மௌலவி அஸ்ஹர் ஸீலானி
துஆ ஓர் வணக்கம்:
وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
உங்கள் இறைவன் கூறுகிறான்: ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (காஃபிர் 40: 60).
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَأَ ( وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ) (ترمذي)
நுஃமான் இப்னு பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டேன் ”பிரார்த்தனை அது தான் வணக்கமாகும் எனக் கூறிவிட்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (திர்மிதி).
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
”நாம் உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்” (1: 4).
அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மற்றுமொரு ஆதரம்:
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ (186: 2).
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்: ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன், அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்
” (என்று கூறுவீராக.) (2: 186).
قال رسول الله صلى الله عليه وسلم: …. إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ … (ترمذي).
ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து சிறுவனே எனஅழைத்து சில உபதேசங்கள் செய்தார்கள். அதில் ஒன்று: ”நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள், நீ உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடு” நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. (திர்மிதி).
அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பவர்களுக்கு மறுப்பு:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِنْ كُنتُمْ صَادِقِينَ (194: 7)
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுக்குப் பதில் அளிக்கட்டும்! அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக்கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக்கூடியக் காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.
وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَا أَنفُسَهُمْ يَنصُرُونَ (197 : 7).
”அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெறமாட்டார்கள்.” (7: 197).
يَاأَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوْ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمْ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ (73: 22)
”மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது: எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்;லாஹ்;வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது, இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது, தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.” (அல்ஹஜ் 22: 73).
وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُمْ مُنكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ (20-22: 16).
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள், அவர்(களால் பிரார்த்திக்கப் படுபவர்)களும் படைக்கப்பட்டவர்கள் ஆவார்கள் அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர், மேலும், எப்பொழுது எழுப்பப் படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான், எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன – மேலும் அவர்கள் (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (16: 20-22).
இதே கருத்தில் வரும் இந்த வசனங்களையும் பார்வையிடவும்:
(மர்யம் 19: 48), (அல் அஹ்காஃப் 46: 4). (ஆஃபிர் 40: 66). (அஸ்ஸூமர் 39: 38). (பாஃதிர் 35: 40).
3295 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّه عَنْه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ (ترمذي, صحيح الجامع).
”எவன் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்” என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, (திர்மிதி, ஸஹீஹூல் ஜாமிஃ). அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவர்களிடம் பிரார்திப்பவனின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை இந்த ஹதீஸூடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
பிரார்த்தனையின் சிறப்புகள்:
عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ (ترمذي, صحيح الترغيب والترهيب).
”அல்லாஹ்வின் ஏற்பாட்டை பிரார்த்தனையைத் தவிர (வேறெதுவும்) மற்றாது. இன்னும் அது வாழ்நாளில் நன்மையைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தாது” என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், திர்மிதி).
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ (ترمذي, حسنه الألباني في صحيح الترغيب والترهيب).
”அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனையை விட சிறப்புமிக்கது வேறெதுவுமில்லை.” என நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி. ஷைக் அல்பானி (ரஹ்) இதை ஹஸன் தரத்திலுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள்.
பிரார்த்தனையின் ஒழுங்குகள்:
1) இஹ்லாஸான (தூய்மையான) எண்ணத்துடன் பிரார்த்திப்பது:
هُوَ الْحَيُّ لَا إِلَهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (65: 40)
”அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன், அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள், அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (ஆபிர் 40: 65).
فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوْا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ(65: 29).
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர், ஆனால், அவன் அவர்களை(ப் பத்திரமாக)க் கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணை வைக்கின்றனர். (அல் அன்கபூத் 29: 65).
2) உறுதியுடன் பிரார்த்திப்பது, பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படும் என்ற திடமான நம்பிக்கை:
قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (53)
”என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள்
யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.” (அஸ்ஸுமர் 39: 53).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ (ترمذي, وسلسلة الأحاديث الصحيحة للشيخ الألباني).
”பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படும் என்ற உறுதியுடன் அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள், அறிந்து கொள்ளுங்கள் பாராமுகமான, மறதியான உள்ளத்திலிருந்து பிரார்த்தனையை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (திர்மிதி).
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُولَنَّ أَحَدُكُمْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ لِيَعْزِمْ الْمَسْأَلَةَ فَإِنَّهُ لَا مُكْرِهَ لَهُ (البخاري, ومسلم, والسنن).
”உங்களில் எவரும் யா அல்லாஹ்! நீ நாடினால் என்னை மன்னித்து விடு! நீ நாடினால் எனக்கு அருள் புரி!
என பிரார்த்திக்க வேண்டாம். நீங்கள் உறுதியுடன் அவனிடம் கேளுங்கள், நிச்சயமாக அவனை நிர்பந்திபவன்
எவருமில்லை.” என நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புஹாரி, முஸ்லிம்).
3) அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் துதிப்பது கொண்டும் ஆரம்பித்தது நபியின் மீது ஸலவாத்துச் சொல்வது. இறுதியில் ஸலவாத்தைக் கொண்டே முடிப்பது.
4) தொடர்ச்சியாக பிரார்த்திப்பது, அவசரப்படாமல் இருப்பது.
5) உள்ளம் பிராhத்தனையில் ஈடுபாட்டுடன் இருப்பது.
6) இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திப்பது.
7) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்காமல் இருப்பது.
8.) தனக்கு, தனது குடும்பத்துக்கு, தனது குழந்தைகளுக்கு, தனது செல்வத்துக்கு எதிராக பிரார்த்திக்காமல் இருப்பது.
9) தாழ்ந்த குரலில் பணிவாக உள்ளச்சத்துடன் நன்மையை ஆதரவு வைத்தவராக, தண்டனையை அஞ்சியவராக பிரார்த்திப்பது.
10) நல்லறன்களில் அதிகம் ஈடுபடுவது அது பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுவதற்கு மிகப் பெரிய காரணமாகும்.
11) மூன்று முறை பிரார்த்திப்பது.
12) பிரார்த்தனையின் போது கைகளை உயர்த்துவது.
13) முடியுமாயின் பிரார்த்தனைக்கு முன் வுழுச் செய்து கொள்வது.
14) பிறருக்காக பிரார்த்திப்பதற்கு தன்னை முற்படுத்துவது.
15) அல்லாஹ்வின் உயரிய திருநாமங்களைக் கொண்டு பிரார்த்திப்பது. தான் செய்த நல்லமல்களை முற்படுத்தி பிரார்த்திப்பது.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ
بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ
وَجَفَّتْ الصُّحُفُ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
”Jazaakallaahu khairan” சுவனத் தென்றல்