ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு வைத்து, (அது வளர்ந்து) அந்த மரத்திலிருந்து காய்க்கும் கனிகளை ஏதேனும் சாப்பிட்டால் அது அவருக்கு தர்மமாக பதிவு செய்யப்படும். அதிலிருந்து பிறரால் திருடப்பட்டு எடுப்பவையிலும் அவருக்கு தர்மம் (செய்த கூலி) உண்டு. ஒருவர் அதன் கனிகளை பறித்துக் குறைத்தாலும், அவருக்கு தர்மம் (செய்த கூலியாகவே) தவிர இருப்பதில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு) உள்ளது: ”ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு, விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு மனிதன்,மிருகம் மற்றும் ஏதேனும் ஒன்று சாப்பிட்டால் அவனுக்கு அது தர்மமாகவே அமையும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம்)
அதீ இப்னு ஹாதம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”பேரீத்த பழத்(தின் பாதியை தர்மம் செய்) தேனும், நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இவ்விரண்டு நூல்களின் மற்றொரு அறிவிப்பில்(பின்வருமாறு உள்ளது: ”உங்களில் எவரும் தன் இறைவனிடம் (மறுமையில்) பேசாமல் இருக்கமாட்டார். அவனுக்கும், அவருக்குமிடையே மொழி பெயர்ப்பாளர் இருக்கமாட்டார். தனது வலது புறம் பார்ப்பான். அங்கே தான் முன்பு அனுப்பி வைத்த (செயல்களை)த் தவிர வேறொன்றை பார்க்க மாட்டான். பின்பு இடது புறம் பார்ப்பான். தான் முன்பு செய்திட்டவற்றைத் தவிர (வேறான்றையும்) பார்க்க மாட்டான். தனக்கு முன்னே பார்ப்பான். அங்கே முகத்துக்கு நேராக நரகத்தைத் தவிர (மற்றதைப்)பார்க்கமாட்டான். எனவே பேரீத்தம் பழத்(தின் பாதியை தர்மம் செய்)தேனும் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது கிடைக்கவில்லையானால், நல்ல வார்த்தையைப் பேசி (தர்மம் செய்யு)ங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” ( ரியாளுஸ்ஸாலிஹீன்)