ஜமாஅத்துடன் தொழுவதின் அந்தஸ்து
அபூ ஹுரைராரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறினார்கள்: ”ஒருமனிதர் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை, அவர் தனது வீட்டில் தொழும் தொழுகையை விடவும் தனது கடைத்தெருவில் தொழும் தொழுகையை விடவும் இருபதுக்கும் அதிகமான அந்தஸ்து களைப் பெறுகிறது.
அதற்குக்காரணம், ஒருவர் அழகாக உளூசெய்து கொண்டு பிறகு பள்ளிவாசல் நோக்கி வருகிறார் எனில் -தொழுகையைத் தவிர வேறதுவும் அவரை வெளிக்கிளப்பவில்லை என்றிருந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்குப்பகரமாக நிச்சயமாக அவருக்கு ஓர்அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்., ஒரு குற்றத்தை அவரைவிட்டும் அகற்றுகிறான். இது பள்ளிவாசலில் அவர் நுழைவது வரையிலாகும்.
பள்ளிவாசலில் நுழைந்து விட்டாரெனில் தொழுகை அவரை அங்கு தடுத்து வைத்திருக்கும் காலம்வரையில் அவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாகவே கருதப்படுவார்.
மேலும் உங்களில் ஒருவர் தான் தொழுத இடத்தில் இருந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்தவண்ணம் இருக்கிறார்கள்: ‘யாஅல்லாஹ், இவருக்கு அருள் பொழுந்திடு! இவரது பாவத்தை மன்னித்திடு. இவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றிடு’ என்று! -அந்த இடத்தில் இவர் யாருக்கும் தொல்லை கொடுக்காமலும் உளூ முறியாமலும் இருக்கும் வரையிலாகும் இது’’ (நூல்: புகாரி, முஸ்லிம்)