Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குர்ஆனில் பேசும் எறும்புகள்

Posted on June 1, 2009 by admin

குர்ஆனில் பேசும் எறும்புகள் 

நபி சுலைமானிடம் பேசிய எறும்பு 27:16-19 (نملة سليمان)

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ”எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது.” (அல்குர்ஆன் 27:18)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا

அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன் 27:19) என்று அருள்மறை கூறுகிறது.

எறும்பு பேசியது:

அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ”எறும்புகள் பேசியதாகவும்,அது கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான் (அலை) அவர்கள் சிரித்ததாகவும்” இங்கே கூறப்படுகிறது.

அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம்.

எறும்பும் அதன் வகைகளும்

எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த அறிவியலார் ”உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவை 90,000 க்கும் மேலிருக்கும் எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான் வாழ்கின்றன.

பாதை மாறாது திரும்பும் அதிசயம்

நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ,வழிகாட்டியோ தேவப்படுகிறது.

அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு தமது வசிப்பிடங் களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன. ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன் அமைத்துள்ளான். இங்கே அவன், எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.

துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து வருகின்றன.

காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.

அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்;றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆறு,குளம்,குட்டை,ஏரி,மரம்,கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி ? என சிந்திதாலே தலை சுற்றுகிறது.

கண்களில் திசைகாட்டும் கருவி

அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின் கண்களில் பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய அற்புதமான ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்கிறான்.

அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால் உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால் வடக்கு,தெற்கு என திசைகளை சரியாக அறிந்து கொள்கின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒளியின் குணநலன்களை மனிதன் அறிவதற்கு முன்னரே எறும்புகள் ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்திவருவது விந்தையிலும் விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத ஆற்றல் அல்லவா?

நோய்கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல்

மனிதன் தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்றஉயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில தடுப்பு முறைகளைக் கையாளுகின்றன. அந்த வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் தங்களின் கூடுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. எறும்புகள் தங்களின் உடலை மட்டுமல்ல,தங்களது வசிப்பிடத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும் போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான் எனபதை எண்ணி அவன் வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும் தஸ்பீஹ் செய்த வண்ணமுள்ளன என வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மட்டுமா? இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.

ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர்.

”கடந்தகாலங்களில் எறும்புகள் ஒன்றோடொன்று உரையாடிக்கொள்கின்றன.மிக நுட்பமான தகவல்களை பரிhறிக்கொளகின்றன” என்று குர்ஆன் கூறியபோது எள்ளி நகையாடியோர் ஏராளம்.”இவையெல்லாம் கற்பனைகள்”என பரிகாசம் செய்தனர். ஆனால், அண்மையில் எறும்புகளைப் பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள் மனிதனை வியக்கவைக்கின்றன.

விலங்குகள், பூச்சிகள்; ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தோர் ”எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின் வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர். அவை பின்வருமாறு :-

வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்!

1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.

2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப் போல் சீராக பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக் கவனித்துக் கொள்;கின்றன. மேலாளர்கள் (Managers),மேற்பார்வையாளர்கள் (Supervisors),தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள் (Foremen),உழைப்பாளர்கள் (Workers)என்று தனித்தனியாக துறைகளை (Departments)வகுத்துச் செயலாற்றுகின்றன.3. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும் மகிழ்ச்சியோடு (Chatting)அளவளாவிக் கொள்கின்றன.

4. தங்களுக்கிடையே மிகவும் நவீன முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.

5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி, பண்டமாற்றும் செய்து வருகின்றன.

6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.

7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.

8. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது, அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?

இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது

”குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்”என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

சிந்தித்துப்பார்க:கும் மக்களுக்கு அரிய படிப்பனை உள்ளது (குர்ஆன்)

”Jazaakallaahu khairan” albaqavi.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 52 = 62

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb