o டாலரிலிருந்து யூரோவுக்கு மாறும் ரஷ்யா
o சரிவை நோக்கி அமெரிக்க இங்கிலாந்து பொருளாதாரம்!
o புதிய மந்திரி சபை
o எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு வேலை அளிப்பதில் கூகிள் நிறுவனம் உலக அளவில் முதலிடம்
டாலரிலிருந்து யூரோவுக்கு மாறும் ரஷ்யா
டாலரின் மதிப்பை உலக பொருளாதார சந்தையில் உயர்த்தி பிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உலகில் பெரும்பாலான நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
உலக நாடுகளின் சேமிப்பு செல்வங்களில் 64% டாலரே உள்ளது.சமீபத்தில் வெளியிட பட்ட யூரோ நாணயமும் தன் பங்கை அதிகரித்து 26% என்ற அளவில் முன்னேறி உள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க அரசு தன் கடன்களை வேகமாக அதிகரித்து வருவதால் உலக சேமிப்பு நாணயத்தில் டாலரின் பங்கு குறையும் என ஒரு சில பொருளாதார நிபுணர்களால் கணிக்க பட்டு வந்தது.நிதி நெருக்கடியால் டாலரின் புழக்கம் சர்வதேச சந்தையில் சிறிதளவு குறைந்துள்ளது.
ஆனால் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள் (முக்கியமாக பெட்ரோல்) டாலரிலேயே நடைபெருகிறது.
அதே சமயம் அமெரிக்க அரசின் டிரசரி பாண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருத படுவதால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலர் சொத்துக்களை கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வாங்கி குவிக்க தொடங்கியுள்ளன.
சீனா முதன் முறையாக அமெரிக்க அரசின் செயல்பாட்டால் தங்களது (http://tamilfuser.blogspot.com/2009/03/blog-post_24.html) முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. ஆனால் அது சேர்த்து வைத்துள்ள டாலர் சொத்துக்களின் மதிப்பை காப்பாற்ற மேன்மேலும் டாலர் சொத்துக்ளை வாங்க வேண்டிய கட்டயத்தில் டாலர் வலையில் வீழ்ந்துள்ளது. அந்த வலையிலிருந்து மீண்டு வர சில முயற்ச்சிகளை எடுக்க தொடங்கி உள்ளது.இது உலக அரங்கில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாக கருத பட்டது. தற்போது மற்றொரு மிக பெரிய நாடு இம்மாற்றத்திற்கான முயற்சியில் ஈடு பட தொடங்கி உள்ளது. அதுதான் (http://english.pravda.ru/business/finance/19-05-2009/107581-dollar_russia-0) ரஷ்யா.
கடந்த ஆண்டு வரை தன் சேமிப்பு செல்வத்தில் பெரும் பகுதி டாலர் சார்ந்த சொத்துக்களையே வைத்திருந்தது. ஆனால் தற்போது அது டாலர் சொத்துக்களை பெருமளவு யூரோ சார்ந்த சொத்துக்களாக மாற்ற தொடங்கி உள்ளது. ரஷ்யாவின் 47.5 சதவித சேமிப்பு செல்வங்கள் யூரோ சார்ந்ததாக உள்ளது. ஆனால் டாலர் சார்ந்த செல்வங்களோ 41.5% தான் உள்ளது.
டாலருக்கு மாற்றாக மற்றொரு நாணயம் வளர்வது என்பது உடனடியாக நடக்க கூடிய செயல் அல்ல. கிரிகெட் தர வரிசையில் முதலிடம் மாறுவது போல் இது எளிதாக நடக்க கூடியது அள்ள. ஏனென்றால் பல நாடுகளின் சேம்ப்பின் மதிப்பு இதன் மூலம் குறைய கூடும். ஆனால் இந்த மாற்றத்தின் ஆரம்பம் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.
சரிவை நோக்கி அமெரிக்க இங்கிலாந்து பொருளாதாரம்!
நடப்பு ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 36 வங்கிகள் திவால்: நடப்பு 2009-ஆம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் (சுமார் ஐந்து மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற 2008 காலண்டர் ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி இருந்தன. ஆக, பொருளாதாரத்தில் ஏற்பட்டும்ள சீர்குலைவிலிருந்து அமெரிக்கா இன்னும் மீளவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் சென்ற 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்நாட்டின் 158 ஆண்டு கால பாரம்பரியம்மிக்க ”லெஹ்மன் பிரதர்ஸ்” திவால் அறிவிப்பை வெளியிட்டது. இதன்பிறகு அமெரிக்காவில் பல வங்கிகள் திவாலாகின. சென்ற 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்கா வில் மொத்தம் 50 வங்கிகள் திவால் ஆகி உள்ளன.
நடப்பு மே மாதத்தில் மட்டும் அமெரிக்கா வெஸ்ட்பேங்க், சிட்டிசன்ஸ் கம்யூனிட்டி பேங்க், சில்வர்டன் பேங்க் உள்ளிட்ட ஆறு வங்கிகள் திவால் ஆகி உள்ளன.
நடப்பு 2009-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தில் கடும் சரிவு: வளர்ச்சி அடைந்த நாடுகளும் ஒன்றான இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நடப்பு 2009-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.9 சதவீதம் சரிவடைந்துள்ளது. 1979-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் இந்த அளவிற்கு இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் அளவு கோலாகும்.
நுகர்வோர்கள் செலவிடும் அளவும் 1980-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த காலாண்டில்தான் மிகவும் குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்நாட்டில் கார் உற்பத்தி இதுவரை கண்டிராத வகையில் 55.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பொரும்கள் விற்பனை சரிவடைந்து வருவதால் சரக்கு கையிருப்பு அதிகரித்து, நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்கு வழங்கப்பட்டும்ள உயர் வகுப்பு தர நிர்ணயத்தை குறைக்கப்போவதாக ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் என்ற தர நிர்ணய அமைப்பு எச்சரித்துள்ளது.
புதிய மந்திரி சபை
புதுதில்லி: மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை விரிவுபடுத்தப்படுகிறது. புதிதாக 59 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். புதிய அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் புதன்கிழமை அளித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
தமிழகத்திலிருந்து 4 கேபினட் அமைச்சர்களும் 4 இணை அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இதில் திமுகவைச் சேர்ந்த மு.க. அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகின்றனர். தமிழக காங்கிரஸ் சார்பில், தற்போது இணை அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன், கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெறுகிறார்.
ஏற்கெனவே இணை அமைச்சராக உள்ள பழனிமாணிக்கம் மற்றும் நடிகர் நெப்போலியன், எஸ். ஜெகத்ரட்சகன், நாமக்கல் எம்.பி. காந்தி செல்வன் ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆட்சியில் கேபினட் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபோல் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், பரத்வாஜ், சிஸ்ராம் ஓலா, சைபுதீன் சோஸ் ஆகியோருக்கும் மீண்டும் பதவி வழங்கப்படவில்லை.
புதுவை: புதுவையைச் சேர்ந்த நாராயணசாமி (காங்கிரஸ்) மீண்டும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
59 புதிய அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்பதை அடுத்து மத்திய அமைச்சரவையின் பலம் 79-ஆக உயரும். இதில் 60 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், 7 பேர் திமுகவினர், 7 பேர் திரிணமூல் காங்கிரஸ், 3 பேர் தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
60 காங்கிரஸ் அமைச்சர்களில் 28 பேர் கேபினட் அமைச்சர்கள்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து புதிய ஆட்சி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா அழைப்பு விடுத்தார். இதையடுத்து மன்மோகன் தலைமையில் 19 பேர் கேபினட் அமைச்சர்களாக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
திமுகவுக்கு எத்தனை அமைச்சர் பதவிகளை வழங்குவது என்பதில் உடன்பாடு ஏற்படாததால் அப்போது திமுக சார்பில் யாரும் பதவியேற்கவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே முட்டுக்கட்டை நீடித்ததால் அமைச்சரவை விரிவாக்கம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
புதிய அமைச்சர்களில் 14 பேர் கேபினட் அமைச்சர்கள், 7 பேர் தனிப் பொறுப்பு இணை அமைச்சர்கள், 38 பேர் இணை அமைச்சர்கள்.
முன்னாள் முதல்வர்கள்: மத்திய அமைச்சரவையில் முன்னாள் முதல்வர்கள் விலாஸ்ராவ் தேஷ் முக் (காங்கிரஸ் – மகாராஷ்டிரம்), வீரபத்திர சிங் (காங்கிரஸ் – இமாசலப்பிரதேசம்), பாரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி – காஷ்மீர்) ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தேஷ்முக் தற்போது நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கேபினட் அமைச்சர்கள்: வீரபத்ர சிங், விலாஸ் ராவ் தேஷ்முக், பாரூக் அப்துல்லா, தயாநிதி மாறன், ஆ. ராசா, மல்லிகார்ஜுன கார்கே, குமாரி செல்ஜா, சுபோத்காந்த் சகாய், எம்.எஸ். கில், ஜி.கே. வாசன், பவன்குமார் பன்சால், முகுல் வாஸ்னிக், காந்திலால் பூரியா, மு.க. அழகிரி.
இணை அமைச்சர்கள் தனிப் பொறுப்பு: பிரபுல் படேல், பிரிதிவிராஜ் சவாண், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சல்மான் குர்ஷித், தின்ஷா படேல், ஜெய்ராம் ரமேஷ், கிருஷ்ணா தீரத்.
இணை அமைச்சர்கள்: இ. அகமது, வி. நாராயணசாமி, ஸ்ரீகாந்த் ஜெனா, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், டி. புரந்தேஸ்வரி, பனபாக லட்சுமி, அஜய் மக்கான், கே.எச். முனியப்பா, நமோ நாராயண் மீனா, ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், ஏ. சாய் பிரதாப், குருதாஸ் காமத், எம்.எம். பல்லம் ராஜு, மகாதேவ் கண்டேலா, ஹிரிஷ் ராவத், கே.வி. தாமஸ், செüகதா ராய், தினேஷ் திரிவேதி, சிசிர் அதிகாரி, சுல்தான் அகமது, முகுல்ராய், மோகன் ஜாதுவா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், டி. நெப்போலியன், எஸ். ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், பிரனீத் கவுர், சச்சின் பைலட், சசிதரூர், பாரத்சிங் சோலங்கி, துஷார்பாய் செüத்திரி, அருண் யாதவ், பிரதிக் பிரகாஷ் பாபு படேல், ஆர்.பி.என். சிங், வின்சன்ட் பாலா, பிரதீப் ஜெயின், அகதா சங்மா.
Flash back:
கடந்த முறை மன்மோகன் சிங் அமைச்சரவையில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக இருந்தனர். இந்த முறை 10 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. 2004-ல் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காபினட் அமைச்சர்களாகவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், எஸ். ரகுபதி, வேங்கடபதி, ஆர். வேலு ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 2006 ஜனவரியில் ஜி.கே. வாசன் மத்திய இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவியேற்றார்.
எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு வேலை அளிப்பதில் கூகிள் நிறுவனம்
உலக அளவில் முதலிடம்
அதிக எண்ணிக்கையில் எம்.பி.ஏ. பட்டதாரிகள் பணிபுரியும் நிறுவனங்களில், இன்டர்நெட் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறக்கும் கூகிள் நிறுவனம் உலக அளவில் நம்பர்-1 நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. ஃபார்ச்சூன் என்ற பத்திரிகை மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் 100 முன்னணி நிறுவனங்களில் கூகிள் முதலிடத்தில் உள்ளது.
மேற்கண்ட 100 நிறுவனங்களின் பணியாளர்களும் கூகிள் நிறுவனத்தில் பணிபுரியும் எம்.பி.ஏ. பட்டதாரிகள் மட்டும் 20 சதவீதத்தினர் ஆவர். பொருளாதார மந்த நிலையிலும் இந்நிறுவனம் நிர்வாக இயல் பட்டதாரிகள் அதிக அளவில் நியமித்து வருகிறது. இந்த எம்.பி.ஏ. பட்டதாரிகம் இந்நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல், மக்கள் தொடர்பு, நிதி, விளம்பரம், விற்பனை, பொது நிர்வாகம் போன்ற பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
கூகிள் நிறுவனத்தை அடுத்து மெக்கின்சே – கம்பெனி, பெயின் – கம்பெனி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. 100 முன்னணி நிறு வனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் 10-வது இடத்தில் உள்ளது. சாஃப்ட்வேர் துறையில் தலைசிறந்து விளங்கும் மைக்ரோ சாஃப்ட் 12-வது இடத்தில் உள்ளது. குளிர் பானங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் கோகோ-கோலா மற்றும் பெப்சிகோ ஆகியவை முறையே 19-வது மற்றும் 20-வது இடத்தில் உள்ளன.
சென்ற 2008-ஆம் ஆண்டில் ஒரு பட்டதாரி மாதச் சம்பளமாக சுமார் ரூ.4 லட்சம் பெற்றார் என்றும் இது, நடப்பு 2009-ஆம் ஆண்டில் 9 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.4.36 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஃபார்ச்சூன் பத்திரிகை அதன் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.