டாக்டர் முத்துக்குமார் (பிரபல அக்குபஞ்சர் நிபுணர்)
[ சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். ]
அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் நமது உடலுக்கு தேவையான உயிர்சக்தி நுரையீரலில் உருவாக்கப்பட்டு 2 மணி நேரத்துக்கு ஒரு நரம்பு வழி என 12 நரம்புத்தளங்களின் வழியாக தனது முழுச்சுற்றை ஒரு நாளைக்குள் முடிக்கின்றது.
இந்த உயிர்சத்தை தன்னிடத்தில் வாங்கி தனக்கு அடுத்துள்ளதிற்கு அனுப்பி வைப்பதற்காக உடலில் சுமார் 700 அக்குபஞ்சர் ஸ்தானங்கள் உள்ளன. இந்த உயிர் சக்தியின் ஓட்டம் தடைபடுவதால் நம் உடலில் சில பல உபாதைகள் வருகின்றன.
இந்த தடையை ஊசிகள் மூலம் அகற்றி மறுபடியும் உயிர் சக்தியின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தினால் அந்த உபாதைகள் நீங்கிவிடுகிறது. இதுவே அக்குபஞ்சர் வைத்திய முறையின் அடிப்படை.
அக்குபஞ்சர் வைத்தியமானது 65 வயதுக்கு மேல் உயிர் சக்தியின் வீரியம் தானாக குறைய தொடங்குவதால் 65 வயதுக்கு கீழ் யாரும் இந்த சிகிச்சைக்கு உட்படலாம்.
உணவுக்கட்டுப்பாடோ, பத்தியமோ கிடையாது. எந்த மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆகவே மருத்துவ செலவே இல்லை. நம்கண்களின் கருவிழி, நாக்கு இவைகளை வைத்தே நோயை கண்டு பிடித்து விடுவதால் எக்ஸ்ரே, ஸ்கேன் இவற்றுக்காக செலவு செய்ய தேவை இல்லை.
நம்மை அறியாமலேயே நம்முடைய வாழ்க்கையில் நாம் அக்குபஞ்சர் முறை ளை நமக்கு நாமே செய்து வருவது வியப்பில் ஆழ்த்துகிறது.
காலையில் எழுந்து வெளியே கிளம்பும் போது பிள்ளையார் கோவிலுக்கு போய் நம் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக் காரணங்கள் போடுவது, ஆசிரியர் மாணவனை காதைப்பிடித்து திருகுவது, தலையில் குட்டுவது, நமக்கு ஏதாவது ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வரவில்லை என்றால் பேனாவால் முன் நெற்றியில் அடித்துக் கொள்வது, காதுகளில் வளையம் போடுவது போன்ற அனைத்துமே அக்குபஞ்சர் முறைகள்தான்.
அக்குபஞ்சர் முறையில் நம் காதுகளில் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கான ஸ்தானங்கள் உள்ளன. நம் காதுகளை இழுக்கும்போது இந்த ஸ்தானங்கள் தூண்டப்பட்டு நம் உடல் வலிமை பெறுகிறது. காதை திருகும் போது தூண்டப்படுகிறது. தலையில் மட்டும் ஒரு ஸ்தானத்தில் 100 ஸ்தானங்கள் உள்ளன. ஆசிரியர் குட்டும் போது அனைத்தும் தூண்டப்படுகின்றன.
நம் முன் நெற்றியில் முக்கியமான ஸ்தானம் உள்ளது. பேனாவால் அதில் தட்டும் போது ஸ்தானம் தூண்டப்பட்டு மறந்து போன விஷயங்கள் நமக்கு ஞாபத்துக்கு வரும். காதில் கம்மல் உராய்வதால் கண் பார்வை பலப்படும்.
அக்குபஞ்சர் முறையில் ஏராளமான நோய்கள் குணமாகின்றன. முக்கியமாக நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்திவிடலாம். இது தவிர எளிதில் குணப்படுத்தக் கூடிய உபாதைகள் பற்றிய விவரம் வருமாறு.
உடல் பருமன் – உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி. 12 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கலாம்.
தலை முடி வளர – 20 நாட்கள் சிகிச்சை பெற்ற பின் தலை முடி வளர்ந்து விடும்.
முகச்சுருக்கம் நீங்க – முகத்தில் உள்ள சுருக்கங்கள் கன்னங்களில் தொய்வு, கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் நீக்குவது.
மூட்டு வலி – நாள்பட்ட மூட்டு வலியில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து!
நீரிழிவு நோய் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது போன்ற விஷயங்கள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்தவையே. உணவிருலிந்து பெறப்படும் சர்க்கரையை உடல் சேமித்து வைத்துக் கொள்ளாமல், தேவைக்கு அதிகமாக குளூக்கோஸின் அளவு இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, சிறுநீரகங்கள் அதனை சிறுநீரில் வெளியேற்றுவது நீரிழிவு ஆகும்.
