[ மக்கள் தொகையில் 55 சதவீதமாக உள்ள குழந்தைகளுக்காக நாம் இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. வருங்கால சமுதாயம் வன்முறை இல்லாத அமைதிப் பூங்காவாக திகழ… குழந்தைகள் வளர்ப்பில் அதிக கவனம் எடுக்க வேண்டும். ]
நமது நாட்டில் வருடத்தில் முன் விரோதத்தால் 16.2 சதவீதம் கொலையும், வரதட்சணைக் கொடுமையால் 2.3 சதவீதம் கொலையும், காதல் ஏமாற்றத்தால் 6.2 சதவீதம் தற்கொலையும், நிலத் தகராறினால் 10.2 சதவீதம் கொலையும் நடக்கின்றன என்று கூறுகிறது, ஒரு சர்வே. இதில் மீதமுள்ள பெரும்பாலான சதவீத கொலைகள் எதற்காக நடை பெறுகின்றன என்ற விவரம் வெளியே தெரிவதில்லை.
எவ்வித முக்கியக் காரணமும் இல்லாமல் இளம் வயதினர்தான் அதிகமாக கொலையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சிறுவயதில் குழந்தைகள் தற்போது விளையாடும் விளையாட்டுதான் என்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள்.
இப்போதுள்ள `வீடியோ கேம்ஸ்’களில் ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொம்கிறார்கம். அதுமட்டுமின்றி பல்வேறு பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டு கொடூரமாக கொல்லும் காட்சிகளும் உள்ளன. இது குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும், அவர்கள் படிக்கும் சூப்பர் மேன், பார்க்கும் ஸ்பைடர் மேன், ஜேம்ஸ்பாண்ட் கதைப் புத்தகங்களும், சினிமாக்களும் இளம் உள்ளங்களில் வன்முறை உணர்ச்சியைத் தூண்டி மனதில் பதிந்து விடுகிறது என்பதும் மனவியலார்கம் கருத்தாக உள்ளது.
வீடியோ கேம்ஸ் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாக்களில் கூட சிறுவர், சிறுமிகளுக்கான படைப்புகம் இல்லை. தொலைக்காட்சிகளில் தற்போது சிறுவர், சிறுமிகளுக்கான சேனல்கள் வந்தாலும் அவற்றிலும் மசாலா நெடி அதிகமாகவே உள்ளன. அதில் குழந்தைகளின் கற்பனை உலகை விளக்கவோ… அவர்களுடைய குணங்களை மேம்படுத்தும் நோக்கிலோ படைப்புகம் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். அப்படியே பார்க்க வேண்டும் என்றால் கூட மொழி தெரியாத கார்ட்டூன் சேனல்களில் உள்ள நிகழ்ச்சிகளைத் தான் நம்முடைய குழந்தைகள் காண வேண்டிய சூழல்.
மக்கள் தொகையில் 55 சதவீதமாக உள்ள குழந்தைகளுக்காக நாம் இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. வருங்கால சமுதாயம் வன்முறை இல்லாத அமைதிப் பூங்காவாக திகழ… குழந்தைகள் வளர்ப்பில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.