இந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் 160 மில்லியன் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகள் அரசு அங்கீகாரம் பெற்று வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.
அதே நேரம் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றும் இந்தத் தடுப்பூசி பற்றி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலின் தீவிரம் கருதியே இதனைப் பதிவிடுகிறேன்.
இந்தத் தடுப்பூசியானது குல்லன் பாரி சிண்ட்ரோம் Guillain-Barre Syndrome (GBS), என்ற கொடிய நரம்பு நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அது.
இந்த நோயானது நரம்புகளின் உறையைத் தாக்கி தசைகளை செயலிழக்கச்செய்து பின் நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்கியவர்களுக்கு முதலில் காலும், கையும் பாதிக்கப்படும்.பின்னர் மூச்சடைப்பு வந்து வெண்டிலேட்டரில் செயற்கை மூச்சு அளிக்கப்படும்.
இதே போன்ற தடுப்பூசி 1976 ல் உபயோகப்படுத்தப்பட்டபோது
1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.
2.500 பேருக்கு GBS தாக்கியது.3. GBS உருவாகுவது 8 மடங்கு அதிகரித்தது.
தற்போது இந்ததடுப்பூசியானது தேவையான அளவு சோதிக்கப்படவில்லை என்று தெரிகிறது, குறிப்பாகக் குழந்தைகளில்.
அதே நேரம் 13 மில்லியன் மக்களுக்கு இந்த அக்டோபரில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.The British Neurological Surveillance Unit (BNSU) என்ற நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.
மேலும் தற்போது இந்தத்தடுப்புமருந்தில் ஸ்குவாலின் என்ற நொதி சேர்க்கப்படுகிறது. அது என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்று ஒரு பிரபல தடுப்பூசி விஞ்ஞானி கூறியுள்ளார்.
இந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.
ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில், ஊரில் தடுப்பூசி போட வருகிறார்கள் என்றாலே மக்கள் ஓடி ஒளிவார்கள். தற்போதும் அந்த நிலைதான் வந்துள்ளதா?