Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஷவ்வால் மாத ஆறு நோன்பு

Posted on September 19, 2009 by admin

ஷவ்வால் மாத ஆறு நோன்பு

       இப்னு ஹனீஃப்       

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் “எவர் ஒருவர் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்”. (ஆதாரம்: முஸ்லிம்)

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாமல், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றோம்.

இன்னும் சிலர் அறியாமையால் இது பெண்களுக்கு மட்டும் உரியது அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுகின்றனர் என்று கருதுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் உரியது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டு இந்த ரமளான் முதல் இந்த நோன்பையும் நோற்று அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்வோமாக.

ரமளான் முழுவதும் நோன்பு இருந்து தொழுகையை நிறைவேற்றி அதிகமதிகம் குர்ஆனை ஓதி நன்மைகள் பல செய்து ரமளான் முடிந்த மறுநாள் பெருநாள் தொழுகை தொழுதவுடன் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் பிற கேளிக்கையான காரியங்களிலும் நம்மை மூழ்கச் செய்யும் ஷைத்தானின் வலையில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்வோமாக.

நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் 10 நன்மைகள் எனும் அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மை என்பதுடன் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகளுக்கு 6×10 = 60 நோன்புகள் ஆக 300 + 60 = 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு இதில் இருக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது.

மேலும் இப்படி ஒவ்வொரு ஆண்டும் நாம் இதை நோற்று வந்தால் நாம் காலம் முழுவதும் நோன்பு நோற்றதைப் போல் ஆகும் என்றும் நபி மொழிகள் உள்ளன. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல் படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம ஸஹாபா பெருமக்கள் (நபித்தோழர்கள்) சரித்திரங்கள் சான்று பகன்று வருகின்றன

ஷவ்வால் மாத நோன்பினைப் பற்றி அறிந்து அதையும் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவு என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. ரமளான் முழுவதும் பேணுதலுடன் இருந்த முஸ்லிம்களில் பலர் ஷவ்வால் ஒன்றில் பெருநாளைக் கொண்டாடுவதற்கு என்று பொதுவாக பெருநாளுக்கு முந்தைய மாலை முதல் நள்ளிரவு வரை கடைத்தெருக்களில் நேரத்தைக் கழித்து விட்டு பெருநாள் அன்று பஜ்ர் தொழுகையும் தவறும் நிலையில் தூங்கத் துவங்கிவிடுகின்றனர். இது பெருநாள் கழித்து வரக்கூடிய மற்ற நாட்களிலும் தொடர்கிறது. அடுத்த ரமளான் வரை பலருக்கு இந்த நிலை நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

ரமளானில் தொழுகைக்கு அழைப்பு விடுத்த பாங்கோசைகள் இன்று ஏன் காதுகளில் விழாதது போல் செயல் படுகின்றோம்? அதானுக்கு முன்னர் பள்ளியில் கூடிய நாம் இன்று ஏன் அதை மறக்கடிக்கச் செய்யும் ஷைத்தானுடன் கூடும் விதமாக செயல் படுகின்றோம்? சுவனம் தான் இலட்சியமென்றால் ஏன் இந்த அலட்சியம்? இது தான் நம் மூலதனமா? இதுதான் நமது தக்வாவின் வெளிப்பாடா?

அல்லாஹ் நம்மை இது போன்ற நிலையில் இருந்து பாதுகாப்பானாக! எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாம் நமது ஈமான், தொழுகை, தக்வா போன்றவற்றினை விட்டுக் கொடுக்காமல் செயல் பட வேண்டும். இவற்றினை இலகுவாக்கும் அடிப்படையே தொழுகை என்பதில் சந்தேகம் ஏதும் உண்டா? ஒவ்வொரு தொழுகையையும் தவறாமல் இயன்ற வறை ஜமாத்துடன் தொழ முயல வேண்டும், வீடுகளிலும் நாம் சுன்னத்தான நபிலான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

ரமளான் முழுக்க ஓதிய குர்ஆனை ஷவ்வாலிலும் (பொருளுடன்) ஓதவேண்டும். ஷவ்வாலுக்குப் பின்னரும் தினமும் ஓத வேண்டும், ஷவ்வாலில் மீண்டும் பள்ளிகள் தொழுகையாளிகள் இன்றி காணப்படும் நிலையை நாம் தான் மாற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயல்பட்டால் நமக்கும் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கும் முழுமையாக பயனளிக்கும்.

ஒருவரிடம் தக்வா நிலைபெற்றிருப்பதன் வெளிப்பாடு அவருக்கும் அவருடைய சமுதாயத்திற்கும் பலனுடையதாக நலன் விளைவிப்பதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கையற்றவருக்கும், என்ன வேறுபாடு? அதேபோல இறைநம்பிக்கையுள்ள சமுதாயத்திற்கும் இறைநம்பிக்கையற்ற சமுதாயத்திற்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்ற நிலை தான் ஏற்படும்.

இதர மதத்தினர்களின் சில பெருநாள்கள் போல் அன்று மட்டும் சிறப்பித்துக் கொண்டாடி,சில நேரங்களில் அதன் திளைப்பில் தனக்கும் தன் சமுதாயத்திற்கும் உடல் ரீதியாக, பொருள் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பையும் இழப்பையும் குரோதத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமான ஒரு சிலர்களின் செயலுக்கும் பெருநாள் எனும் பெயரில் மதிமயங்கி செயல்படுவதிலிருந்தும் முஸ்லிம்களின் பெருநாளும் செயல்பாடும் எந்நேரமும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.

இதில் நாம் பார்க்க வேண்டியது நம் குடும்பத்தை, நம் உறவை, நம் கட்சி, இயக்கம், நம் மதம் அல்லது சமுதாயத்தை சார்ந்தோர் என்று அல்லாமல் யாரிடம் இது போன்ற சமூக சீர் கேடுகள் காணப்படினும் எச்சரித்துக் கண்டித்துச் சீர்திருத்த முனைய வேண்டும்.

ஒரு நாள் “பெருநாள்” எல்லாம் கூடும் என்று கண்டு கொள்ளாமல் இருத்தல் கூடாது, மனிதனுடைய 24 மணி நேர வாழ்க்கைக்கும் வழி வகுத்த இஸ்லாமிய மார்க்கம் இதற்கும் ஒரு வரம்பு விதித்துள்ளது, அதனுள் இருந்தே நாம் நமது மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் வெளிபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது.

ரமளானில் நாம் பெற்ற இந்த நோன்பும் பயிற்சியும் அதன் பலன்களும் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருப்பதை காண முடிகிறது. பெருநாளை மகிழ்வுடன் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து அனுமதிக்கப்பட்ட விதத்தில் பெருநாளைக் கொண்டாடிய உடன் பெருநாளுக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை நாம் நோற்பது மூலம் தொடர்ந்து இன்னும் மற்ற சுன்னத்தான திங்கள், வெள்ளி மற்றும் மாதம் மூன்று நோன்புகள் போன்ற நோன்புகளும் நோற்கும் ஆர்வம் ஏற்படலாம். அதேபோல் தொடர்ந்து குர்ஆன் ஓதுதல், தர்மங்கள் என்று எல்லா நல்ல அமல்களிலும் ஈடுபாடு அதிகரிக்கலாம். அல்லாஹ் நம்மை நன்மைகளின் பால் விரைந்தோடுபவர்களாகவும், தீமைகளை விட்டு வெருண்டோடுபவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக.

ரமளான் மூலம் நாம் பெற்ற “தக்வா” (இறையச்சம்) எனும் அருள் மிகுந்த விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்வோமாக!

அதனை (இறையச்சத்தை) நமது இறுதி மூச்சுவரை பேணிப் பாதுகாத்து ஈமானுடன் நபிவழியில் வாழ்ந்து வரவேண்டும் என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக மன உறுதியுடன் செயல்பட முனைவோமாக!

வல்ல இறைவன் அதற்கு நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்.

”Jazaakallaahu khairan” adirai ameen

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb