Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நீரிழிவு நோயை குணப்படுத்த…(2)

Posted on May 31, 2009 by admin

நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்யும்போது…

நீரிழிவு நோயாளிகள் தனியாக பயணம் செய்வது நல்லதல்ல. தனியாக பயணம் செய்யும்போது தங்களைப் பற்றி குறிப்பு அடங்கிய கார்டு ஒன்றை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். அதில் பெயர், விலாசம், டெலிபோன் எண், மருந்துகளின் பெயர், சிகிச்சை அளிக்கும் டாக்டரின் விலாசம் போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உடலில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறைந்தால், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நோயாளியுடன் செல்பவர் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளி இருக்கும் குடும்பத்தினரும் இதை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் செய்யக்கூடாத விஷயங்கள்

அதிகமான அளவு உடற்பயிற்சி செய்தல்

சரியான நேரத்துக்கு உணவு அருந்தாமை

ஊசியில் இன்சுலின் அளவை அதிகரித்தல்

மாத்திரையின் அளவில் ஏற்படும் தவறுதல்

வேறு நோய்களால், நீரிழிவு நோய்க்குரிய மாத்திரை சாப்பிட முடியாமை போன்றவைகளால் உடலில்

சர்க்கரையின் அளவு குறைந்தால்…



அதிக சோர்வு

கண் இருண்டு போதல்

உதடு மரத்து போகும் உணர்வு

அதிகமாக வியர்த்தல்

இதய துடிப்பு

நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்படும்.

இவ்வாறு ஏற்பட்டால், குளுக்கோஸ் கலக்கி கொடுக்க வேண்டும் அல்லது இனிப்பு சாப்பிடவேண்டும்.

உடனே மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும்.

மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்!

பொதுவாக வயது ஆக ஆக மூட்டு வலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டது. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான்.

இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. சாதாரணமாக காய்கறிச் சந்தையில் இந்தக் கீரையும் கிடைக்கும். அதுசரி, இந்த கீரையை வாங்கி வந்து எப்படி சமையலில் பயன்படுத்துவது என்றுதானே கேட்க்குறீங்க?

ஒரு நபர் சாப்பிடும் அளவுக்கு முடக்கத்தான் சாறு எப்படி தயார் செய்யறது?

இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரை தேக்கரண்டி, žரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால், முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஒடிடும்.

முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லா விதமான மூட்டுவாதம் மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். அப்புறமென்ன ஓடி ஆடலாம். சின்னக் குழந்தை போல் துள்ளிக் குதிக்கலாம். உடனே முடக்கத்தான் கீரை வாங்க கிளம்பிட்டீங்க போல இருக்கு!

நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் பச்சடி!

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.

மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, žரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

ஆனால் நிறையப் பேர் பாகற்காயை ஒதுக்குவதுபோல் கோவைக்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பமுடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.

கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்குமே. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரவையில் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது. பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.

நன்றி: கூடல்.காம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

44 − = 36

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb