அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘முஸ்லிம் பெண்களே! ஆட்டுக்கால் குழம்பாயினும் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குக் கொடுப்பதை மற்றொரு பெண் இழிவாகக் கருத வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”பாதையின் நடுவில் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய ஒருவர் சொர்க்கத்தில் உலாவுவதை நான் பார்த்தேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு) உள்ளது: ”பாதையின் நடுவில் கிடந்த ஒரு மரத்தின் அருகே ஒருவர் நடந்து சென்றார். முஸ்லிம்களுக்கு இடையூறு தராதவாறு இதை அகற்றுவேன் என்று கூறி அதைச் செய்தார். எனவே (இறந்த பின்) சொர்க்கத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டார். (ரியாளுஸ்ஸாலிஹீன்)