Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நோன்பின் மாண்புகளும், படிப்பினையும் (2)

Posted on August 21, 2009 by admin

முஹம்மத் அக்ரம்

அரபுமொழியில் ”இத்தகா” என்றால் பாவங்களிலிருந்து தப்பித்தல், அனைத்து பாவங்களிலிருந்தும் உடலையும்,உள்ளத்தையும் பாதுகாத்தல் என்ற பொருள் கொள்ளப்படுகின்றது. இத்தகைய நிலைப்பாடுதான் ”தக்வா” என்ற அழைக்கப்படுகிறது. அதற்குரிய பயிற்சியை வழங்குவதே நோன்பாக அமைகிறது. தவறு செய்யாமலும்,பாவங்கள் புரியாமலும் இருப்பதுதான் உண்மையான நோன்பு என இஸ்லாம் உணர்த்துகிறது.

இதனைத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; ”நோன்பாளி காலையிலிருந்து மாலைவரை இன்னொருவருக்கு தீங்கு செய்யாதவரை இறை வணக்கத்திலேயே உள்ளார். தீங்கிழைத்து விட்டாலோ நோன்பைப் பாழ்படுத்திவிட்டார்”.’உண்பதிலிருந்தும், குடிப்பதிலிருந்தும் விலகியிருப்பது நோன்பல்ல, தீய செயல்களிலிருந்து விலகி இருப்பதே நோன்பாகும்” எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிப்பிட்டார்கள்.

நோன்பின் உண்மையான இலக்கு ஒருவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்வதே என்பது இங்கு குறித்துக் காட்டப்படுகின்றது. நோன்பு கொடுக்கின்ற இன்னொரு முக்கிய பயன் மனிதன் சர்வசாதாரணமாகச் செய்கின்ற பொய்,புறம் போன்ற தவறுகளிலிருந்து அவனைப்பாதுகாப்பதாகும்.

‘நோன்பு நேரத்தில் பொய் சொல்வதிலிருந்தும், பிழையான செயல்களிலிருந்தும் ஒருவன் விலகா விட்டால் அத்தகையவர்கள் உண்பதையும்,குடிப்பதையும் பற்றி கவலைப்படுவதற்கில்லை”. 

”நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கும் கேடயமாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்.யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி எனறு அவர் சொல்லட்டும்.” (புஹாரி) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டார்கள்.

இதனால் ஒரு மனிதன் வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவான். ”மிருகநிலைக்கும் வானவர் நிலைக்கும் இடையிலுள்ள ஒரு தரத்திலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்” என்ற இஸ்லாத்தின் போதனைப்படி வானவர் நிலைக்கு மனிதன் உயர்த்தப்பட நோன்பு வழியமைக்கின்றது. இவ்வணக்கத்தைப் புறக்கணிக்கும் போது மிருக நிலைக்கு அவன் தாழ்ந்து விடுவான்.

எந்த நேரத்திலும் உணவு உட்கொணடிருப்பதும், உடலுக்குரிய ஆகாரங்களைப் பெற்றுக்கொண்டு இருப்பதும், இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதும் மிருகங்களின் பண்புகளாகும். ஆனால் வானவர்கள் உணபது பற்றியோ சிந்திக்காதவர்கள். நோனபு காலங்களில் உண்ணாமலும், பருகாமலும், இன்பம் அனுபவிக்காமலும் ஒரு மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் போது வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுகின்றான்.

அடிக்கடி மனித சிந்தனையிலே ஏற்படுகின்ற முரண்பாடுகள் மனித உறவுகளைப் பாதித்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திவிடக் கூடும். இந்நிலையில் மனிதன் உடனடியாக ஏற்படுகின்ற சில மன எழுச்சிகளுக்கு அடிமைப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மனித இனத்திலே அமைதி தோன்ற வழிபெறக்காது. இவ்வாறு அடிக்கடி கோபங்களுக்குள்ளாகும் மனோ நிலையிலிருந்து நோனபு மனிதனை பாதுகாக்கின்றது.ஒருவன் நோன்பாளியோடு சண்டையிட வேண்டி நேரிட்டால்தான் ஒரு நோன்பாளி எனக்கூறி சண்டைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகிவிடும்படி நபியவர்கள் கூறினார்கள்.