நீரிழிவு நோயை இரண்டு விதமாகப் பிரித்துள்ளனர்; முதல்வகை (Diabetes mellitus-type 1) என்பது இன்சுலின் ஹார்மோனை மருந்தாகப் பயன்படுத்தினால் மட்டுமே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய நோய்.
இவ்விதம் அல்லாமல், இன்சுலின் மருந்தாகத் தேவைப்படாமல் மற்ற மருந்துகள் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கக் கூடிய நீரிழிவு நோயை இரண்டாம் வகை (Diabetes mellitus-type 2) என்பர். Type 1 நோயை insulin-depedent diabetes என்றும் type 2 நோயை insulin non-dependent diabetes என்றும் கூறுவர்.
வயதான அமெரிக்கர்களுள் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் type 2 நீரிழிவு (இதனை வயது வந்தோருக்குத் தொடங்கும் நீரிழிவு என்றும் கூறுவதுண்டு) நோயினால் துன்பப்படுகின்றனர்.
கணையத்தில் அமைந்துள்ள இன்சுலின் சுரக்கும் செல்கள் போதுமான அளவு இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யாததால், அல்லது உடலின் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பு (resistance) உடையனவாக ஆவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து கொண்டு போகிறது. இவ்விதம், சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரிப்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்குக் காரணமாகிறது.
மேலைநாட்டு மருந்துகளில் எதுவுமே type 2 நீரிழிவைக் குணப்படுத்த முடியாது; ஆனால், சிகிச்சைகள் நோயைக் கட்டுப்படுத்தி வாழ்நாளைச் சற்று அதிகரிக்க முடியும். பாரம்பரிய žன மருத்துவ முறையிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் கார்டீனியா (Gardenia) என்ற செடியின் பழங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட ரசாயனப் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். அது நீரிழிவு நோயின் மூல காரணத்தைத் தாக்குகிறது.
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பீராட்ஃபோர்டு லோவல் மற்றும் žன நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் சென்ஜயூ ஸாங் ஆகிய ஆராய்ச்சியாளர்களும், அவர்களின் குழுவினரும் uncoupling protein 2 (UCP2) எனப்படும் ஒரு நொதியின் செயல்பாட்டைத் தடை செய்து நிறுத்துகிற ஒரு கூட்டுப் பொருளைக் கண்டுபிடிக்க முனைந்தனர். (UCP2) என்னும் இந்த புரோட்டீன் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கிற செல்கள் இன்சுலினைச் சுரக்க விடாமல் குறுக்கிட்டுத் தடுத்துவிடுகிறது. மனிதர்களிலும், பிராணிகளிலும் நீரிழிவு உள்ளவர்களில் மஇட2 மிக அதிகமான அளவில் தோன்றும். UCP2 செயல்பாடு அதிகரிப்பது நீரிழிவு நோய் உண்டாவதற்கு ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது என நாங்கள் கருதுகிறோம்” என லோவெல் விளக்குகிறார்; “எனவே UCP2 –வைத் தடுக்கிற பொருளைக் கண்டுபிடிப்பது எங்கள் லட்சியம் ஆயிற்று” என்கிறார்.
மருத்துவத்தில் கார்டீனியா ஜாஸ்மினாய்டில் (Gardenia jasminoidis) பழத்தைப் பயன்படுத்திவதின் அடிப்படையில் இந்தப் பழத்தை நுணுக்கமாக ஆராயலாம் என்று ஸாங் ஆலோசனை கூறினார். கண்ணாடித் தட்டில் வளர்க்கப்பட்ட, சுண்டெலியின் கணைய செல்கள் மேற்கூறிய பழத்தினைப் பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் சேர்த்துச் சோதிக்கப்பட்டன. அவை இன்சுலினைச் சுரந்தன. “முதலில் நான் அந்த விளைவுகளைப் பார்த்தபோது என்னால் நம்பமுடியவில்லை” என்று லோவெல் நினைவு கூர்கிறார். அதன்பின் செய்யப்பட்ட பகுப்புகளில் அதற்குப் பொறுப்பான மூலக்கூறு பிரித்தெடுக்கப்பட்டது; அது ஜெனிபின் (genipin) என்பதாகும். புரோட்டீன்களைக் கட்டுப்படுத்தும் திறன் அதற்கு உண்டு என ஏற்கெனவே தெரிந்த பொருள் அது. சோதனைச் சாலையில், கணைய செல்கள், இரத்தத்தில் இருந்த குளூக்கோஸ’ன் அளவையும், இன்சுலின் அளவு குறைவாக இருப்பதையும் “அறிந்து கொள்ளும்” திறனை மீண்டும் பெறுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் ஜெனிபினைச் சேர்த்தது பலன் அளித்தது. நீரிழிவுக்கான சிகிச்சையில் கார்டீனியா பழம் மிகவும் பயனுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகும்
நன்றி: கூடல்.காம்