உங்களிடம் ஒரு கேள்வி!
படித்தவர்களிடம் மட்டும்தான் திறமை இருக்குமா?
படித்தவர்களால் மட்டும்தான் சிந்தித்து செயல்பட முடியுமா?
படித்தவர்களால் மட்டும்தான் திறம்பட எதையும் எழுத முடியுமா?
படித்தவர்களால் மட்டும்தான் திட்டமிட்டு செயல்பட செய்ய முடியுமா?
படித்தவர்களால் மட்டும்தான் எதையும் சாதிக்க முடியுமா?
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் படிக்கமுடியாமல் போனவர்களால் இவையனைத்தும், சாத்தியப்படாதா?
எல்லாமே சாத்தியப்படும்… creativity மிகுந்த கலை சார்ந்த துறைகளில் திறமை இருந்தால் பெரிய அளவில் சாதிக்கலாம்… சிறிய பிசினஸ் என்றாலும் கூட ஜெயித்து விடலாம்… பெரிய அளவிலான பிசினஸ் என்றால் கற்றவர் ஒருவரின் உதவி கொண்டு சாதிக்கலாம்… ஆனால் கண்டிப்பாக அடிப்படை கல்வியறிவு எல்லோருக்கும் தேவை தான்…
படித்தவர்களிடம் உள்ள கல்வியறிவு என்பது ஒரு கூடுதல் தகுதி அல்லது ஓர் உபகரணம்தானே அன்றி, அப்படி படித்தவர்கள் அனைவருமே அனைத்தையும் சாதிப்பதில்லையே!
உலகில் படிக்காத மக்கள் பலர் பலத்துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள்.சில துறைகளில் முன்னேற்றமில்லாமலும் இருக்கிறார்கள். ஆனால் எழுத, படிக்க தெரியாத, உம்மிநபி என்று பெயர் பெற்ற நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்.