Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கல்வி பயில ஏழ்மை தடையில்லை

Posted on May 11, 2009 by admin

‘நீங்கள் பூமியில் பரவி அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!.’ திருக்குர்ஆன்: 62:10

இன்னும் ஓரிரு மாதங்களில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் என்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கத் தொடங்கி விடுவார்கள். மற்ற வேலைகளில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

இனியும் தாமதிக்கலாமா புறப்படுங்கள் வறுமையை துடைத்தெறிவதற்கு

இன்று உலகம் முழுவதும் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக நாம் இருக்கின்றோம் படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்க முடியாதக் காரணத்தினால் சில நேரங்களில் விரக்தி அடைந்து தவறான வழியில் பெருளீட்டும் மோசமான நிலைக்கும் தள்ளப்படுகின்றோம் இன்றும் தமிழகத்தில் இறைவன் தடைசெய்த வட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல முஸ்லீம் ஊர்கள் இருக்கவேச் செய்கின்றன. முறையாகப் படித்து கைநிறைய ஊதியம் பெற்றால் தவறான வழியில் பொருளீட்டும் அவசியம் வரவே வராது. ஒருவர் தமக்குரிய உரிமைகளைத் தேடும்போது அதை முறையாகத் தேடட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இக்கின்றார்கள். (புகாரி 2076 )

இயற்கை வளம் கொழிக்கும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நாம் முறையாக பொருளீட்ட வேண்டும் என்றால் இரண்டே வழிகள் தான் இருக்கின்றன ஒன்று படித்து விட்டு இந்திய அரசு அதிகாரிகளாக ஊழியம் செய்து கைநிறைய ஊதியம் பெற வேண்டும், அதற்கடுத்து தொழில் துறைகளில் முன்னேற வேண்டும் இவை இரண்டுக்குமே படிப்பு இன்றியமையாததாகும்.

பாஸ்போட் மோகத்தை கை கழுவுங்கள்

கடந்த காலங்களில் 10, அல்லது 11, 12 வரைப் படித்து விட்டு அயல்நாடு சென்று பிழைப்பு தேடுவதற்காக பாஸ்போர்ட் அப்ளை செய்தோம் இனிவரும் காலங்களில் அதை கை கழுவி விடுவோம்.

காரணம் இன்று நாம் கடுமையாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து குறைந்த பட்ச இடஒதுக்கீட்டை அடைந்திருக்கின்றோம் இன்னும் தொடர்ந்து முயற்சி செய்து விகிதாச்சார அடிப்படையில் முறையான இடஒதுக்கீட்டை அடைந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் அதையும் அடைந்து கொள்வதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம் இறைவன் நிறைவேற்றித் தருவான்.

மேற்காணும் இடஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவதற்கு அதற்கானப் படிப்பும், சான்றிதழும் அவசியம் தேவை என்பதை நாமறிந்து வைத்திருக்கின்றோம் அதனால் மேற்காணும் அண்ணா பால்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உயர் கல்விப் பயிலுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

பிள்ளைகள் அதிகமான மார்க்குகள் எடுப்பதற்கு ஆர்வமூட்டுங்கள் படிப்பிற்கு தடையாக வீட்டில் இருக்கக் கூடிய பொழுது போக்கு அம்சங்களை தடுத்துக் கொள்ளுங்கள். ( நியூஸ், பயான் போன்ற நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குங்கள் )

விரக்தி அடையாதீர்கள்

சிறு வயதில் சிலப் பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் அதை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இவன் மேல்படிப்பில் கோட்டை விட்டு விடுவான் இவனை நம்பி பெரிய தொகையை செலவிட முடியாது என்று ஆரூடம் கூறி பிள்ளைகளுடைய எதிர் காலத்தை தொலைத்து விடாதீர்கள்.

சிலக் குழந்தைகள் சிறு வயதில் அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பவர்கள் கல்லூரிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தி சாதனைப் படைக்கக் கூடியவர்களாக மாறி விடுவார்கள் குழந்தைப் பருவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வாலிபப் பருவத்தை கணிக்காதீர்கள் நமது கணிப்பு எப்பொழுதுமே பிழையானது விதியின் அமைப்பே உறுதியானது.

ஏழ்மை தடை இல்லை

நாம் ஏழையாக இருக்கின்றோம் நம்முடையப் பிள்ளகளை அதிக செலவு செய்து படிக்க வைக்க இயலாது என்றெண்ணி விரக்தி அடைந்து மேல்படிப்புக்கான முயற்சியை கை விட்டு விடாதீர்கள்.

அதே போன்று நமது பெற்றொர் ஏழையாக இருக்கின்றனர் அதனால் நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியாது என்றெண்ணி மானவர்கர்கள் விரக்தி அடைந்து விடாதீர்கள்.

நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியும் என்ற வேட்கை ஒவ்வொரு மானவனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்து விட்டாலேப் போதும் அதற்கு பெருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு சமீபத்தில் ஏழை தாய் தகப்பனுக்குப் பிறந்து ஐ.ஏ.எஸ் ஸில் தேர்வு எழுதி வென்ற வீரபாண்டியன் அவர்களின் விடா முயற்சி ஒருப் பெரிய எடுத்துக் காட்டாகும். நல்வழியில் முன்னேற வேண்டும் என்று நினைத்த எவரும் சருக்கியதாக வரலாறேக் கிடையாது.

மார்க்க அறிவுக்கும் தடை இல்லை

எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக முழு நேரத்தையும் செலவிடுவதால் மார்க்க கல்விப் பயில முடியாத நிலை எற்படுமே என்றெண்ணி அஞ்ச வேண்டாம் எந்த நிலையிலும் அதனால் பின்னடைவு ஏற்படாது.

எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக முழு நேரத்தை செலவிட்டாலும் தொழச் செல்வதற்கு எந்த கல்லூரியிலும் தடை கிடையாது, அவ்வாறு தடைவிதிக்கப் பட்டாலும் கிளாஸ் நடக்கும் வரை தான் தடுக்க முடியும், கிளாஸ் முடிந்தப் பிறகு அதற்கு முன் லஞ்ச் டயம் போன்ற இடைவேளையின் போது முஸ்லீம் மானவர்கள் இணைந்து ஜமாத்தாக தொழுது கொள்ள முடியும், விடுமுறை நாட்களில் மார்க்க அறிவை தேடிக் கொள்ள முடியும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

”அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்து வந்தார்கள். ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும்போது அதை நிறைவேற்றி முடிக்கும் வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை!” என்று கதாதா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி 2059 )

“Jazaakallaahu khairan” அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb