Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சத்தியத்தை அணைக்கவே முடியாது

Posted on May 18, 2009 by admin

சத்தியத்தை அணைக்கவே முடியாது

[ சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது ]

இவ்வுலகத்தில் மனிதசமூகத்திற்கு நேர்வழிகாட்ட எண்ணற்ற மதங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாத்தங்கள் தோன்றின. அவற்றில் பல்வேறு வந்த வழியிலேயே சென்றுவிட்டன சில கொள்கைகள் நிலைத்து நிற்கின்றன அவற்றிலும் தூய இஸ்லாம் மட்டுமே இவ்வுலகம் அழியும் வரை நிலைத்து நின்று நேர்வழி காட்டி வெற்றிபெறும்.

அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 33)

இப்படியிருக்கையில் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை கண்டுகொள்ள முடியாமல் மாற்றார்கள் ஊடகங்களில் வாயிலாக முக்கியமாக இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இவ்வுலகத்திற்கு நேர்வழிகாட்ட வந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மீது கலங்கத்தை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் சில தவறான எண்ணங்களுடனும் யூகத்தின் அடிப்படையிலும் எடுத்துவைக்கப்படுகிறது. அவர்களுக்கு சத்தியத்தை புரிய வைக்கவும் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே மிகைத்து நின்று வெற்றிவாகை சூடும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆகவே இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் சத்தியவழிக்கு என்றைக்குமே முட்டுகட்டை போடமுடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28)

ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)

வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள்.

அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)

இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும். இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

இன்னொரு பக்கம் இணைவைப்பாளர்கள் நடத்துகின்ற தவறான பிரச்சாரங்கள், முஸ்லிம்களின்மீது கட்டவிழ்த்துவிடுகின்ற மனித இனப்படுகொலைகள்,

சமூகத்தையே தறமட்டமாக்கும் கற்பழிப்புகள், குழந்தையை வயிற்றியிலிருந்து கீறியெடுத்து கொலைசெய்கின்ற அக்கிரமங்கள்,

குண்டுமழை பொழிவுகளின் மூலம் நாட்டையே சுடுகாடாக்கும் கொடூரம்,

சத்தியவாதிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து சர்வதேச அளவில் இறைமறையோடு வாழ்பவர்களை சிறையோடு கொல்லும் அவலம்,

பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் பர்தாவை ஆனாதிக்கம் என்று கூப்பாடு போடும் கோழைத்தனம்,

முஸ்லிம்கள் முன்னேறக்கூடாது என்பதற்காக இடஒதுக்கீடை எதிர்க்கும் இறக்கமற்றச் செயல்,

மறையோதுவதற்காக கட்டப்பட்ட இறையில்லங்களை இடித்திடும் இழிநிலை,

இஸ்லாமின் வளர்ச்சியை பார்த்து நடுங்கும் வஞ்சகம்,

வாய்மையால் பரப்பப்பட்ட மார்க்கத்தை வாளால் வளர்க்கப்பட்டது என்று வாதிடும் பேதிகள்,

சத்தியத்தில் அசத்தியத்தை கலக்கும் கடும்போக்கு, அறப்போரை அறியாமல் விளக்கம் கொடுக்கும் அறிவிழித்தனம்,

உண்மைவாதிகளை பழமைவாதிகளாக சித்தரிக்கும் பாசிசத்தன்மை,

இறைச்சட்டங்களை ஊனச்சட்டங்களாக ஊதும் ஊடகங்கள்,

நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகத்தை விதைக்கும் அரக்கத்தனம், இறைவேதத்தை குறைகூறும் முறையற்ற போக்கு,

இறைதூதரை கறைகொண்டு பூசும் கொடுமை,

இப்படி பல செய்கையின் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடைபோட எண்ணுகிறார்கள்.

ஆனால் உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம். இதற்கு சான்று பகர்க்கும் முகமாக சில முக்கியமான நபர்கள், பத்தரிக்கைகள் கூறும் கூற்றை இங்கு பார்ப்போம்.

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது, இது நம்முடைய பல்வேறு மக்களின் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் நிலைப்பாட்டுக்கும் காரணமாக அமைந்துள்ளது. (அமெரிக்க அதிபர் கிளின்டனின் மனைவி ஹில்லாரி கிளின்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி, மே 31,1996. பக்.3)

இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற குழுவாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.(மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக்க குறிப்பு, USA Today பத்திரிக்கைக் குறிப்பு, பிப்ரவரி 17,1989 பக் 4A)

இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற மதமாக இருக்கின்றது. (ஜெரால்டின் பாம், நியூஸ் டே பத்திரிக்கையின் மதம் பற்றிய எழுத்தாளர், மார்ச் 07, 1989 பக். 4).

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது. (ஆரி டு. கோல்டுமேன், நியூயார்க் டைம்ஸ் பிப்ரவரி 21,1989 பக்1 ).

மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.

ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். சில மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன்.

நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவவாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது. இவ்வாறு இஸ்லாம் அசுரபலத்தில் வளர்ந்து கொண்டுருக்கையில் சில விசமிகள் பொருக்க முடியாமல் சில தவறான ஆக்கங்களை நிறுவியும், அவதூறான செய்திகளை பரப்பியும் வருகிறார்கள், நாங்கள் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம் அது இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்,

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள் அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 7:181)

அல்குர்ஆன் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக்கூடியதாகவும் இருக்கிறது.

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். (அல்குர்ஆன் 86:13)

இது மட்டுமே இறைவனால் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், முடிவில் எல்லா மதங்களை விடவும் மிகைத்து நின்று வெற்றிபெரும். ஆகவே நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் குர் ஆனில் பல்வேறு வசனங்களின் மூலம் இந்த சமூகத்திற்கு தெளிவுபடுத்துகிறான்,

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்’ என்று கூறுவீராக.( 17:81)

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.( 21:18)

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) இறைவனுடைய பிரகாசத்தை அணைத்து விட விரும்புகின்றனர். எனினும் இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாச்தைப் பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப் போவதில்லை. (சூரா அத்தவ்பா : 32)

“Jazaakallaahu khairan” tmpolitics.net

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 35 = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb