நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது’ என்றனர்.
தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.
தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.
மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் எந்த நோய் பற்றியும்
கவலைப் பட வேண்டாம்
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.
மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள “ஓமேகா 3′ என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, “ஒமேகா 3′ கிடைக்கிறது.
அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.
ஆண்களின் ஆயுளுக்கு மீன் துணைபுரியுமா?
ஜப்பானில் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் 1980 முதல் 1999 வரை 30 முதல் 64 வயது வரையாந 4070 ஆண்களையும் 5182 பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தினார். 20 ஆண்டுகளாக கண்காணித்த பின் ஆய்வறிக்கை தயாரித்தார். ஆண் ஒருவர் நாள்தோறும் ஒரு முறை மீன் உட்கொண்டால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விதிதத்தை 30 விழுக்காடு வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை மீன் உட்கொண்டால் உடம்புக்குத் தேவைப்படும் சத்து போதிய அளவு கிடைக்கலாம்.
பெண்களிடையே உயிரிழப்பு விகிதம் குறைவு என்பதால் அவர்கள் மீன் உட்கொள்வதன் விளைவு சரியாகத் தெரியவில்லை. மீன் இறைச்சி ரத்தக் கட்டியைத் தடுக்கலாம். இருதய நோய் மூளையில் ரத்தம் உறைவது முதலானவற்றைத் தடுக்கலாம்.
தடுக்கப்படும் நோய்கள்
ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.
கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள “ஒமேகா 3′ ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.
கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், “ஒமேகா 3′ யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.
இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.
மீ……..ன் பிரியாணி
எப்போ பார்த்தாலும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று ஒரே மாதிரி தான் நாம் செய்கிறோம் FOR CHANGE மீன் பிரியாணி செய்து பாருங்க அதன் சுவையோ தனி தான்
தேவையான பொருட்கள்
மீன் – 1 KG
பாசுமதி அரிசி – 1 KG
தக்காளி – 1/2 KG
பெ..வெங்கயம் – 1/4 KG
தயிர் – 1/2 CUP
ப-மிளகாய் – 5
நெய் – 1/4 CUP
எண்ணெய் – 1 CUP
எலுமிச்சம்பழம் – 2
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு,பட்டை,விழுது – 5 ஸ்பூன்
பிரிஞ்சி இலை – சிறிது
சோம்பு,கசகசா – 3 ஸ்பூன்
ஜாதிக்காய்,ஜாதிரம்,ஜாதிபத்ரி – 10 gm
முந்திரி,திராட்சை – 20 gm
ஏலக்காய் – 5
உப்பு – தேவைக்கு
கறிவேப்பிலை,புதினா,மல்லிதழை – தலா 1 கைப்பிடி
செய்முறை:-
மீன் தயாரிக்க
முதலில் மீனை சுத்தம் செய்து துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்து முள் நீக்கி பிசிறி வைக்கவும்.
நெய் சாதம் தயாரிக்க
பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு.பட்டை,கிராம்பு,ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.(குக்கரிலும் வைக்கலாம்)
அரைக்க வேண்டியவை
இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும்.
சோம்பு, கசகசா இரண்டையும் அரைக்கவும்.
ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.,
மசாலா தயாரிக்க
வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி.
அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி
தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.
முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.
பிரியாணி கலக்க
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.
அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.
இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.
பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.
அல்லது
சாதம் தனி மசாலா தனி என இரு வேறு பாத்திரத்தில் எடுத்து பரிமாறலாம்.