பொய்யும் மோசடியும் மூஃமின்களுக்கு அறவே கூடாது
ஒருவர் உண்மையை தான் பேசவேண்டும். ஏனெனில் உண்மை இறுதியில் சொர்க்கத்திற்கு கொண்டு போய் விடுகிறது. அதோடு அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்.
இதை போல் ஒருவர் பொய் கூறினால். பொய்யானது நரகத்திற்கு கொண்டு போய்விடும். அதோடு அவன் அல்லாஹ்விடத்தில் நரகவாசி என்றும் எழுதப்பட்டு விடுவான்.
”உண்மையை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மையோ, நன்மையின் பால் கொண்டு செல்லும், நன்மையோ சொர்க்கத்திற்கு கொண்டு போகும்.
ஒருவர் உண்மையையே பேசிக் கொண்டே உண்மையை (வெளியாக்குவதற்கு) முயற்சி செய்து கொண்டு இருந்தால் (அவரைப்பற்றி) அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படும்.
(அதே போன்று) பொய்யையும் விட்டுவிடுமாறு உங்களை எச்சரிக்கிறேன். ஏனென்றால் நிச்சயமாக பொய் பாவங்களின் பக்கம் சேர்ந்து விடும். நிச்சயமாக பாவங்களோ மனிதனை நரகத்தில் சேர்த்து விடும்.
ஒரு மனிதன் பொய்யுரைத்துக் கொண்டே பொய்யை (வெளியீடுவதற்கு முயற்சித்தால்) அவரை பற்றி அல்லாஹ்விடம் பொய்யன் என்று எழுதபடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்¥த்ரளியல்லாஹு அன்ஹு,நூல்: புகாரி, முஸ்லிம்
மனிதனின் பண்பிற்கு மிகவும் எதிரானது மோசடியும் பொய்யும் தான். குறிப்பாக மூஃமின்களுக்கு இந்த இரு குணங்கள் அறவே கூடாது.
மோசடி பொய்யை தவிர ஏனைய அனைத்து இயல்பான குணத்தோடு ஒரு மூஃமீன் படைக்கப்பட்டுள்ளான். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவின் மூலம் கண்டுள்ளனர்.
”இரு மலக்குகள் என்னிடம் கனவில் வந்து எவரது நெற்றிப் பொட்டு உடைக்கப்பட்டதாக கண்டீரோ அவர் பொய்யராகும். அவர் வான முகட்டளவிற்கு பொய் பேசுவார். மறுமையில் இப்பொய்யின் காரணமாகவே தண்டிக்கப்படுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜீன்துப் நூல்: புகாரி
ஒருவன் ஒரு செய்தியை கேட்கிறான் அது நல்லதா, சரியா, தவறா என்று அறியாமல் அதை அப்படியே பிறரிடமும் கூறுகிறான். இவ்வாறு கூறுபவன் பொய் கூறுபவனை போன்றவனே பொய் கூறுபவன் எதை பற்றியும் கவலைபடுவதில்லை. எனவே இருவரும் சமமானவர்களே.
”தான் கேட்டது அனைத்தையும் அப்படியே பேசுவது ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார் அந்த வீட்டு பெண்மணி தன் குழந்தையை கைமூடி பேரிச்சம்பழம் இருக்கிறது வா என்று அழைத்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்கள் கையில் உண்மையிலேயே பேரிச்சம்பழம் இருந்தால் கூப்பிடுங்கள் இல்லை என்றால் இதையும் அல்லாஹ் பொய் என்று எழுதி விடுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.”
”Jazaakallaahu khairan” தமிழ் இஸ்லாம்.