நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”நீ உன் சகோதரனுக்கு உதவிடு, அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி!”
ஒருவர் வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன்?”
அண்ணலார் கூறினார்கள்: ”கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்.”
அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு (புகாரி, முஸ்லிம்)