[ எவர் விவாதம் செய்வதற்கு சக்தி பெற்றிருந்தும் விவாதம் செய்வதிலிருந்து விலகிக்கொள்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லா ஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை தருகிறான் – ஹதீஸ் ]
டாக்டர் ஜாகிர் நாயக் உலகம் அறிந்த ஒரு இஸ்லாமிய அறிஞர். பிற மதங்களின் அடிப்படையை அந்தந்த மதங்களின் தலைவர்களை விட ஆழமாக ஆராய்ந்து படித்து உண்ர்ந்தவர்.
தான் 40 வருடங்களாக செய்த பணியை 4 வருடங்களில் ஜாகிர் நாயக் செய்து விட்டார் என்று அஹ்மத் தீதாத் அவர்களினால் போற்றப் பட்டவர்.
11, 12 அக்டோபர் 2009 அன்று சென்னையில் பெரியார் கொள்கை உடைய இறை மறுப்பவர்கள் சிலருடன் (திரு.கீ.வீரமணியின் குழுவினர்) விவாதம் சென்னையில் உள்ள ஒரு வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர். விவாதத்திற்கு இடையில் நம் சகோதரர் ஒருவர் சற்று நிதானம் இழந்து, விருந்தினரிடம் ” நாங்கள் தான் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு தங்கும் இடமும், உண்வும் அளிப்பவர்கள் ” என்று தவறுதலாக கூறி விட்டார். இதற்கு பின்னர் சகோ.பீஜே மற்றும் சிலர் மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கமலைப் போன்றவர்கள் தீவிரவாதம் என்ற பெயரில் விஷக் கருத்துக்களை பொது மக்களை எளிதில் சென்றடையும் சினிமாவில் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்கு மெருகூட்டும் விதமாக நம்மவர்களே இப்படி சில நிகழ்வுகளை நடத்துவது வருத்தம் தருகிறது. எனவே விவாதம் செய்து, அதை சிடிக்களாக வெளியிட்டு விற்பவர்கள், இப்போது டாக்டர்.ஜாகிர் நாயக்கிடம் விவாதம் என்று கேட்கிறார்கள்.
அதற்கு சகோ.பீஜே அவர்கள் சரியான நபர் இல்லை. சகோ.பீஜேவுக்கு தாழ்மையான வேண்டுகோல்: வீரமணி, கமல் போன்றவர்களுடனும், சட்ட மன்றத்தில் விவாதம் செய்வதிலும் தான் அவர் இனிமேல் கவனம் செலுத்த வேண்டும்.
முஸ்லிம்களுடன் விவாதம் செய்வதை நிறுத்த வேண்டும். சமுதாய நலனுக்காக இதை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். குறைந்த பட்சம் அவரது ஜமாத்தினர் சற்று சிந்தித்து செயல் பட வேண்டும்.
ஒரு பழைய தலைவர் சொன்னது போல் உண்மை செருப்புப் போடுவதற்குள் பொய் உலகையே ஒரு சுற்று சுற்றி முடித்து விடும். அப்படிப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சொல்வதை மறுப்பவர்கள் , www.onlinepj.com என்ற அறிஞர் பீஜே அவர்களின் வெப்ஸைட்டைப் பார்க்கவும். பிற இஸ்லாமிய அறிஞர்களின் குறைபாடுகளே அதில் அதிகமாக உள்ளது.
Raffik Basha