நன்மை பூக்கள் பூத்துக் குலுங்கும்
ரமளானே… வருக!
பூந் தாது வாரி வரும்…
சுவனமலை தென்றல் காற்றே….
வருக! வருக!
உன்
செந்தூரப் பூ இதழில் சிங்காரத்தேனெடுக்க
ரீங்காரமிடுகின்ற இறைநேசர்களின்
ஸ்ருங்கார மாதமிது….
இறைவா!
வறுமையின் வாரிசுகளுக்கு
வசந்தம் வழங்க…
செழிப்பின் சொந்தங்களை
வள்ளல் ஆக்க….
எங்கள் அசையா சொத்துக்களின்
அழுக்கு நீக்க..
நீ வாய்ப்பளித்த…
மாதமிது….
யா அல்லாஹ்!
நீ சொர்க்க வாசலை திறந்துவிட்டு..
சைத்தானை சிறையிலடைத்துவிட்டு…
நரக வாசலை மூடிவிட்டு..
கஜானா திறந்து விட்டு…
நிலவுக்கு ஆணையிடுகிறாய்…
உலகுக்குச் சொல்ல…
ஓ..வெண்ணிலாவே…
உன்னைக்காண…
உலகமே காத்திருக்கும் காரணத்தாலா…
நீ வெட்க்கப்பட்டு…
ஒழிந்து கொள்கிறாய்..
ஆனாலும்…..
உன் வெள்ளி முடியின்
மெல்லிய வெளிச்சம் போதும்….
எங்களுக்கு நீய்யத்து வைக்க….
நீ முழுமதியாய்
மெதுவாய் வா…
அது வரை…
நாங்கள்
அதிகம்…அதிகம்…
நன்மைகளை
வாரிக் கொள்கிறோம்…
உன்னை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
ரமளானே… வருக! வருக!
“Jazaakallaahu khairan” SA PEER MOHAMED