அதிகரித்து வரும் தலாக்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
சமீபத்தில் தமிழகத்தின் பிரபலமான மதரஸாவின் முதல்வர் ஒருவரிடம் பேசும்போது அதிர்ச்சியான செய்தி ஒன்றை சொன்னார்கள்: ”மதரஸாவிற்கு தீர்வு கேட்டு வரும் மக்கள் 100 பேர் எனில் அதில் 90 பேர் தலாக் சம்பந்தமாகவே ஃபத்வா கேட்க வருகிறார்கள். அதுவும் தற்சமயம் பெண் வீட்டார்கள் விவாகரத்து கேட்டு வருவது அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார்கள்.
கணவன் மனைவிக்குள் புரிந்துணர்வு நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. இல்லற வாழ்க்கையின் தத்துவமோ முக்கியத்துவமோ விளங்காத நிலையிலேயே பெரும்பாலும் அவர்கள் திருமணம் முடிக்கப்படுவதால் பலரது வாழ்வு அந்தரத்தில் தொங்குகின்ற நிலை ஏற்படுகிறது.
”அல்லாஹ்வின் அர்ஷை” நடுங்கச் செய்யக்கூடிய செயலை ஏதோ ”பஸ் டிக்கட்” வாங்குவது போல் மக்கள் எளிதாக ”கேட்கும்” நிலை மாற வேண்டும்.
இந்த இணையதளத்தில் பகுதியில் வெளியாகியுள்ள ஒவ்வொரு கட்டுரையும் இல்லறப்பொக்கிஷம் என்றே சொல்லலாம். படித்துப் பயன் பெறுங்கள். நோட்டீஸாகவோ நூலாவோ இலவசமாக அடித்து புது மணத் தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லா தம்பதிகளுக்கும் கொடுத்து இன்ஷா அல்லாஹ், ஈருலக நன்மையைப் பெறலாம்.
பாலியல் பிரச்சனைகளாலும் ஏராளமான ”தலாக்”குகள் நிகழ்கின்றன. எனவே பாலியல் விழிப்புணர்வுக்காவே “ஆண்-பெண் பாலியல்” என்று தனியாகவே ஒரு பகுதியை ஏற்படுத்தியுள்ளோம். படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Adm., www.nidur.info