[ முஹம்மது அலீ ஜின்னா, கூட்டு அதிகார ஆட்சி முறையை விரும்பினார். அதை மகாத்மா காந்தியும் கூட ஏற்றுக் கொண்டார். ஆனால் நேருவுக்கு இதில் உடன்பாடு கிடையாது.
நேருவுக்கு பதிலாக, மகாத்மா காந்தி, ராஜாஜி அல்லது ஆசாத் ஆகியோர் இது குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் ஒருங்கிணைந்த இந்தியாவை நாம் அடைந்திருப்போம்.
முஹம்மது அலீ ஜின்னாவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கிடையாது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது. அவருக்கு காங்கிரசின் கொள்கைகளில்தான் கருத்து வேறுபாடு இருந்தது. மற்றபடி இந்துக்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருக்கவில்லை.]
( வாசகர்கள் கருத்து இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது )
புதுதில்லி: இந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முஹம்மது அலி ஜின்னா என்று கருத்து தெரிவித்துள்ளார் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர், பாகிஸ்தானை நிர்மாணித்தவர், அந்நாட்டின் தந்தை என்று பல பெருமைகளை பெற்றவர் மறைந்த ஜின்னா.
ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ள ”ஜின்னா-சுதந்திர இந்தியா பிரிவினை” என்ற நூல், தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியது:
மகாத்மா காந்தியால் உயர்ந்த மனிதர் என்று பாராட்டப்பட்டவர் ஜின்னா.
அவர் மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.
சுதந்திர இந்தியாவை பிரிவினைப்படுத்தியவர் ஜின்னா என்ற தவறான கருத்துகள் இன்னமும் இருக்கின்றன.
அதைபோலவே இந்துக்களுக்கு அவர் எதிரானவர் என்ற தவறான எண்ணமும் உள்ளது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது.
அவர் மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். மிகச் சிறந்த இந்தியர்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, உயர் அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியாவில் அமையவேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவர் விரும்பிய இந்தியாவாகவும் இருந்தது.
ஆனால் முஹம்மது அலீ ஜின்னா, கூட்டு அதிகார ஆட்சி முறையை விரும்பினார். அதை மகாத்மா காந்தியும் கூட ஏற்றுக் கொண்டார். ஆனால் நேருவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் 1947ம் ஆண்டு வரை நேரு இதே நிலையைத்தான் கொண்டிருந்தார்.
அப்போது காங்கிரஸ் மட்டும் கூட்டு அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சி முறைக்கு ஒப்புக் கொண்டிருந்தால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை நாம் அடைந்திருப்போம்.
ஆனால் ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரச்சினையே ஏற்பட்டது.
நேருவுக்கு பதிலாக, மகாத்மா காந்தி, ராஜாஜி அல்லது ஆசாத் ஆகியோர் இது குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் ஒருங்கிணைந்த இந்தியாவை நாம் அடைந்திருப்போம் என்றே நான் நம்புகிறேன்.
முஹம்மது அலீ ஜின்னாவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கிடையாது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது. அவருக்கு காங்கிரசின் கொள்கைகளில்தான் கருத்து வேறுபாடு இருந்தது. மற்றபடி இந்துக்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருக்கவில்லை.
எனவே, பிரிவினையை ஏற்படுத்திய வில்லனாக முஹம்மது அலீ ஜின்னாவை கருதக் கூடாது. தவிர, பிரிவினைக்கான முதன்மையான காரண கர்த்தாவும் அவர் அல்ல. மேற்கண்டவாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரிவினை கோரினார் ஜின்னா.
பிரிவினையை அவர் கோரினாலும் மகாத்மா காந்தி, ராஜாஜி, மெற்லானா அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களால் நிறைவாக முடிவு செய்யப்பட்டே பிரிவினை அளிக்கப்பட்டது.
பிரிவினையின்போது இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் அன்னியர்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த மன வலியுடன் இதை தாங்கி கொண்டனர். இருப்பினும், இந்தியாவின் ஒற்றுமைக்காக அவர்கள் குறிப்பிடும்படியாக செயல்பட்டனர் என்றார்.
“ஜின்னா பற்றிய கருத்துகள் என்னுடைய சொந்த கருத்துகள் தான். கட்சியின் கருத்து அல்ல. ஜின்னாவை பற்றிய நூலை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நான் எழுதவில்லை.
இந்தியனாக இருந்தே எழுதியுள்ளேன். இது எனது கட்சியின் ஆவணமல்ல.
நான் இவ்வாறு புத்தகம் வெளியிடுவது கட்சிக்கு தெரியும்’ என்றார் ஜஸ்வந்த் சிங.
இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேருவும், காங்கிரசும்தான் முக்கிய காரணம் என்று ஜஸ்வந்த் சிங் கூறியிருப்பதால் புதிய அரசியல் சர்ச்சை உருவாகி இருக்கிறது.
வாசகர்கள் கருத்து
ஜஸ்வந்த் சிங் சொல்வதும் அத்வானி சொன்னதும் உண்மையே. ஜின்னா பாகிஸ்தான் பிரிவினையை விரும்பவில்லை. ஒரு கட்டத்தில், பிரிவினையை தான் விரும்பவில்லை என்பதை முஸ்லீம்களுக்கு உணர்த்தியபோது அவருக்கு எதிர்ப்பு கிளம்பவே, அவர் அரசியலிருந்து விலகி தன் வக்கீல் தொழிலை தொடர இங்லாந்திற்கு போய்விட்டார். அங்கு அவர் ஆங்கிலேயர்களல் மூளை சலவை செய்ய்யப்பட்டு, பிரதம மந்திரி ஆசை ஊட்டப்பட்டு, மீண்டும் இந்திய அரசியலில் ஈடுபட்டு பிரிவினைவாதத்தை தொடங்கினார். அது அவர் தவறுதான் என்றலும் அதற்கு காரணம் ஆங்கிலேயர்களே ஆவர். 1857 எழுச்சியிலிருந்தே நானா சாகிப்பும் மற்ற சில முஸ்லிம் தலைவர்களும் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை உண்ர்தி ஆங்கிலேயருக்கு எதிராக போர்கொடி தூக்கினார்கள். ஆனால் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியே வெற்றி கண்டது. உண்மையை புரிந்துக்கொள்ளாமல் சில ஹிந்து முஸ்லிம் குழுக்கள் இன்னமும் விரோத மனப்பான்மையுடன் செயல் படுகிறார்கள் என்பது வருந்ததக்கது.
தினமணி வாசகர்: கே.வி.கிருஷ்ணசமி
பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணம் நெருதான். காந்தியின் சொல்லை கேட்காமல் நானே பிரதமராக இருப்பேன் என்ற பிடிவாதம்தான் முக்கிய காரணம். காந்தியை சுட்டு படுகொலை செய்த ஆர். எஸ். எஸ்-தான் இந்து முஸ்லிம் கலவரத்திற்கு முக்கிய காரணம். ஆனால் காந்தியை சுட்டஆர் எஸ் எஸ்- கொட்ச்சேக்கு ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இதுதான் இந்தியாவில் வெள்ளையனுக்கு கட்டிக்கோடுத்த கூட்டிக்கோடுத்த ஆர் எஸ் எஸ், பி ஜே பி, வி்எச்.பி மற்றும் அவர்களது கூட்டாலீகளின் நிலைப்பாடு. இதை சிந்தித்தால் ஒன்றுப்பட்டு இந்தியானாக வாழலாம். மோடி, அத்வானி, மோகன் போன்ற இரக்கமற்ற பிணந்தின்ணி அரக்கர்களின் பிடியிலிருந்து நம்மையும் நம் நாட்டையும் பாதுகாக்கலாம்..
தினமணி வாசகர்: பூமி நாதன்
நாமும், பாகிஸ்தானும் ,பங்காளிகள், இதை முதலில் நாம் நன்றாக தெரிந்து கொளவேண்டும், நாம் பாகிஸ்தானை விட ,அமெரிக்கா தான் நமக்கு பகையாளி,பங்காளிபாகிஸ்தானை விட பகையாளி அமெரிக்கா எந்த வகையிலும் நமக்கு உகன்தது அல்ல, .பாகிஸ்தானும் நாமும் ஒரே நாடாக இருந்ததை ,இந்த வெள்ளையர்கள், தன்னுடைய சுரண்டல் கொள்கையை நிலை நிருத்த போட்ட மாஸ்டர் பிளான் தான்,ஹிந்து & முஸ்லிம் கலவரம் ,ஹிந்து திவிரவாதி,முஸ்லிம் திவிரவாதி என பிரித்து நம்மை ஒன்றாக கூடாமல் ஆக்கி, இன்று வரை அந்நிய சுரண்டல் நாம் இரு நாட்டிலும் நடந்து வருகிறது, இதை நம் இரு நாட்டின் தலைவர்களும் ,தெரிந்து கொல்லாமல் இருப்பது தான் ,மிக மிக வேதனை இன்று வரை, நாம் இரு நாட்டின் மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள்,ஆகயால் தான் நம் டெல்லியில் பிறந்து வளர்ந்த, மிஸ்டர் பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார் ,அதேபோல் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்து வளர்ந்த மிஸ்டர் ,மன்மோகன் சிங் இந்தியாவில் பிரதமராக உள்ளார்,
தினமணி வாசகர்: அபூ அப்துர் ரஹ்மான்