பொறுமை ஒரு மனிதனிடத்திலே கட்டாயம் காணப்பட வேண்டிய ஒரு பண்பாகும். ”இறை நம்பிக்கை கொண்டவாகள்! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” (அல்பகரா:153) என அல்குர்ஆன் பணிக்கின்றது. இதிலிருந்து இறைவனை நெருங்கச் செய்யும் ஒரு செயலாக பொறுமை அமைகின்றது என்பதைப் புரியலாம். அவ்வாறான பொறுமைக்கு நோன்பு வழிவகுக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை பின்வருமாறு விளக்கினார்கள்.

உடலின் ஜகாத் நோன்பு 

எல்லாப் பொருட்களுக்கும் உடலின் ஜகாத் நோன்பு உண்டு. உடலின் ஸகாத் நோன்பாகும். மேலும் நோன்பு பொறுமையின் அரைவாசியாகும். ஒரு நோன்பாளிக்கு கடுமையான பசி காணப்படுகின்றது போது முன்னால் பசியைத் தீர்த்துக் கொள்ள ருசியான ஆகாரம் இருந்தும், கடும் தாகத்தில் தவிக்கும் போது குளிரான நீர் அவன் முன்னால் இருந்தும், உடலிச்சைகளைத் தீர்த்துக் கொள்ள மனைவி பக்கத்திலிருந்தும் தன்னை அவன் தனது இறைவனுக்காகக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஓரிரண்டு நாட்களுக்கின்றி முப்பது நாட்களுக்கு இந்நிலை தொடர்கின்றது.

ஜெர்மனைச் சேர்ந்த ஒரு மனோதத்துவ அறிஞர் தனது நூலொன்றில் நோன்பு மனோ வலிமையைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த வழியென விளக்குகிறார்.சமூக ரீதியிலான தாக்கங்கள் மனித கமுதாயத்தை மனதப் பணபுகளோடு நோக்கிப் பார்க்கினறஉள நிலையை நோன்பு ஒருவனிடத்திலே தோற்றுவிக்கின்றது. பல கஷ்டங்களுக்கு ஒரு மனிதன் உள்ளாகியிருக்கலாம். தீர்க்க முடியாத சிக்கல்களில் குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம். கல்விப் பிலச்சினையாலும் ஒழுக்க ரீதியிலான பிரச்சினைகளாலும், பொருளாதார சிக்கல்களினாலும் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். இவ்வாறான கஷ்ட நிலைகளை அடுத்த மனிதர்கள் நீக்கி விடுவதற்குரிய பயிற்சியை நோன்பு வழங்குகின்றது.

 ஜெர்மனைச் சேர்ந்த ஒரு மனோதத்துவ அறிஞர் தனது நூலொன்றில் நோன்பு மனோ வலிமையைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த வழியென விளக்குகிறார்.சமூக ரீதியிலான தாக்கங்கள் மனித கமுதாயத்தை மனதப் பணபுகளோடு நோக்கிப் பார்க்கினற உள நிலையை நோன்பு ஒருவனிடத்திலே தோற்றுவிக்கின்றது. பல கஷ்டங்களுக்கு ஒரு மனிதன் உள்ளாகியிருக்கலாம். தீர்க்க முடியாத சிக்கல்களில் குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம். கல்விப் பிலச்சினையாலும் ஒழுக்க ரீதியிலான பிரச்சினைகளாலும், பொருளாதார சிக்கல்களினாலும் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். இவ்வாறான கஷ்ட நிலைகளை அடுத்த மனிதர்கள் நீக்கி விடுவதற்குரிய பயிற்சியை நோன்பு வழங்குகின்றது.

தினமும் வயிறுநிறையப் புசிக்கிறவன் நோன்பு காலங்களில் பசித்திருக்கின்ற போது வறுமைநிலைக்கு உட்பட்டவர்களது கஷ்டங்களை உணருவான். தான் ஒரு மாதகாலம் இவ்வளவு சிரமப்பட்டு பசித்திருப்பதே கடினமானது என எண்ணுகின்ற போது பன்னிரெண்டு மாதங்களாக பசித்திருப்போர் பற்றி ஒரு முறை அவனால் நோக்கிப்பார்க்க முடிகிறது. இதனால் வாரி வழங்க வேண்டுமென்ற உணர்வை அம்மனிதனிடத்திலே நோன்பு ஏற்படுத்துகின்றது. பொருளாதார ரீதியில் மனிதர்கள் வரவு செலவு விடயங்களைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்ற போது கடன்பட வேண்டிய நிலையோ, வட்டிக்குப் பணம் பெற வேண்டிய நிலையோ கொள்ளையடிக்க வேண்டிய நிலையோ உருவாகலாம். தனது வரவுக்கேற்ப செலவுகளை அமைத்துக் கொள்ளும் மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறான பிழையான முடிவுகளுக்கு ஒரு போதும் வரமாட்டான்.

அத்தகைய லௌகீக ரீதியான பயிற்சியையும் நோன்பு வழங்குகின்றது. எளிமையான முறையில் உண்கின்ற,உடுக்கின்ற, பயணங்களை அமைத்துக் கொள்கின்ற பயிற்சியை நோன்பு வழங்குகிறது. நோன்பு மனிதனின் உள்ளத்தில் தாராளத்தன்மையை வளர்த்து விடுகின்றது. அள்ளிக் கொடுக்க வேண்டுமென்ற உணர்வை அது ஓவ்வொருவரிடத்திலும் வளர்க்கின்றது.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களில் மிகவும் சிறந்த கொடைவள்ளலாக இருந்தார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரமழானில் தன்னை சந்திக்கதின்ற வேளை மிகவும் சிறந்த கொடை வள்ளலாக இருப்பார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரமழான் மாதம் முடியும் வரை ஒவ்வோர் இரவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு அல்குர்ஆனை முழுமையாக ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகளாரை சந்திக்கும் போது அவர்கள் படுவேகமாக வீசுகின்ற காற்றை விட விரைவாக தான தர்மம் செய்கின்ற வள்ளலாக இருப்பார்கள்.

வறுமை என்ற பயரங்கமான சமூக நோயிலிருந்து ஒருவனைக் காப்பதற்கு நோன்பு வழிவகுக்கின்றது . குப்ரிலிருந்தும் வறுமையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் என நபியவர்கள் பிரார்த்திப்பார்கள். ஒருவன் வறுமை நிலைககுள்ளாகும் போது கடன் காரான் ஆகின்றான்.ஒருவன் கடன் காரனாகிவிட்டால் பேசினால் பொய் பேசலாம். வாக்களித்தால் மாறு செய்யலாம் என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

இவ்வாறானோருக்கு உதவிகள் புரிந்து அவர்களையும் தம்மோடு இணைத்துச் செல்லும் பயிற்சியை நோன்பு வழங்குகிறது. எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்திலிருக்கும் ஒருவனுக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும் எவர் ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான்.ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதிவியாக இருக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்துக் காட்டினார்கள்.

இப்தார்

இப்தார் எனப்படுகின்ற துறத்தல் விடயத்தில் இஸ்லாம் கருணை உணர்வைத் தோற்றுவிக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். எவரொருவர் நோன்பாளியை நோனபு துறக்க வைத்தாரோ அவருக்கு நோன்பாளிக்கு கிடைப்பது போன்ற கூலி கிடைக்கும். என்றாலும் நோன்பாளியின் நற்கூலியில் எதுவும் குறைத்து விடடமாட்டாது.(திர்மிதி) பேரீத்தம் பழத் துண்டை தண்ணீரை ஒரு மனிதனுக்கு நோன்பு திறக்கக் கொடுப்பது கொண்டு தியாகத்தின் பண்புகளில் இஸ்லாம் அத்திவாரமிடுகிறது. அதற்கு பின்னால் அவன் உணவு உடைகள் என்பவற்றை மனிதனுக்கு வழங்கும் நிலைக்கு மாறிவிடுவான். பின்னர் தனது ஸகாத் பணத்தை எளியவர்களுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவோ வருமானம் பெறக்கூடிய முயற்சிகளில் பயன்படுத்துவதற்கோ வழங்கிவிடுகிறான்.

