Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் – சல்லாபம்

Posted on September 7, 2009 by admin

o நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன?

o நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?

o பிறரது எச்சிலை விழுங்குவது சம்பந்தமான சட்டம்

o நோன்பிருக்கும் நிலையில் கணவனும் மனைவியும் சல்லாப விளையாட்டில் ஈடுபடுவது

o ரமளான் மாதத்தின் இரவில் உடலுறவு கொண்ட ஒருவர் (ஜனாபா), அதிகாலை நேரம் வரை குளிப்பதைப் பிற்படுத்தலாமா?

 

நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்துகொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன?

கேள்வி : நோன்பு வைத்திருக்கின்ற கணவன் நோன்பு வைத்திருக்கின்ற மனைவியிடம் நடந்து கொள்ளக் கூடிய அனுமதிக்கப்பட்டவைகள் யாவை?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ஷெய்க் இப்னு உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது அவர் இவ்வாறு பதில் கூறினார் :

கடமையான நோன்பு வைத்திருக்கின்ற ஒருவர், தன்னுடைய விந்து வெளியாகும் அளவுக்கு தன்னுடைய மனைவியிடம் (நெருக்கம் கொள்வதற்கு) அனுமதிக்கப்பட்டவரல்ல. உச்சகட்டத்தை அடைவதென்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு உடனடியாகவும், இன்னும் சில நபர்களுக்கு மெதுவாகவும், தங்களை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த நபிமொழியில், ”இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் மிகவும் வலிமையுள்ளவர்களாக இருந்தார்கள்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

சில நபர்களுக்கு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, விரைவாக விந்தினை வெளியேற்றி விடுவார்கள். இத்தகைய நபர்கள் தன்னுடைய மனைவியிடம் நெருக்கமாக இருக்கக் கூடாது, கடமையான நோன்பிருக்கும் நிலையில் அவளைத் தொடலாம், முத்தமிடலாம் இன்னும் இது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை அவர் மிகவும் அறிந்திருப்பாரென்றால், கடமையான நோன்பிருக்கும் நிலையில் அவன் அவளை முத்தமிடலாம், கட்டி அணைக்கலாம், ஆனால் உடலுறவு கொள்வதனின்றும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ரமளான் மாதத்தில் பகல் வேளைகளில் மனைவியிடம் உடலுறவு கொள்வது என்பது ஐந்து தவறுகளுக்கு இட்டுச் செல்லக் கூடியது :

o பாவமானது

o நோன்பை முறித்து விடும்

o மீதி இருக்கின்ற பகல் காலங்களில் எதனையும் உண்ணாதிருத்தல் வேண்டும். இஸ்லாமிய சட்ட வரையறைகளுக்குள் தடை செய்யப்படாத நிலையில் நோன்பை முறித்து விட்டாலும், அவர் மீதமிருக்கின்ற பகல் காலங்களில் உண்ணாதிருத்தல் வேண்டும். மீண்டும் அந்த நோன்பை மறுபடியும் நோற்க வேண்டும்.

o கடமையாக்கப்பட்டதொரு கடமையை அவர் மீறி விட்டதன் காரணமாக, அந்த நாளை மறுபடியும் நோன்பு நோற்றாக வேண்டும்.

o அதற்குப் பரிகாரமும் செய்ய வேண்டும், இது அவருக்கு மிகவும் சுமையானதொரு பரிகாரமுமாகும். அவர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு அவரால் செய்ய இயலாது எனில் அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும். அவ்வாறு அவரால் செய்ய இயலாது எனில், அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.

அது கடமையான நோன்பாக இருந்து, ரமளான் அல்லாத நாட்களில் அதனை நோற்கிறீர்கள் என்றால் – அதாவது ரமளானில் விடுபட்ட நோன்பு அல்லது பரிகாரமாக நோற்கப்படும் நோன்பு போன்றவைகள், இதனை முறித்து விட்டால் அது இரண்டு விஷயங்களைக் கொண்டு முடியும்:

அதாவது பாவமானதும், இன்னும் மீண்டும் அதனை நோற்க வேண்டியதும் அவசியமாகும். இன்னும் அது விருப்பத்துடன் நிறைவேற்றப்படும் நஃபிலான நோன்பாக இருந்தால், இன்னும் அதனை நோற்றிருக்கின்ற நிலையில் உடலுறவில் ஈடுபட்டு விட்டால், அதனை மீண்டும் நோற்க வேண்டியதில்லை, பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

 

நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?

கேள்வி : நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?

பதில் :  எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! 

ஆம், அனுமதிக்கப்பட்டதே. நோன்பிருக்கும் நிலையில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நெருக்கமாக இருந்து கொள்ள அனுமதியிருக்கின்றது, (அதாவது) அவர்கள் இருவரும்உடலுறவில் ஈடுபடாமலும் அல்லது விந்து வெளியாகாமலும் இருக்கும் வரையிலும் (இந்த அனுமதி பொருந்தும்). புகாரீ (1927) மற்றும் முஸ்லிம் (1106) ல் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்திருப்பதாவது, ”நோன்பிருக்கும் நிலையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை முத்திமிட்டார்கள்,

இன்னும் என்னுடன் நெருக்கமாக இருந்தார்கள். இன்னும் உங்கள் அனைவரிலும் அவர்கள்

தனது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் அதிகம் இயலுமானவர்களாக இருந்தார்கள்.”

அல் சிந்தி அவர்கள் கூறுகின்றார்கள் : மேற்கண்ட நபிமொழியில் இடம் பெற்றிருக்கின்ற வார்த்தையான ‘யுபாஷிர்” (அதன் மொழி பெயர்ப்பு நெருக்கமாக) என்பதன் அர்த்தமானது, மனைவியின் தோல் கணவனையும் மற்றும் கணவனின் தோல் மனைவியையும் ஒட்டிக் கொண்டு நெருக்கமாக இருப்பது, அதாவது அவனுடைய கன்னத்தை இவளுடைய கன்னத்தோடு கன்னம் வைத்திருப்பது, இன்னும் இது போன்றவைகள். இங்கே குறிப்பாக தெரியவருவது என்னவென்றால் தோலோடு தோல் ஒட்டியிருப்பது தானே ஒழிய, உடலுறவில் ஈடுபடுவதல்ல.

 

பிறரது எச்சிலை விழுங்குவது சம்பந்தமான சட்டம்

கேள்வி : நோன்பின் பொழுது ஒருவர் தன்னுடைய எச்சிலை தவிர்த்து, தன்னுடைய மனைவியினுடைய எச்சிலை விழுங்குவதன் சட்டம் என்ன?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!

மனைவியின் எச்சிலை விழுங்குவது சம்பந்தமாக, இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாவது: தன்னுடைய எச்சில் அல்லாத இன்னுமொருவரின் எச்சிலை விழுங்குவதைப் பொறுத்தவரை, அது நோன்பை முறித்து விடும், ஏனென்றால் அவரது வாயிலிருந்து ஊறக்கூடிய எச்சிலை அவர் விழுங்கவில்லை, மாறாக அவர் இன்னொரு பொருளை விழுங்குவதாக இருப்பது தான் காரணமாகும்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் அவர்களை முத்தமிட்டார்கள் என்றும், இன்னும் அவர்களது நாக்கை (பற்றி) உறிஞ்சினார்கள்” என்றும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பதாக ஒரு ஹதீஸ் அபூதாவூது-ல் வந்துள்ளது. (அபூ தாவூது, 2386), இது அபூதாவூது-ல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியானதல்ல. இன்னும் மேற்கண்ட ஹதீஸில் வரக்கூடிய ‘நாக்கை (பற்றி) உறிஞ்சினார்கள்” என்ற தொடர் பலவீனமானதாகும் என்று அல்பானி அவர்கள் தனது ‘ழயீஃப் சுனன் அபீ தாவூது’-ல் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு குதாமா அவர்கள், இதனை ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இதனை இருவழிகளில் நாம் அணுக வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

ஒன்று : இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதல்ல. அவர் கூறினார் :

நோன்பிருந்த நிலையில் (தனது மனைவியை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) முத்தமிட்டிருக்கலாம் என்றும், இன்னும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நாக்கை(ப் பற்றி) உறிஞ்சியிருக்கலாம் என்ற நிலையில் இந்த ஹதீஸை அணுக முடியும்.இரண்டு : மேலும் இந்த ஹதீஸ் (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

அவர்களின்) எச்சியை விழுங்கவில்லை, ஏனென்றால் அவர்களது நாக்கில் உள்ள ஈரப்பதம் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) வாய்க்குச் செல்லவில்லை. அல் முக்னீ 3-17. மேற்கண்ட முடிவுப்படி, தம்பதிகளில் ஒருவர் மற்றவரது எச்சிலை விழுங்கினாலும், நோன்பு முறிந்து விடாது.

ஆனால் இவ்வாறு செய்வது, பொதுவாகப் பார்க்குமிடத்து தம்பதிகளில் ஒருவர் மற்றவரது நாக்கைப் பற்றி உறிஞ்சும் நிலையானது அவர்களை உடலுறவின் பால் கொண்டு சென்றுவிடும், இன்னும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி முத்தமிட்டுக் கொள்வதும் உடலுறவின்பால் இட்டுச் சென்று விடும் என்றும் அதன் மூலம் விந்து வெளிப்பட்டு விடும் என்ற பயமிருக்குமென்றால், அது தடைசெய்யப்பட்டதாகும்.

ஆனால், அவர் தன்மீது நம்பிக்கை இருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்றிருந்தால், அதன் சரியான முடிவுஎன்னவென்றால் அவ்வாறு முத்தமிடுவதும், மனைவி அல்லது கணவன் – ஒருவர் மற்றவரின் நாக்கைப் பற்றி உறிஞ்சுவது அனுமதிக்கப்பட்டதாகும், ஆனால் இது மக்ரூஹ் என்ற நிலையில் இருக்கும், ஏனென்றால் ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் தனது மனைவியை முத்தமிட்டிருக்கின்றார்கள்” என்பதனாலாகும். (Al-Bukhaari, 1927; Muslim, 1106) Al-Mumti’ 6/433.

ஆனால், அவர் தனது நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக இத்தகைய செயல்கள் நோன்பின் இரவுக் காலங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நோன்பிருக்கும் நிலையில் கணவனும் மனைவியும் சல்லாப விளையாட்டில் ஈடுபடுவது

கேள்வி : நோன்பைப் பற்றிய கேள்வி இது, நோன்பிருக்கும் நிலையில் கணவனைப் பார்த்து ‘ஐ லவ் யு” என்று சொல்லலாமா, நோன்பிருக்கும் நிலையில் இவ்வாறு கூறுமாறு எனது கணவர் என்னைக் கேட்டுக் கொள்கின்றார், நான் இது அனுமதிக்கப்பட்டதல்ல என்று கூறினால், அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர் கூறுகின்றார்? இதன் சட்டம் என்ன?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!

ஒரு ஆண் தன்னுடைய மனைவியிடம் சல்லாபத்தில் ஈடுபடுவது ஒன்றும் தவறல்ல, அல்லது மனைவி கணவனிடமும் அவ்வாறு ஈடுபடுவதும் தவறல்ல, நோன்பிருக்கும் நிலையில் (ஐ லவ் யு என்று) இவ்வாறு கூறுவது, இருவரில் ஒருவர் உச்சகட்ட நிலைக்குச் செல்லும் ஆபத்து ஏற்படாத வரைக்கும் இது தடுக்கப்பட்டதல்ல.

இவ்வாறு விளையாடுவது உச்சகட்ட நிலைக்குத் தள்ளிச் செல்லும் என்றிருக்கும் பொழுது, ஈடுபடக் கூடிய இருவரில் ஒருவருக்கு அதிக காம உணர்வுகள் இருக்குமென்றால், அவ்வாறு விளையாடுவது விந்தணுவை வெளியேற்றக் காரணமாக அமைந்துவிடும் என்று பயப்படுவாரென்றால், அவ்வாறு செய்வது அவருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.

