Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வருகிறது விண்வெளியில் ஹோட்டல்!

Posted on November 5, 2009 by admin

பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல பல திட்டங்கள் தயாராகி வருகின்றன. அவை பற்றிய விவரம் இதோ…

பார்ஸிலோனாவைச் சேர்ந்த The Galactic Suite Space Resort எனும் நிறுவனம் பல பில்லியன் டாலர் செலவில் விண்வெளியில் ஹோட்டல் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2012-ல் இது திறக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று இரவுகள் அந்த ஹோட்டலில் தங்க சுமார் 3 மில்லியன் யூரோ (4.4 மில்லியன் டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும். விண்வெளி ஹோட்டலுக்கு செல்லும் முன் வாடிக்கையாளருக்கு ஒரு தீவில் எட்டு வாரங்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதுவும் அந்தத் தொகையிலேயே அடங்கும்.

விண்வெளியில் தங்கும் நாட்களில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் 15 முறை சூரிய உதயத்தைக் காண முடியும். உலகத்தை 80 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றி வருவர். ஒரு பிரத்யேக உடை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். அதன் உதவி கொண்டு ஸ்பைடர் மேன் போல் சுவற்றில் ஒட்டிக் கொண்டு அறைகளை அவர்கள் வலம் வருவர்.

இந்நிறுவனத்தின் CEO சேவியர் க்ளாராமன்ட் (CEO Xavier Claramunt) எதிர்காலத்தில் விண்வெளி பயணம் ஒரு யதார்த்த நிகழ்வாக அமைந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்னம் 15 வருடங்களில் வார விடுமுறையை உங்கள் குழந்தைகள் செலவழிக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

இதற்கான விண்கலம் பூமியிலிருந்து 450 கி.மீ. உயரத்தில் நிறுவப்படுமென்றும் அது மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என்றும், அதில் நான்கு பேரும் இரு விண்வெளி விமானிகளும் அடங்குமளவு வசதியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து கலனை அடைய ஒன்றரை நாட்கள் ஆகும். பூமியிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ராக்கெட் அந்த 3 நாட்களும் விண்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். பிறகு அந்த ராக்கெட்டில் பயணிகள் பூமி திரும்புவர். 200க்கும் அதிகமான மக்கள் இப் பயணத்திற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர். அதில் 43 பேர் வரை முற்கூட்டியே இடப்பதிவு செய்துள்ளனர்.

பிஜியோ ஏரோ ஸ்பேஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபர் ராபர்ட் பிஜியோ நிறுவியது தான் பிஜியோ ஏரோ ஸ்பேஸ். சுமார் மைல் நீளம் கொண்ட விண்வெளி விமானம் பூமியில் இருந்து புறப்பட்டு நிலவுக்கு பறந்து சென்று விட்டு பூமிக்கு திரும்பும். இந்த திட்டத்துக்கான செலவு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டது.

ஸ்பேஸ் ஐலேண்ட் குரூப்

இந்நிறுவனம் மோதிர வடிவ, சுற்றிக் கொண்டேயிருக்கும் விண்வெளி ஓட்டலை கட்ட இருக்கிறது. இது ‘2001 ஸ்பேஸ் ஓடிசி” திரைப்படத்தில் இடம்பெற்ற விண்வெளி ஓடத்தைப் போல் இருக்கும். நாசா விண்வெளி ஓடத்தின் 12 எரிபொருள் அறைகளைக் கொண்டு கட்டப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த விண் ஓடம் பூமியிலிருந்து 644 கி.மீ. தொலைவில் 2006–ம் ஆண்டு நிறுவப்பட இருக்கிறது. இந்த விண்வெளி ஹோட்டல் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றுவதால் 3_ல் ஒரு பங்கு அளவு கொண்ட புவிஈர்ப்பு விசையை ஏற்படுத்தும்.

ஹில்டன் ஹோட்டல்ஸ்:

இந்த நட்சத்திர ஓட்டல் விண் வெளியில் சுற்றுலாத்துறையின் திட்டங்களுக்கு பங்குதாரராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த திட்டங்கள் நிறைவேற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளது.

விண்வெளி சுற்றுலாத்துறை முதலில் குறைவான எண்ணிக்கையில் தங்கும் இடங்களை ஏற்படுத்தும் அதேவேளையில் மிகவும் சிறப்புடையதாகவும் இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையம் முதலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கும். இன்று நிலப் பரப்பில் அமைந்திருக்கும் ஹோட்டல்களைப் போல் வெளியில் சுற்றிப் பார்க்க எதுவும் இருக்காது. ஏனென்றால் இந்த விண்வெளி நிலையம் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டது. பொழுதுபோக்கிற்காக அல்ல. இருந்தாலும் முதற்கட்ட விண்வெளி ஓட்டல்கள் விண்வெளி விருந்தாளிகளுக்கு சொகுசான தங்கும் வசதி மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்கத் தயாராக இருக்கும்.

ஸ்பேஸ் ஐலேண்ட் ஹோட்டல் சுற்றிக் கொண்டே இருப்பதால் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள புவிஈர்ப்பு விசை இழுப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் விருந்தாளிகள் நிலப்பரப்பைப்போல் நடப்பதற்கும் சுற்றி வருவதற்கும் வழிவகை செய்கிறது. இந்த ஓட்டலில் ஒரு நீரோடை, நீர் மறுசுழற்சி மையம், தோட்டம் மற்றும் மருத்துவ வசதிகள் உட்கொண்டதாக இருக்கும்.

இதைத் தவிர விருந்தாளிகள் விண் வெளியிலும் நடக்கும் வசதிகளையும் அளிக்கிறது. இந்த ஹோட்டல் நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றிவருவதால் இந்த ஹோட்டல்களில் ஜன்னல்கள் இருக்காது. ஏனென்றால் இவ்வாறு சுற்றும்பொழுது விருந்தாளிகள் விண்வெளியைப் பார்த் தால் உடல் கோளாறு ஏற்படும் என்பதால் ஜன்னல்கள் தவிர்க்கப்படுகிறது. இதை ஈடுசெய்வதற்காக அறையில் திரைகள் பொருத்தப்பட்டு விண்வெளிக் காட்சிகளின் படக்காட்சிகள் திரையிடும் எண்ணத்தில் உள்ளனர்.

புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர் லாந்து என்று செல்வது போல இனி வரும் காலத்தில் புதுமணத் தம்பதிகள் விண்வெளிக்கு தேனிலவு கொண்டாடப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சமீபத்தில் ரஷிய விண்வெளி வீரர் ஞ்ரிமெலன் சென்கோ விண்வெளியில் தங்கி இருந்தபடியே பூமியில் உள்ள தன் காதலி எக்கார்டினா டிமிட்ரேலை திருமணம் செய்து கொண்டார். இந்த ‘விண்வெளி திருமணம்” புதுமையாக இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் விண்வெளி பயணத்திற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

விண்வெளி சுற்றுலா போட்டிகள் சூடு பிடித்து விட்டதால் திருவாளர் பொது ஜனம் ‘ஜம்” என்று கால்மேல் கால் போட்டுக் கொண்டு விண்வெளிக்கு பறந்து செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தற்போது சென்னை – மதுரை இடையே சாதாரண விமான போக்கு வரத்து இருப்பது போல இன்னும் 20 ஆண்டுகளில் பூமிக்கும் விண்வெளிக்கும் விமானப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதனிடையே இத்திட்டம் குறித்து சில மதிப்பீட்டாளர்கள் பலத்த கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 − = 16

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb