Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் – அலங்காரம்

Posted on September 7, 2009 by admin

o ரமளானில் ஏற்படும் வாய் நாற்றத்தைப் போக்கிக் கொள்வது சம்பந்தமாக

o கண்மை, சுருமா, மருதாணி மற்றும் ஒப்பனைப் பொருட்களை (cosmetics) உபயோகப்படுத்துவது

o நோன்பிருக்கும் நிலையில் நகம் வெட்டுவது, அக்குல் மற்றும் மர்மஸ்தான முடிகளை அகற்றுவது

o நோன்பில் வாசனைத் திரவியங்கள் பூசிக் கொள்வது

o நோன்பாளியாக இருப்பவர் குளிக்கலாமா?

o நோன்பாளி தலைக்கு எண்ணெய் தேய்ப்பது

ரமளானில் ஏற்படும் வாய் நாற்றத்தைப் போக்கிக் கொள்வது

கேள்வி : வாய் நாற்றத்தைப் போக்குவதற்காகவே மருந்துக் கடைகளில் ஸ்பிரே வடிவில் வாசனைத் திரவம் விற்கப்படுகின்றது. வாய் துர்நாற்றத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒருவர் இத்தகைய ஸ்பிரேக்களை ரமளான் காலங்களில் உபயோகித்துக் கொள்ள முடியுமா?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!

நோன்பு நாட்களில் ஸ்பிரேக்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமான அளவில் ஊக்கப்படுத்திய மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்தலாமே. ஸ்பிரேக்களைப் பயன்படுத்தும் பொழுது அது தொண்டைக்குழிக்குள் போகாத வரைக்கும் ஆகுமானதே.

ஆனால், நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரக் கூடிய துர்நாற்றமானது, அவர் நோன்பிருக்கின்ற காரணத்தால் வரக் கூடியதே தவிர வெறுக்கக் கூடியதொன்றல்ல, இது இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் விளைவாகம். நபி மொழியில், ”நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரக் கூடிய துர்நாற்றமானது, அல்லாஹ்வின் முன்னிலையில் மஸ்க் என்று சொல்லக் கூடிய கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாக இருக்கின்றது”. அல்லாஹ் மிக அறிந்தவன். Al-Muntaqa min Fataawa Shaykh Saalih al-Fawzaan, vol. 3, p. 121.

 

கண்மை, சுருமா, மருதாணி மற்றும் ஒப்பனைப் பொருட்களை (cosmetics) உபயோகப்படுத்துவது

கேள்வி: நோன்பிருக்கும் நிலையில் பெண்கள் தங்களது கண்களுக்கு கண்மை மற்றும் சுருமா இடுவது, மருதாணி போன்ற ஒப்பனைப் பொருட்களை உபயோகிக்கலாமா? இந்தப் பொருட்கள் நோன்பினை முறித்து விடுமா அல்லது முறித்து விடாதா?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!

ஆண் அல்லது பெண் இருவரில் எவர் கண்மை இட்டாலும் அவரது நோன்பு முறிந்து விடாது, உலமாப் பெருமக்களின் மிகச் சிறந்த கருத்தாக இது இருக்கின்றது, ஆனால் அவர் நோன்பிருக்கக் கூடிய ஒருவர் இதனை இரவில் பயன்படுத்திக் கொள்வது விரும்பத்தக்கது. இதனைப் போலவே ஒருவர் தனது முகத்தை அழகுபடுத்திக் கொள்வதற்காக கிரீம்கள் பூசிக் கொள்வது, சோப் மற்றும் இது போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்வது, மற்றும் தோலுக்கு வெளியே – உடம்பில் பூசிக் கொள்ளக் கூடிய இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனைப் போலவே மருதாணி, ஒப்பனைப் பொருட்களும், இன்னும் அதனைப் போல உள்ளவையும், ஆனால் மேக்அப் செய்து கொள்வது முகத்தைப் பாதிக்கும் என்றிருந்தால் அதனைச் செய்து கொள்வது ஹராமாகும். – Sheikh Muhammed Salih Al-Munajjid (www.islam-qa.com)

 

நோன்பிருக்கும் நிலையில் நகம் வெட்டுவது, அக்குல் மற்றும் மர்மஸ்தான முடிகளை அகற்றுவது

கேள்வி: நோன்பிருக்கக் கூடிய ஒருவர் தனது நகத்தை வெட்டிக் கொள்வது, அக்குல் மற்றும் மர்மஸ்தான முடிகளை அகற்றிக் கொள்வது, நோன்பைப் பாதிக்கும் என்பது உண்மையா?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!

மேற்கண்ட செயல்கள் நோன்பிருக்கக் கூடிய ஒருவரின் மீதுள்ள கட்டாயக் கடமை போன்றதல்ல, ஆனால் மேற்கண்ட செயல்கள் நோன்பிற்கு எதிரான செயல்களுமல்ல. இதனைக் காட்டிலும் நோன்பிருக்கக் கூடிய ஒருவர் உண்பது, குடிப்பது மற்றும் உடலுறவு கொள்வது போன்றவற்றிலிருந்து தான் தவிர்ந்திருக்க வேண்டியது கட்டாயம். இன்னும் பாவமான காரியங்களிலிருந்தும், தீமையானவற்றிலிருந்தும், இன்னும் இதனைப் போல உள்ள புறம் பேசுதல் மற்றும் அவதூறானவற்றைப் பரப்புதல் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும், இவை நோன்பில் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பாதித்து விடும்.

ஆனால் நகத்தை வெட்டிக் கொள்வது மற்றும் அக்குல், மர்மஸ்தான முடிகளை அகற்றிக் கொள்வது என்பது மனிதனின் இயற்கையின் அடிப்படை (ஃபித்ரா-இயற்கைத் தன்மை)யில் அமைந்த, இன்னும் இறைவனது வழிகாட்டுதலின்படியும், ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் நாற்பது நாட்களுக்கு மேலாக அதனை வெட்டாமல் வளர விட்டு விடக் கூடாது. நகத்தை வெட்டுவதும், அக்குல் முடிகளைக் களைவதும் நோன்பினை எந்தவிதத்திலும் பாதிக்காது. அல்லாஹ் மிக அறிந்தவன்.. – Sheikh Muhammed Salih Al-Munajjid

 

நோன்பில் வாசனைத் திரவியங்கள் பூசிக் கொள்வது

கேள்வி: ரமளானின் பொழுது வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளலாமா?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ரமளானில் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வது, நோன்பை எந்தவிதத்திலும் பாதித்து விடாது. ஃபதாவா அல் லஜ்னா அல்-தாஇமா (ஃபதாவா – மார்க்கத் தீர்ப்புகளுக்கான சிறப்பு கமிட்டி) கூறுவதாவது: அனைத்து வித வாசனைகளும், பொதுவாக நறுமணங்களும், அவை அத்தர் அல்லது அது போன்றவைகளும், நோன்பை எந்தவிதத்திலும் பாதிக்காது அல்லது இன்னும் மற்ற நேரங்களில் அணிந்து கொண்டாலும், அதாவது அந்த நோன்பு கடமையான நோன்பாக இருந்தாலும் அல்லது கடமையல்லாத விரும்பி நோற்கப்படும் நஃபிலான நோன்புகளாக இருந்தாலும் சரி.

இந்தக் கமிட்டி மேலும் கூறுவதாவது: எந்தவிதமான வாசனைத் திரவியங்களை ரமளான் மாதத்து நோன்பு நாளில் எவர் அணிந்து கொண்டாலும் அது அவரது நோன்பை பாதிக்காது, ஆனால் அவர் அதன் நறுமணப் புகையை அல்லது கஸ்தூரி போன்ற வாசனைத் துகள்களை (மூக்கிற்கு அருகில் வைத்து) நுகர்ந்து உள்ளிழுத்தல் கூடாது. Fataawa al-Lajnah al-Daa’imah, 10/271

ஷேக் இப்னு உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: வாசனைத் திரவியங்களைப் பொறுத்தவரையில், நாளின் ஆரம்பத்திலும் மற்றும் நாளின் முடிவிலும் இட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட்டதே, அந்த வாசனைத்திரவியம் நறுமணப் பொருளாகவோ அல்லது எந்த நிலையில் இருந்தாலும் சரியே, நறுமணப் புகையை நுகர்வது அனுமதிக்கப்பட்டதல்ல ஏனென்றால் நறுமணத்தில் உள்ள துகள்களை (மூக்கினால் உறிஞ்சுவது மற்றும்) நுகர்வதன் காரணமாக அவை மூக்கின் வழியாக வயிற்றுக்குள் சென்று விடலாம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லகீத் இப்னு ஸப்ரா என்பவரிடம் கூறினார்கள் : ”உங்களது மூக்கினை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் நோன்பாளியாக இருக்கும்பட்சத்தில்”. அல்லாஹ் மிக அறிந்தவன். Fataawa Arkaan al-Islam, p. 46. 

நோன்பாளியாக இருப்பவர் குளிக்கலாமா?

கேள்வி: குளிப்பது நோன்பை முறிக்குமா?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! நோன்பிருக்கக் கூடியவர் குளிப்பதற்கு அனுமதி உள்ளது, அவ்வாறு செய்வது அவரது நோன்பை முறித்து விடாது. இப்னு குதாமா அல்-முக்னீ, 3-18 ல்: நோன்பாளி குளிப்பதில் தவறில்லை. புகாரீ (1926) மற்றும் முஸ்லிம் (1109) ஆகிய ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நபிமொழிகளினை ஆதாரமாகக் காட்டி, ஃபஜ்ருத் தொழுகைக்கான நேரம் வரவிருக்கின்றன நிலையில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவியுடன் உடலுறவு கொண்டு குளிப்புக் கடமையான ஜுனுபாளியாக (அசுத்தமாக) இருக்கக் கூடிய நிலையில் குளித்து விட்டு, நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அபூதாவூது (2365)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவர் கூறுவதாவது : ”நோன்பிருக்கும் நிலையில், தாகத்தின் காரணமாக அல்லது வெப்பத்தின் காரணமாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்”. அல்பானி அவர்கள் இந்த நபிமொழி ஸஹீஹ் – தரத்தில் அமைந்தது என்று கூறுகின்றார்கள். (ஸஹீஹ் அபூதாவூது).

அவ்ன் அல்-மாஃபூத் ல் :

வெப்பத்தின் கொடுமையிலிருந்து நிவாரணம் பெற விரும்புகின்ற நோன்பாளி தனது உடம்பு முழுவதிலும் தண்ணீரை ஊற்றிக் கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். இதுவே அநேக மார்க்க அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது, குளிப்பது என்பது கடமையானதா அல்லது கடமையானதல்லதா என்பதில் அவர்களுக்கிடையில் எந்தக் கருத்துவேறுபாடும் கிடையாது, இன்னும் அது பரிந்துரைக்கப்பட்டது அல்லது அனுமதிக்கப்பட்டது.

இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ”நோன்பு வைத்திருப்பவர் குளிப்பது” என்ற அத்தியாயத்தில்: நோன்பிருக்கும் நிலையில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் துணியை நனைத்து தன்மீது போட்டுக் கொண்டார்கள், இன்னும் அல் ஷாஃபி நோன்பிருக்கும் நிலையில் குளியளறையில் நுழைந்தார்கள்..,

இன்னும் அல் – ஹஸன் கூறுகின்றார்: நோன்பாளி தனது வாயைக் கொப்பளித்துக் கொள்வதும் இன்னும் தன்னைக்குளிர்ச்சியாக்கிக் கொள்வதிலும் எந்தத் தவறுமில்லை.

அல் – ஹாஃபிஸ் அவர்கள் கூறுவது: ”நோன்பாளி குளிப்பது” என்ற அத்தியாயத்தில் அனுமதிக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள்.

அல் ஸைன் இப்னு அல் முனீர் அவர்கள் கூறுவது: குளிப்பதானது சுன்னாவும், கடமையானதும் இன்னும் அனுமதிக்கப்பட்டதுமாகும், அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாகக் கூறப்படுகின்ற நபிமொழியில், நோன்பாளியாக இருக்கக் கூடியவர் குளியலறையில் நுழையக் கூடாது என்று வரக் கூடிய நபிமொழி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு இருப்பதாக அப்த் அல் ரஸ்ஸாக் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

நோன்பாளி தலைக்கு எண்ணெய் தேய்ப்பது

கேள்வி: ரமளானில் நோன்பு நோற்றிருக்கக் கூடியவர் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கக் கூடிய ஒருவர் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதில் தவறில்லை, அவரது நோன்பை அது பாதிக்காது. மார்க்கத் தீர்ப்புகளுக்கான கமிட்டி (10-253) யிடம்:

கண்மை அல்லது கிரீம் போன்றவற்றை நோன்பாளி பயன்படுத்தலாமா, அது அவரது நோன்பை முறிக்குமா அல்லது முறிக்காதா?

அதற்கு அவர்களது பதிலாவது: ரமளானில் நோன்பிருக்கக் கூடியவர் கண்ணுக்கு இடக்கூடிய சுருமா அல்லது கண்மை போன்றவற்றை இட்டுக் கொள்வது அவன் அல்லது அவளது நோன்பை முறிக்காது. ரமளான் மாதத்தில் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்பவர்களுக்கும் மேற்கண்ட சட்டம் பொருந்தும் – (நோன்பாளியின்) அவரது நோன்பைப் பாதிக்காது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

Source : Islam Q&A (www.islam-qa.com)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

49 − 39 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb