இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம்.
மாறாக, அன்று முதல் இன்று வரை இனிமேல் காலங்கள் உள்ளவரை வாழ்ந்த- வாழ்கின்ற- இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்- எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் – வணக்க வழிபாடுகள் அனைத்துமே, இறைவனால் திருமறை குர்ஆனில் சொல்லப் பட்டவைகளும், இறுதி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொல்லப் பட்டவைகளும், செய்து காட்டப் பட்டவைகளும், அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.
திருமறையில் கூறப்படாதவைகளும், திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும், கொள்கை கோட்பாடுகளாக வணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
திருமறை நிறைவு பெற்ற பிறகு – திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பிறகு, வேறு யாராவது புதிய வணக்க வழிபாடுகளை புதுமையான செயல்களை உருவாக்கி ‘இவைகளும் இஸ்லாத்தில் உள்ளவை தான்” என்று கூறினால்- அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்கேமில்லை. அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும், மாபெரும் அறிஞர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதைச் செய்யும்படி ஏவினார்களோ, அதை மட்டுமே செய்ய வேண்டும். அதில் நம் வசதிக்குத் தகுந்தபடி குறைத்துக் கொள்வதும் குற்றம். நம் விருப்பத்திற் கேற்றபடி கூட்டிக்கொள்வதும் குற்றம்.
மேலும் அல்ல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்ற்றிக் கட்ட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்க்காரியத்த்தில் வேறு அபிப்ப்பிராயம் கொள்வ்வதற்கு, ஈமான் கொண்டுள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்ல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கு;கும் எவரேனும் மாறு செய்த்தால் நிச்ச்சயமாக அவர்கள் பகிரங்க்கமான வழிகேட்டிலேயே இருக்க்கிறார்கள். (அல் குர்ஆன் 33 36) என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வும், அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தராத அத்தனை பழக்கங்களும் மூடப்பழக்கங்களே. சொல்லித் தராத அத்தனை நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளே. இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், அநாச்சாரங்கள், பித்அத்துகள், நீக்கமற எங்கெங்கும் நிறைந்து விட்டன.
அல்லாஹ்வுக்கும், அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மாற்றமான காரியங்களைக் கண்டு பிடித்துக் களையெடுப்பது அவசியத்திலும் அவசியம். ஏனெனில், அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ”நீங்கள் சில பாவச் செயல்களைப் புரிகிறீர்கள், அவை உங்கள் பார்வையில் முடியை விட மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்) அவற்றை நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மூபிகாத் என்றே கருதி வந்தோம். (மூபிகாத் என்றால் பேரழிவை ஏற்படுத்துபவை என்று பொருள்)” ஆதாரம்: புகாரி