Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பக்கவாதம் எப்போது வரும்? முகவாதம் தடுப்பது எப்படி?

Posted on August 14, 2009 by admin

பக்கவாதம் எப்போது வரும்? முகவாதம் தடுப்பது எப்படி?

நமது உடலமைப்பு பல ஆரோக்கியமான விஷயங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. நமது அன்றாட வாழ்க்கையில் வேலைப்பளு அதிகமான காரணத்தினால் நாம், நமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே நாம் பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. இவற்றில் பக்கவாதம் என்னும் நோயைப் பற்றிப் பார்ப்போம்.

பக்கவாதம்

மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம்.

மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர்.

மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர். எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் “ஐசெமிக் ஸ்டோரோக்”-னால்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக்கிலும் “திரம்போடிக்”(Thrombolytic) மற்றும் “எம்போலிக்”(Embolytic) என இரு வகைகள் உள்ளது. இந்த இருவகை பக்கவாதமும் ரத்த ஓட்டத் தடை, ரத்தம் உறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுவதாகும்.

மினி ஸ்ட்ரோக் தற்காலிகமாககக உண்டாகும் பக்கவாத நோயாகும். இந்தப் பிரச்சனைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாதத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் “ஐசெமிக் ஸ்டோரோக்” நிலை உண்டாகிவிடும்.

மீதமுள்ள 20 சதவீதத்தினர், “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்”கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளை பாதிப்பு

மூளையின் வலது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்க உறுப்புகளும், மூளையின் இடது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்க உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன.

பக்கவாதத்தின் அறிகுறிகள்

உடலின் ஒரு பகுதியில் எடை குறைவு ஏற்படுதல், சரியாகப் பேச முடியாமல் போகுதல், ஒரு பக்க கண்ணில் பார்வைக் கோளாறு, திடீரென உண்டாகும் தலைவலி, தலைசுற்றல் போன்றவை பக்கவாத நோயின் அறிகுறிகளாகும்.

இந்நோயால் வருடத்திற்கு சுமாராக 50,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் எல்லா வயதினரையும் தாக்கும் நிலை இருந்தாலும், வயதான முதியவர்களையே மிக அதிகமாக தாக்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும், அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடும் நிலையும், இதயத்துடிப்பு žராக இல்லாத போதும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயினை மாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, அதைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும். தற்காலிக பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அது நிரந்தர பக்கவாத நோயாக மாறிவிடும்.

முன்னேறி வரும் மருத்துவத்துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பது போல் பக்கவாத நோயைக் குணப்படுத்தவும் அநேக புதிய முறைகள் உள்ளன. எனவே, இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் தீர்வு நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது பக்கவாத நோய்க்கும் பொருந்தும். – டாக்டர். எம்.ஆர்.சிவக்குமார்.

முகவாதம் தடுப்பது எப்படி?

இரவில் படுக்கப்போகும் போது நமக்கு முகம் நன்றாக தான் இருந்திருக்கும். காலையில் எழுந்திருக்கும் போது முகம் ஒரு பக்கமாக கோணிக் கொண்டு போகும். காபி சாப்பிட்டால் வாய் ஒழுகும். ஒரு பக்கம் கண்ணை முழுவதுமாக மூட முடியாது. பயந்து போய் டாக்டரிடம் ஓடுவோம். அவர், “உங்களுக்கு முகவாதம் வந்துள்ளது” என்பார். முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்படைவதால் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும் அல்லது வலுவிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாதம். இந்த நோய்க்கு “பெல்ஸ் பால்சி” (bells palsy) என்று பெயர்.  

யாருக்கு வரும்?

பிறந்த குழந்தை முதல் பல் போன கிழவர் வரை எந்த வயதினருக்கும் இந்த நோய் வரலாம் என்றாலும், 40 வயதை கடந்தவர் களுக்கு முகவாதம் வரும் வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மிகை ரத்த கொழுப்பு, மூளையில் கட்டி ஆகிய நோய் உள்ளவர்களுக்கு முகவாதம் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட நான்கு மடங்கு அதிகம்.

எப்படி வருகிறது?

மூளையிலிருந்து வரும் ஏழாவது கபால நிரம்பு தான் முகத்தசைகளை இயக்குகிறது. மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப் படும் இந்த நரம்பு காதின் உட்புறம் இருக்கும் “முகக்குழாய்” எனும் மிகவும் குறுகிய பகுதியின் வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது. முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப் பிரிந்து முகத்தசைகள், கண்ணிர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது. இந்த நரம்பு பாதிக்கப்படும் போது இந்த தசைகளின் இயக்கங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

என்ன அறிகுறிகள்?

முதலில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் சிறிய வலி தோன்றும். இதைத் தொடர்ந்து முகத்தில் வலது அல்லது இடது பக்கக் கன்னத்தில் தொடுஉணர்வு குறையும். நாக்கில் சுவை தெரியாது. வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். உணவு சாப்பிட்டால் அல்லது பானங்கள் அருந்தினால் ஒழுகும். உணவை மெல்லும் போது அது பாதிக்கப்பட்ட பகுதியில் பல்லுக்கும், கன்னத்திற்கும் இடையில் தங்கிக் கொள்ளும். கண்ணிமைகள் தளர்ந்து, கண் பாதி திறந்த நலையில் இருக்கும். உறங்கும் போது கூட கண்ணை முழுவதுமாக மூட முடியாது. இதனால் கண்ணின் வெண்படலம் காய்ந்து கண் எரிச்சல் ஏற்படும். சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும்.

என்ன சிகிச்சை?

வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருவதால் வைரஸ் கிருமிகளை ஒழிக்கும் “ஏளோவீர்” மாத்திரைகள் இதற்குத் தரப்படும். இவற்றுடன் ஸ்டீராய்டு மருந்துகளும் தரப்படலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது “இயன்முறை மருத்துவம்” என்று அழைக்கப்படுகிற பிசியோதெரபி. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு மாதங்களுக்குள் முகவாதம் முழுவதுமாக குணமாகிவிடும்.

எப்படித் தடுப்பது?

மிகவும் குளிர்ச்சியான பானங்களை குடிக்காதீர்கள். ஐஸ்கிரீம் போன்றவற்றை அளவோடு சாப்பிடுங்கள். பேருந்து பயணங்களின் போது முகத்தில் குளிர்ந்த காற்று படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்னம்மை நோய்க்கு முதலிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள். காது மற்றும் தொண்டை நோய்களுக்கு உடனே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

– டாக்டர் கு. கணேசன்

Courtesy: Koodal.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

53 − 44 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb