பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ஃப்ளு) என்றால் என்ன?
ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.
பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.
மெக்சிகோ பன்றிப் பண்ணையில் பரவத் துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.
கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.
இப்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா?
இந்நோய் எப்படி பரவுகிறது?
ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது.
உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.
இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.
முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.
நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.
என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால்
என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).
வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.
நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.
உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும்.
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்
தொடர்ந்த தலை வலி
குளிருதல், நடுங்குதல்
இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
தலை சுற்றல் / மயக்கம்
பசியின்மை
உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
இடைவிடாத காய்ச்சல்
வயிற்று போக்கு
வாந்தி எடுத்தல்
மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்
உயிரிழப்பும் ஏற்படலாம்
குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?
தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
மூச்சு விட சிரமப் படுவார்கள்
உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்
தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்
அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்
தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்
தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்
இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?
“oselitamivir (Tamiflu (r))” அல்லது “zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.
வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது.
”Jazaakallaahu khairan” Mohammed Salahoudine