பேசும் கண்கள்!
பேசாமல் பேசும் விழிகள் சொல்லாமல் சொல்லிவிடும் சேதிகளை. அன்போ, இரக்கமோ, கோபமோ எந்த உணர்ச்சியையும் தெளிவாக சொல்லும் சக்தி மிக்கது கண்கள். அத்தனை தகவல்களையும் துல்லியமாய் வெளிப்படுத்தும். அதனால்தான் கதை பேசும் கண்கள் என்பார்கள்.
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என்று புலம்புகின்றவர்களுக்கு, கண்களின் மொழிகளை அரிய விரும்புபவர்களுக்கும் இதோ சில குறிப்புகள்…
* எளிதில் கையாளக்கூடிய நிலைமைகளில் நம் கண்களின் கண்மணிகள் விரிந்தோ, சுருங்கியோ காணப்படும். இது நம் மனநிலைக்கேற்ப அமையும். உதாரணமாக…
* மனக்கிளர்ச்சிக்குள்ளான நிலையில் கண்மணிகள் வழக்கமான அளவைவிட 4 மடங்கு விரிவடையும்.
* கோபம், ஏமாற்றம், மனச்சோர்வு நிலைகளில் கண்மணிகள் சுருங்கி காணப்படும்.
* பேசுபவர் எதிரே இருப்பவரின் கண்கள், மற்றும் நெற்றியின் உச்சி மையம் வரை இணைத்து ஒரு பார்வை முக்கோணத்தை உருவாக்கியபடி பேசுவது எதிராளியை தனது கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வரும் உத்தியாகும்.
* சாதாரண முறையில் பலரும் பேசும்போது, இந்த பார்வை முக்கோணம் வாய்ப்பகுதியை நோக்கி கீழ்நோக்கி அமைந்திருக்கும்.
* தனிப்பட்டவரின் பார்வை எதிராளியின் முகத்தில் இருந்து மார்பு பகுதி வரை முக்கோண வடிவில் குவியும்.
* பக்கவாட்டுப் பார்வை விருப்பம் அல்லது பகையை தெரிவிக்கும். விருப்பப் பார்வை எனில் புருவம் மேல்நோக்கியும், இதழ்கள் புன்னகையுடனும் இருக்கும். வெறுப்பு எனில் புருவம் கீழ்நோக்கி சுருங்கி காணப்படும்.
* தொடர்ந்து அடுத்தவரை பார்த்துக் கொண்டு இருப்பது பிரிவையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தும்.
* ஒருவருடைய கண் அடுத்தவருடைய கண்ணுடன் நேரடி தொடர்பு கொள்ளும்படியாக பேசுவதே உரையாடலுக்கு உண்மையான அடிப்படை. எனவே கண்ணைப் பார்த்து பேசவும், புரிந்து கொள்ளவும் பழகுங்கள்.
ஆண் ஆயிரம் வார்த்தையில் சொன்னதை, ஆண்டுக் கணக்கில் காத்துக்கிடப்பதை மென்மையான ஒரு பார்வையில் சொல்லிவிடுவாள் பெண். கண்களை நேராய் பார்த்து பேசினால் காரியம் கைகூடும். கண்ணுக்கு வசீகரம் செய்யும் தன்மை உண்டு.
நன்றி: தினத்தந்தி