புதிய பள்ளிவாசல் கட்டட நிதிக்காகவும் ஏழை
மாணவர்கள் பயிலும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களுக்காகவும்
வெள்ளிக் கிழமைகளில் அதிகமானோர் தொழுகைக்குக்
கூடுவதால் ஜூம்ஆத் தொழுகைக்குப் பிறகு சில சமயம் நிதி
வசூல் செய்வது வழக்கத்தில் உள்ளது. இது தவறும் அல்ல.
ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் பல
பள்ளிவாசல்களில் இதையே வழக்கமாக்கிக் கொண்டுவிட்டனர்.
ஜூம்ஆத் தொழுகை முடிந்து சலாம் கொடுத்ததும் இந்த
வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர்.
சமூகத்தில் ஏற்பட்ட மூடப் பழக்கங்கள் அனைத்தும்
ஆரம்பத்தில் இப்படித்தான் சிறுகச் சிறுக மூக்கை நுழைத்தன.
போகப் போக பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.
முதலில் பெருநாளைக்கு மட்டும் என்று என்றிருந்த
இப்பழக்கம், இப்போது ஒவ்வொரு ஜூம்ஆவுக்கும் என்ற
நிலைக்கு வந்து விட்டது. பிறகு தினமும் ஒவ்வொரு நேரத்
தொழுகைக்கும் என்று தொடர ஆரம்பித்து விட அதிக காலம்
பிடிக்காது.
இதன் மூலம் கிடைக்கும் கிடைக்கும் தொகையைக்
கொண்டு பள்ளிகளைப் பரிபாலனம் செய்வதாகப் பள்ளி
நிர்வாகிகள் கூறலாம். பைத்துல்மால் என்னும் இஸ்லாமியப்
பொது நிதி இல்லாத பள்ளிகளை நிர்வகிக்க பொருளாதாரம்
தேவைதான் என்பமை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு வழி
இதுவல்ல.
அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்களிடம்,
அல்லாஹ்வின் பள்ளிக்காக செலவுச் செய்வதால் கிடைக்கும்
நன்மைகளை எடுத்துச் சொன்னால் வாரி வழங்க
எத்தனையோ தயாள மனம் கொண்ட செல்வந்தர்கள் தயாராக
இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பள்ளிச் சொத்துக்களை அல்லாஹ்வுக்கு அஞ்சிய
நல்லவர்களிடம் ஒப்படைத்து ஹலாலான முறையில் வருமானம்
கிடைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து நிரந்தர வருமானத்திற்கு
வழி வகை செய்யவேண்டும்.
வாரந்தோறும் ஜூம்ஆத் தொழுகையை வசூலுக்கு
பயன்படுத்தும் வன் கொடுமையை பள்ளி நிர்வாகிகள்
உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல்
இப்பழக்கம் எதிர் காலத்தில் பெரும் விபரீதத்தில்
கொண்டுபோய் விட்டுவிடும். எச்ச்சரிக்iகை!