Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உணவுப் பொருட்களில் ஹலால் முத்திரை மோசடி?!

Posted on July 18, 2009 by admin

சமீபத்தில் வளைகுடாவில் நிறைவுபெற்ற மூன்று நாள் ஹலால் எக்ஸ்போ 2008 கண்காட்சியின் போது 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை இதில் பங்குபெற்ற நிறுவனங்கள் முடித்துள்ளன. “வளைகுடா நாடுகளில் மட்டுமே ஹலால் பொருள்களுக்கான சந்தை 2.08 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் அளவுக்கு இருக்கும் எனக் கருதப்படுகிறது”

நொறுக்குத் தீனிகள், சமையல் எண்ணெய்கள் பால் பொருட்கள், மால்ட் உணவுப்பொருட்கள், பழச்சாறுகள் மற்றும் ஹலால் முத்திரையிடப்பட்ட இறைச்சி வகைகள் முதலானவை இவற்றுள் அடக்கம்.

எனினும்,தற்போது நிலவிவரும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தமது இலாபத்தை அதிகரிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்லாமிய முறைப்படி அறுத்துப் பலியிடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் தனது இறைச்சிப் பொருட்களை ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்து வருகின்றன என்னும் அதிர்ச்சி தரும் செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

“அமீரகத்திலும் வளைகுடாவின் பிற நாடுகளிலும் உள்ள பேரங்காடிகளில் விற்கப்படும் ஹலால் முத்திரையிடப்பட்ட உணவுப் பொருட்கள் முஸ்லிம்கள் உண்ண ஆகுமானவையல்ல” என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுகிறார் ஜலால் யொஸ்ஸே என்ற ஹலால் முத்திரை உணவுப் பொருள் நிறுவனமொன்றின் அதிபர்.

“முஸ்லிம்கள் புசிக்கத் தகுதியற்ற (ஹலால் அல்லாத) உணவுப் பொருள்கள் வளைகுடாப்பகுதியில் எவ்விதச் சோதனையுமின்றி தடையில்லாமல் கிடைக்கின்றன” எனக் கூறிய அவர், “இவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வளைகுடா அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இவ்வகை உணவுகளுக்கு ஹலால் முத்திரை வழங்குவோரிடம் ஊழல் மிகுந்துள்ளதும் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். உண்மையில் கண்காணிப்பு எதையும் செய்யாமல் கையூட்டாகப் பணம்பெற்று ஹலால் முத்திரைப் பத்திரங்களை இந்நிறுவனங்களுக்கு இவர்கள் வழங்குவதாக அவர் கூறினார். “அமீரகம், சவூதி உள்பட வளைகுடா முஸ்லிம் நாடுகள் தங்களது கண்காணிப்பாளர்களை அனுப்பி இந்நிறுவனங்கள் ஹலால் முறையில் தான் உண்மையில் இறைச்சி தயாரிக்கின்றனவா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

இன்னொரு ஹலால் உணவுப்பொருட்கள் வழங்கு நிறுவனத்தின் உரிமையாளரானா மியான் ரியாஸ், “ஹலால் முறையில் பலியிடுவதாக எண்ணிக் கொண்டு பல நிறுவனங்கள் அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்யப்பட்ட ஒலித்துண்டை ஒலிக்கவிட்டு கில்லட்டின் போன்ற கருவிகள் மூலம் அறுத்துப் பலியிடுகின்றன. இவ்வாறு பலியிடும்போது 90 விழுக்காடு சரியாக அறுபடாததால் இன்னொருமுறை அறுப்புப் பிராணிகள் ஊழியர் ஒருவரால் மீண்டும் அறுபட நேருகிறது. இது அறுப்புப் பிராணிக்குக் கடும் வேதனை அளிப்பதால், ஹலாலான முறையிலான அறுவை விஷயத்தில் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு இது மாற்றமானதாகும்” என்று தெரிவித்தார்.

இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக ஹலால் முறையைப் பின்பற்றாத நிறுவன இறைச்சித் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை வழங்கப்படும் மோசடியும் நடப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத பங்கேற்பாளர் ஒருவர் கூறினார். இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பன்றியிறைச்சிக்குக் கூட ஹலால் முத்திரை வழங்கப்பட்டுள்ள வேதனை மிகுந்த நிகழ்வும் பரவலாக நடைபெறுவதாக அவர் கூறினார்.

ஹலால் உணவுபொருள் விஷயத்தில் வளைகுடா நாடுகள் மிகுந்த கண்டிப்புடன் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அங்காடிகளிலிருந்து வாங்கும் உணவு பொருட்களைப் பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பது கிடையாது. புதிதாக வெளியாகியிருக்கும் இத்தகவல் முஸ்லிம்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடாக்களில் கோழி இறைச்சி என்பது மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படும் உணவு பொருளாகும்.. முஸ்லிம்கள் சாதாரணமாக இதற்கு sadia என்ற பிரேசில் நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியையே பயன்படுத்துகின்றனர். இதுவும் ஹலால் முத்திரை உடையதே. ஆனால் இதே கம்பெனி பன்றி இறைச்சியையும் உற்பத்தி செய்து வருவது பலருக்குத் தெரியாத விஷயமாகும்.

பன்றி இறைச்சியை விற்பனை செய்பவன் நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படிகளைப் பேணுவான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மிக வெளிப்படையாக பன்றி இறைச்சியையும் உற்பத்தி செய்து வருபவனின் மற்ற உணவு பொருட்கள் ஹலாலானவை தான் என்று நம்புவதற்கு(ஹலால் முத்திரை இருந்தாலும்) எந்தச் சாத்தியக் கூறும் இல்லை. எனவே சதியா சிக்கனை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அரபுகள் அதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. வளைகுடா வாழ் தமிழ் / இந்திய முஸ்லிம்களிடமும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அரபு தேசங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலொழிய இந்நிலை மாறாது. இல்லையென்றால், ஹலால் என நினைத்து ஹராமான உணவுகளை உண்ண வைத்த பெருங்குற்றம் அவர்களையே சாரும்.

”Jazaakallaahu khairan” satyamargam.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 18 = 26

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb