லையோ அவரே எங்களில் ஏழை” என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.
”என் சமுதாயத்தில் ஏழை என்பவன், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய நன்மைகளுடன் வருவான்.
ஆனாலும் அவன் இவனை ஏசினான், இவனை இட்டுக்கட்டினான்.
இவர் பொருளை சாப்பிட்டான் (கொலை செய்து) இவனது இரத்தத்தை ஓட்டினான்.
இவனை அடித்தான் என்ற குற்ற நிலையிலும் வருவான். அப்போது இவனது நன்மைகளிலிருந்து (இவனால் பாதிக்கப்பட்ட)வர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
இவனது குற்றத்திற்கு தீர்வு ஏற்படும் முன் இவனது நன்மைகள் அழிந்து விட்டால், பாதிக்கப்பட்டவர்களின் குற்றங்களிலிருந்து எடுக்கப்பட்டு இவனிடம் தரப்படும். பின்பு நரகில் வீசப்படுவான்’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள். (முஸ்லிம்)