மிக உயர்பதவியில் ஓர் முஸ்லிம் நியமனம்
குலாம் ஈ.வஹன்வாடி (வயது60) சோலிசிடர் ஜனரலாக இருந்த இவர் தற்போது இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான அட்டர்னி ஜனரல் பதவியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
60 ஆண்டுகால இந்திய வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில்(ஜனாதிபதி அல்லாத)ஓர் முஸ்லிம் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.
தி ஹிந்து நாளிதழுக்கு பேட்டியளித்த வஹன்வாடி,”இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு.மிகத்தாழ்மையுடன் இதனை ஏற்றுக்கொள்கிறேன். இந்தக்குழுவிலுள்ள வழக்கறிஞர்கள் சிறந்த பிரதிநிதித்துவத்தை ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் அரசிற்கு அளிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
இந்திய சோலிசிட்டர் ஜனராலாக 2004-இல் பதவியேற்ற வஹன்வாடி இந்திய அரசு சார்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் அரசியல் சட்டம், அரசுவருமானம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் பிரநிதியாக செயல்பட்டார். 1999-முதல் 2004 வரை மஹாராஷ்ட்ரா அரசின் அட்வகேட் ஜனரலாக பணியாற்றினார். மும்பையிலுள்ள சென்ட் சேவியர் கல்லூரியில் கலை மற்றும் மனிதநேயத்தில் இளங்கலை பட்டம் பெற்ற வஹன்வாடி சட்டப்படிப்பை பாம்பே பல்கலைகழத்தில் முடித்தார்.
இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வஹன்வாடி வாதாடியுள்ளார்.அதில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு, ராஜ்யசபாவிற்கு உறுப்பினர்க ள் தேர்ந்தெடுக்கப்படுவது சம்பந்தமாக மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தில் சட்டதிருத்தம் செய்யவேண்டும் என்று கூறி பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் தொடுத்த வழக்கு போன்றவற்றில் அரசு சார்பாக சிறப்பாக வாதாடியுள்ளார். மேலும் இவர் அரசியல் சட்டம், நிர்வாகம், வங்கியல், காப்பீடு, இறக்குமதி கொள்கை, சுங்கம் மற்றும் கலால்வரி, கம்பெனி சட்டம் போன்றவற்றில் மிகுந்த நிபுணத்துவம் உடையவர்.
சர்வதேச அளவிலும் வஹன்வாடி பணியாற்றியுள்ளார்.இனவெறியை தூண்டியதாக ஜிம்பாப்வேக்கு எதிராக தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டில் விசாரனை செய்வதற்காக ஜிம்பாப்வேயின் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்டீவன் மஜீடுடன் நியமனம் செய்யப்பட்டார்.
மேலும் இவர் ஆஸ்திரேலியாவுக்கு 2005-இல் சுற்றுபயணம் மேற்க்கொண்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மீது சாட்டப்பட்ட இனவெறி குற்றச்சாட்டை விசாரிக்கும் ஒரு நபர் குழுவில் நியமிக்கப்பட்டார்.