‘(உணவை உண்டு முடித்ததும்) விரல்களையும், தட்டையும் நன்கு சுத்தம் செய்து (சாப்பிட) கட்டளையிட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள், ”நீங்கள் அந்த உணவில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அறிய மாட்டீர்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்:ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்).
முஸ்லிமின் மற்றொரு அறவிப்பில் கீழ்கண்டவாறு ஹதீஸ்கள் உள்ளது:
‘உங்களில் ஒருவரின் ஒரு பருக்கை உணவு கீழே விழுந்து விட்டால், அதை அவன் எடுக்கட்டும்! அதில் உள்ள அசுத்தத்தை நீக்கட்டும்.
பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதை விட்டு விட வேண்டாம்.
தன் விரலை சூப்பி சுத்தம் செய்யும் முன் தன் கையை துண்டில் துடைக்க வேண்டாம்.
நிச்சயமாக தன் உணவில் எதில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.
‘நிச்சயமாக ஷைத்தான், உங்கள் ஒவ்வொரு செயலின் போதும் ஆஜராகிறான். இதுபோல் ஒருவர் சாப்பிடும் போதும் ஆஜராகிறான்.
உங்கள் ஒருவரிடமிருந்து ஒரு பருக்கை விழுந்துவிட்டால், அதில் உள்ள அசுத்தத்தை(தூசியை) நீக்கி விட்டு, சாப்பிடட்டும்!
ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.’ (ரியாளுஸ்ஸாலிஹீன்: 164)