உலகையே அதிர வைத்த உலக வர்த்தக மைய தகர்ப்பு நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அது தொடர்பான கேள்விகள் மட்டும் இன்னும் விடையளிக்கப் படாமலேயே இருக்கின்றன.
அமெரிக்காவின் கூற்றுப்படி, முஸ்லீம்களும் ஒசாமா பின் லேடனின் கட்டளையின் கீழ் செயல்பட்ட சிலர் தான் இந்த காரியத்தை செய்தார்கள். ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் சிறிதும் கூட இல்லாத நிலையில், அதற்கான ஒரு சிறு சரியான ஆதாரத்தை கூட அமெரிக்க புஷ் அரசாங்கம் தரவில்லை.
அமெரிக்க, கனடா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய உலகின் கல்வியாளர்களும் விஞ்ஞானிகளும் பெரும் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க தீவிரவாதிகள் என்று குற்றம் சாத்திய அந்த 19 பேர்களில் ஒருவரால் கூட ஒரு ஒற்றை இன்ஜின் கொண்ட ஒரு விமானத்தை பறக்கச்செய்து, அதனை சரியாக அந்த கோபுரங்களில் மோத முடியாது. அப்படி இருக்க பயணிகள் விமானத்தை ஓட்டிச்சென்று அதனை உலக வர்த்தக மையத்தில் இடித்தார்கள் என்றால் அது அமெரிக்காவின் விமானப் படையை சார்ந்தவர்களையே பொறாமை கொள்ளாக்கக்கூடிய செயலாகும். அதாவது, இவர்கள் புத்தகத்தை படித்து மட்டும் இப்படி (ஒரு கடுமையான பயிற்சியும் திறமையும் தேவைப்பட கூடிய) ஒரு செயலை செய்தார்கள் என்பது முட்டாள்தனமான வாதம் என்றுள்ளனர்.
இது போன்று இன்னும் பல நூறு கேள்விகள் விடையில்லாமலே கிடப்பில் கிடக்கின்றது. அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் கடத்தப் பட்டது என்ற செய்தி தெரிந்தவுடன் அமெரிக்க விமான படை ஜெட்களை ஏன் வானில் செலுத்தவில்லை?
இந்த 9/11 நடப்பதற்கு முந்தைய வருடம் மட்டும் விமானங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட பாதையை விட்டு நீங்கிசென்றதால், அடுத்த 20 நிமிடத்திற்குள் அமெரிக்க விமானப் படை ஜெட்கள் கிட்டத்தட்ட 69 முறை வானில் பறக்க விடப்பட்டன. இது சர்வதேச அளவில் கடைபிடிக்கக்கூடிய ஒரு செயலாகும். ஆனால், 9/11 போது இது கடைபிடிக்கப்படவில்லை என்பது பொறுப்பற்ற செயலாக உள்ளது.
செப்டம்பர் 16 ஆம் தேதி அன்றைய அமெரிக்க துணை அதிபர் டிக் சென்னியிடம் இது பற்றி ஒரு பத்திரிகை சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அமெரிக்க அதிபரால் மட்டுமே பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்த கூடிய அதிகாரம் இருக்கின்றது என்று கூறி கேள்வியை திசை திருப்பிவிட்டார். அனால் அவரிடம் கேட்கப் பட்ட கேள்வி அதுவல்ல. ஏன் அமெரிக்க ஜெட்கள் வானில் பறக்க விடப்படவில்லை என்பது தான்.
இந்த சம்பவத்தின் போது, இஸ்லாமியர்கள் அந்த விமானங்களை கடத்தினார்கள் என்பதற்கு மற்றொரு சாட்சியாக கடத்தப்பட்ட விமானத்திலிருந்து அழைக்கப் பட்டதாக கூறப்பட்ட செல்போன் அழைப்புகளை காண்பித்தார்கள். இவர் சொல்கின்ற இந்த செல்போன் அழைப்புகள் தரையிலிருந்து 35,000 – 40,000 அடி உயரத்தில் வைத்து அழைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு தொழில்நுட்பம் இல்லவே இல்லை. கனடாவை சேர்ந்த பேராசிரியர் A.K. Dewdney இதனை பொய் என்று கூறி மறுத்துள்ளார். அவர், செல்போன்கள் தரையிலிருந்து 2000 அடிக்கு மேல் இயங்காது என்று கூறியுள்ளார். இவரது கூற்றில் சந்தேகம் கொண்ட ஜப்பானிய தொலைகாட்சி குழு ஒன்று கனடாவிற்கு சென்று ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து இதனை சோதித்துள்ளது. அந்த சோதனையில், 1000 அடிக்கு மேல் அவர்களால் ஒரு அழைப்பை கூட செய்யமுடியவில்லை.
மேலும், இந்த 9/11 சம்பவத்தில் தரைமட்டமானது 2 கட்டிடங்கள் மட்டுமல்ல, 47 மாடிகள் கொண்ட பில்டிங் நோ. ௭ ஐயும் சேர்த்து மொத்தம் 3 கட்டிடங்கள். மற்ற இரு கட்டடங்கள் மேல் விமானங்கள் மோதியதால் இடிந்து விழுந்தது என்றார்கள், அப்படியென்றால் இந்த மூன்றாவது கட்டிடம் ஏன் விழுந்தது? அதன் மீது எந்த விமானமும் மோதவில்லையே..! இதற்கு அமெரிக்க அரசாங்கம் கொடுத்த பதில், இரட்டை கோபுரங்களில் ஏற்பட்ட நெருப்பின் காரணமாக இந்த கட்டடமும் விழுந்ததாம்.
கடந்த ஏப்ரல் 6, 2009 ல் ஒரு தொலைக்காட்சி சேனல் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானியான Niels Harrit என்பவரிடம் ஒரு நேர்காணல் வைத்தது. இவர் கொபென்கேகன் பல்கலைகழகத்தில் வேதியல் பேராசிரியாராகவும் பணியாற்றுகிறார். இவரும் மற்றும் இவருடன் சேர்ந்து 8 விஞ்ஞானிகளும் சேர்ந்து செய்த ஆராய்ச்சி பற்றி அந்த தொலைகாட்சி நேர்காணல் நடத்தியது.
அந்த ஆராய்ச்சியில், இடிந்த இரட்டை கோபுரங்களிலும், பில்டிங் 7 -லும் இருந்து கிளம்பிய தூசியில் சிறிய வினைபடாத நானோ தேர்மைட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதுபோலவே கட்டடங்கள் இடிந்த 10 நிமிடத்திற்குள்ளாகவே எடுக்கப்பட்ட உருகிய ஸ்டீலின் மாதிரியை, மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ந்த போது அந்த உருகிய ஸ்டீலில் நானோ தேர்மைட்களின் சுவடுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த நானோ தேர்மைட்கள் என்பது அதிக சக்தி வாய்ந்த வெடி பொருளாகும். இது கண்ட்ரோல்ட் டேமொலிஷன் எனப்படும் முறையில் (இந்த முறை, கட்டடங்களை வெடிவைத்து தகர்க்கும் முறையாகும்) பயன்படுத்தப்படும் வெடிபொருள் ஆகும். இது 1893 களில் இருந்தே ராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேராசிரியர் Harrit மேலும் கூறுகையில், அந்த இரட்டை கோபுரங்களில் வடக்கு கோபுரம் இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதிலிருந்து ஸ்டீல் உருகி வடிந்தது. இது விமானத்தின் எரிபொருளால் ஏற்பட்ட விளைவு அல்ல. ஏனென்றால் விமானத்தின் எரிபொருள் 285 டிகிரி வெப்பத்தையே உருவாக்கும் ஆனால், தேர்மைட் 3500 டிகிரி அளவு வரை வெப்பத்தை உருவாக்கும் சக்தி கொண்டது. இதனால் தான் அந்த கட்டிடத்தின் ஸ்டீல் பார்கள் உருகின என்று கூறினார். (அவருடைய நேர்காணலை பார்க்க…)
Optical microscopy, Scanning electron microscopy, X-ray energy dispersive spectroscopy, மற்றும் Differential scanning calorimetry என்று பல சோதனை முறைகளின் மூலம் சோதித்ததில் அந்த உருகிய ஸ்டீலில் இருந்த தேர்மைட்கள் நானோ தேர்மைட் அல்லது சூப்பர் தேர்மைட் வகையை சேர்ந்தது என்று கண்டறிந்தனர். இது அதிக வெப்பத்துடன் எரியும் ஆற்றல் கொண்டது, மேலும் குறைவான வெப்பத்தில் எரிய ஆரம்பிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. இது Lawrence Livermore என்ற ஆய்வுக்கூடத்தில் தயாரிக்க பட்டதாகும். (இந்த ஆய்வுக்கூடம் தான் 9/11 நிற்கு பின்னர் அமெரிக்காவில் பலருக்கு அனுப்பப்பட்ட ஆந்த்ராக்சையும் தயாரித்தது என்று நம்பப்படுகிறது. இந்த ஆந்த்ராக்ஸ் குற்றச்சாட்டும் முஸ்லீம்களின்மீதே போடப்பட்டது.)
அவரிடம் எவ்வளவு நானோ தேர்மைட்கள் இந்த 3 கட்டடங்களையும் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று கேட்டதற்கு 10 – 100 தங்கள் என்று கூறினார். அவரிடம் இவ்வளவு அதிகமான அளவு நானோ தேர்மைட்கள் யாரும் கண்டுகொள்ளாத விகிதம் எவ்வாறு அந்த கட்டடத்திற்குள் கொண்டு செல்லபட்டிருக்கும் என்று கேட்டதற்கு, டிரக்குகளின் உதவியுடன் பராமரிப்பு பணிகள் செய்வதுபோல கட்டிடத்தின் உள்ளே இதனை அவர்கள் கொண்டு சென்று அந்த வெடி பொருட்களை அதற்கேற்ற இடங்களில் வைத்திருக்கலாம். இதனை செய்வதற்கு பல வாரங்கள் பிடித்திருக்கும், அங்குள்ள பாதுகாப்புக்கு பணியாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களால் உள்ளே சென்றிருக்க முடியாது. அந்த கட்டடங்கள் தகர்க்கபடுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் சில பணியாளர்கள் பராமரிப்பு வேலைகளை மேற்கொண்டார்கள் என்று உறுதி செய்யப்பட்ட தகவல் நமக்கு உண்டு. அப்படியென்றால் அந்த பணியாளர்கள் யார்? அவர்கள் கட்டடத்தின் உள்ளே என்ன வேலை செய்தார்கள்.?
இந்த மூன்று கட்டடங்களும் இடிந்து வீழ்ந்த விதம் அது வெடி வைத்து தகர்க்கப்படும் (Structured Demolition) முறையில உள்ளது போன்று இருந்தது. சாதரணமாக இந்த விளைவை ஏற்படுத்த முடியாது. குறிப்பாக 47 மாடிகளை கொண்ட Building No. 7 வீழ்ந்த விதமும் அவ்வாறு தான். இது வெடிபொருட்களை கட்டிடத்தின் முக்கிய பகுதிகளில் வைத்து நிகழ்த்தப்பட்ட Structured Demolition மூலமாக தான் இது சாத்தியப்படும். மேலும் அந்த மூன்றாவது கட்டிடத்தை எந்த விமானமும் இடிக்கவுமில்லை. ஆனால், அந்த கட்டிடம் 6.5 வினாடிகளில் உள்நோக்கி வீழ்ந்தது. எரிந்து கொண்டிருந்த கட்டிடங்களில் மீட்புப் பணி மேற்கொண்டு வந்த தீயணைப்பு படையினர் கட்டிடம் இடிந்து வீழ்வதற்கு முன்னர் வெடி சப்தம் கேட்டதாக கூறினர்.
அமெரிக்க அரசாங்கம் அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதுள்ளது, அது இனியும் இந்த கேள்விகளை தள்ளி போட முடியாது.
நன்றி: கிரசென்ட் ஆன்லைன்