ஏனென்றால், நோன்பு முறிந்து விடும் ஆபத்தான நிலைக்கு அவர் சென்று விடுவதே இதன் காரணமாகும். மேலும், அவரிலிருந்து ‘மதீ” (உணர்ச்சி மேலீட்டால் வெளியாகக் கூடிய திரவம்) வெளியாகி விடும் என்ற அச்ச நிலை இருந்தாலும் மேற்கண்ட விதி பொருந்தும். (al-Sharh al-Mumti’, 6/390).

யாருக்கு உச்சகட்ட நிலையை அடைய மாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கின்றதோ அவர்களுக்கு இது ஆகுமானதாகும். (புகாரீ, 1927) முஸ்லிம் (1106), ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: ”இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் (தனது மனைவியர்களை) முத்தமிட்டும், இன்னும் தொட்டும் இருக்கின்றார்கள், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.”

ஸஹீஹ் முஸ்லிம் (1108) ல் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (தனது மனைவியை) நோன்பிருக்கும் மனிதன் முத்தமிட முடியுமா? என்று கேட்டதற்கு, ”உம்மு ஸலமா”வைக் கேளும் என்றார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவ்வாறே செய்தார்கள்” என்று உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பதில் கூறினார்கள்.

ஷெய்க் உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் : முத்தமிடுவதன்றி மற்ற காரணங்கள் ஒருவரை உடலுறவின்பால் இட்டுச் சென்று விடும், கட்டிப் பிடிப்பதும் இன்னும் இதைப் போன்றதும், முத்தமிடுவதற்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும், இவற்றிற்கிடையே வேறுபாடு இல்லை. (al-Sharh al-Mumti’, 6/434). மேற்கண்ட விளக்கங்களின்படி, உங்களது கணவரைப் பார்த்து, ‘ஐ லவ் யு” என்றோ அல்லது அவர் அவ்வாறு கூறுவது, நோன்பை எந்தவிதத்திலும் பாதிக்காது. இறைவன் மிக அறிந்தவன்.

 

ரமளான் மாதத்தின் இரவில் உடலுறவு கொண்ட ஒருவர் (ஜனாபா), அதிகாலை நேரம் வரை குளிப்பதைப் பிற்படுத்தலாமா?

கேள்வி : நோன்பு நேரத்து இரவில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்கின்ற ஒருவர், அதன் பொழுது புலர்கின்ற அதிகாலைப் பொழுது வரை குளிப்பதைப் பிற்படுத்த அனுமதி இருக்கின்றதா? அதைப் போலவே மாதாந்திரத் தீட்டு நீங்கிய பெண், அதன் பொழுது புலர்கின்ற அதிகாலைப் பொழுது வரை குளிப்பதைப் பிற்படுத்த அனுமதி இருக்கின்றதா?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!

அதிகாலை பஜ்ர் நேரத்திற்கு முன்பதாக தான் சுத்தமான நிலையில் இருப்பதாக ஒரு பெண் கருதினால், அவள் அந்த நாளைய நோன்பை நோற்க ஆரம்பிக்க வேண்டும், இன்னும் பொழுது புலரும் வரை அவள் குளிப்பதைப் பிற்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் கண்டிப்பாக அவள் சூரியன் உதயமாகும் வரை பிற்படுத்தலாகாது.

இதே சட்டம் ஜுனுபாளியாக, அதாவது தனது மனைவியுடன் உடலுறவு கொண்டவருக்கும் பொருந்தும், இன்னும் சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் தனது குளிப்பைப் பிற்படுத்தக் கூடாது, ஆண்களைப் பொறுத்தவரை – அவர்கள் குளித்து விட்டு அன்றைய ஃபஜ்ர் – அதிகாலைத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றுவதற்காக பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக தயாராகி விட வேண்டும். Fataawa al-Shaykh Ibn Baaz

Source : Islam Q&A (www.islam-qa.com)

”Jazaakallaahu khairan” Fatimatu Al-Zzahra

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 24 = 32

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb