இரவுத் தொழுகையை தனித்து தொழுவது சிறந்ததா❓
கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை! வீடுகளில் தொழுவதே சிறந்தது.
பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள்.
அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.
இதை அறிந்த நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள்.
பின்னர் மக்களிடம் வந்து ,
உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே ! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள்.
ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது” என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 731, 6113, 7290)
”ஒருமுறை! நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம், நீங்கள் நடுநிலையாக இருங்கள். நீங்கள் உறுதியாக இருங்கள்.உங்களில் ஒருவர் தன் செயலால் தப்பித்துவிட முடியாது என அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்களும் (தப்பிக்க) முடியாதா?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். ”அல்லாஹ் தன் அருளால். கருணையால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர நானும் (தப்பிக்க)முடியாது”என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்:அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
”மல்யுத்தம் புரிவதால் ‘வீரன்’ என்பதில்லை. கோபம் ஏற்படும் சமயம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன்’ என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்:அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்).
”நிச்சயமாக! உலகம் இனிமையானதாகவும், செழுமையானதாகவும் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ், இதில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி உள்ளான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனப் பார்ப்பான். எனவே உலகை பயந்து கொள்ளுங்கள். மேலும் பெண்களைப் பயந்து கொள்ளுங்கள். பனீ இஸ்ரவேலர்களிடம் ஏற்பட்ட குழப்பத்தில் முதன்மையானது, பெண்கள் விஷயத்தில்தான் ஏற்பட்டது” என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)அறிவிக்கின்றார்கள்: முஸ்லிம்).
”இறைவா! உன்னிடம் நேர்வழியை, இறையச்சத்தை, பத்தினித்தனத்தை மற்றும் செல்வத்தையும் கேட்கின்றேன்” என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்).
‘நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுடன் நான் உட்கார்ந்திருந்தேன். இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்திருந்தது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. அப்போது நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள், ”ஒரு சொல்லை நான் அறிவேன். அதை அவன் கூறினால், அவனிடம் ஏற்பட்டுள்ள (கோபம்) அவனை விட்டும் போய்விடும். (அதாவது) ”அஊதுபில்லாஹி மினஷ்ஷய்தானிர் ரஜீம்” (வெறுக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறினால், அவன் அடைந்தது(கோபம்) போய் விடும்” என்று கூறினார்கள். உடனே நபித்தோழர், கோபப்பட்டவரிடம் சென்று, ”ஷைத்தானை விட்டும் பாதுகாப்பை அல்லாஹ்விடம் நீ தேடவேண்டும் என நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் ” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு சுரத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)