ஃபித்ரா

நோன்பு நோற்று முடிந்து பெருநாளைக் கொண்டாடு முன்னர் மனித சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக பித்ரா என்ற கடமையினை நிறைவேற்றுகிறான். இவ்வாறான பயிற்சிகளால் மனித சமுதாயத்தின் மீது ஒருவித கருணை உணர்வேற்படுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்தும் பொறுப்பை ஒரு மனிதன் அல்குர் ஆனிடம் கொடுத்து விட வேண்டுமென்ற நிலையையும் நோன்பு ஏற்படுத்திவிடுகிறது. நோன்பு காலங்களில் ஒரு மனிதன் கூடுதவான அளவில் பல்வேறு நபிலான தொழுகைகளைத் தொழுது வருவான். அவற்றில் பலமுறை அல்குர்ஆனை ஓதக்கூடிய நிலை ஏற்படுகிறது.அதுதவிர வேறு நேரங்களிலும் அல்குர்ஆனை அவன் படிப்பான்.

இதனால் உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது. அவற்றில் எதிர் கொள்ளப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற தடுமாற்ற நிலைகளிலிருந்து மீட்சி பெறுகின்றான். அரசியலிலும்,பொருளியலிலும்,ஒழுக்கவியலிலும் சமூக ஒழுங்கமைப்பிலும், குடும்ப வாழ்விலும், வர்த்தக கொடுக்கல் வாங்கல் முயற்சிகளிலும் அல்குர்ஆனே ஒரு மேலான வழிகாட்டியாக அமைகின்றது என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்கு நோன்பு பயிற்சியளிக்கிள்றது.

உலகப் பொருட்கள் அனைத்தின் மீதும் ஒருவகைகக் கவர்ச்சியும் ஆசையும் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விடுவது இயல்பானது. இதனால் உலக இன்பங்களில் மூழ்கிக் கிடக்க வெண்டுமென்ற எண்ணம் அவனிலே ஏற்படும் போது அவன் சடவாதியாக மாறுவான். அந்நிலையிலிருந்து அவனைமாற்றி விட்டால் மட்டுமே மரணத்துக்குப் பின்னால் உள்ள வாழ்க்கைக்கு உலக வாழ்க்கையைப் பயன்படுத்தும் நிலை எற்படும். இதற்காக நோன்பு ஒருபயிற்சியைக் கொடுக்கின்றது.

உலகப் பொருட்களும்,உலக இன்பங்களும் கண்முன்னே வைக்கப்படுகின்ற போதும் அவனை எல்லாவற்றையும் தான் மட்டுமே அனுபவித்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு மிகைத்து விடுகின்ற போதிலும் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிடக்கூடிய மனோ நிலையை நோன்பு ஒருவனிடத்திலே ஏற்படுத்துகின்றது. இதனால் உலகக் கவர்சிசிகளிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான். இவ்வாறான மேலான பயிறச்சிகளை தொடர்ந்து முப்பது நாட்களுக்கு நோன்பு வழங்குகின்றது. வேறு எந்தவொரு வணக்கமும் நீண்டதொரு காலப்பகுதிக்கு கடமையாக்கப்படவில்லை. நோன்பின் பயன்பாடுகளும்,அது மனித வாழ்வை நெறிப்படுத்துகின்ற முறையும் வித்தியாசமாக அமைந்திருப்பதினால் முப்பது நாட்களுக்கு அவ்வாறானதொரு தொடர்ந்த பயிற்சி அவசியமாகின்றது. நோன்பில் மனிதர்களுக்காக முகஸ்துதிக்கு செய்யப்படுகின்ற செயல்கள் காணப்படாததனால் தான் ”மனிதனுடைய எல்லாச் செயல்களும் அவனுக்குரியவை நோன்பைத்தவிர அது எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என அல்லாஹ் கூறுகின்றான் .

இறைவா ! எங்கள் நோன்புகளை உன் திருப்திக்காகவே நோற்று நோன்பில் குரானுடான உறவு செழித்து எங்கள் வாழ்க்கையை ஈருலகிலும் செழிப்பாக்கி வைப்பாயாக !

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 64 = 67

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb