சென்னை: மத்திய அரசு பல்கலைக் கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை நிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் எம்.சி.ஏ. படிப்பு நடத்தப்படுகிறது.இதுவரை குறிப்பிட்ட பாடங்கள் படித்த பட்டதாரிகள் மட்டுமே இதில் சேரலாம் என்ற விதிமுறை இருந்தது.
இந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டப்படிப்பில் எந்த பாடத்தை படித்தவர்களும் எம்.சி.ஏ. படிப்பில் சேரும் புதிய திட்டத்தை இக்னோ பல்கழைக்கழகம் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப் படுத்தியிருக்கிறது. அது மட்டுமின்றி முதல் ஆண்டுக்கான கல்விக்கட்டணம் ரூ3,300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.. பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு “இக்னோ” பல்கழைக்கழக சென்னை மண்டல இயக்குனர் கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத் கலவரம்: நரேந்திரமோடிக்கு எதிராக
சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
டெல்லி: குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பெரிய வன்முறையில் முதல்வர் மோடியின் பங்கு குறித்து ராகவன் கமிட்டி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தனது விசாரணை அறிக்கையை அடுத்த மூன்று மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் வழங்க வேண்டும் எனவும் ராகவன் கமிட்டிக்கு அது உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில், மோடி அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள், 3 விஸ்வ இந்து பரிஷத் நபர்கள், பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரியின் மனைவி மற்றும் சமூக சேவகர் டீஸ்தா செட்லவாத் ஆகியோர் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து டீஸ்தா கூறுகையில், இது மிகப் பெரிய வெற்றி. கடந்த ஆறு வருடங்களாக மோடியை நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். அது தற்போது நியாயப்படுத்தப்பட்டுள்ளது.
முறையான விசாரணை வேண்டும் என நாங்கள் கோரி வந்தோம். தற்போது அதற்கு விடிவு கிடைத்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையை மோடியின் செல்வாக்கு காரணமாக போலீஸார் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வந்தனர். தற்போது நீதித்துறை மீதான நம்பிக்கையை உச்சநீதிமன்றம் புதுப்பித்து விட்டது.
பத்து நாட்களுக்கு முன்புதான், என்னைப் பற்றியும், எனது அமைப்பின் பெயரையும் கெடுக்கும் விஷமப் பிரசாரத்தில் மோடி அரசு இறங்கியது.
தேர்தலைக் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த வழக்கை தொடுக்கவில்லை. அதை அரசியல் கட்சிகள்தான் செய்யும். எங்களுக்கு அது தேவையில்லை.
2002ம் ஆண்டு முதலே நாங்கள் இடையறாது போராடி வருகிறோம். எங்களது போராட்டம் கடைசி வரை தொடரும். மனித உரிமைகளையும், நீதியையும் நிலை நாட்டும் வரை நாங்கள் போராடுவோம் என்றார்.
பதில் சொல்ல மறுத்த மோடி:
இந் நிலையில் மோடியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள என்டிடிவியின் நிருபர், மோடியிடம் குஜராத் கலவரம் விஷயத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, நான் இதற்கு முன்பே இது விஷயமாக பல இன்டர்வியூக்களை தந்துவிட்டேன் என்றார்.
சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கைக்குப் பின் நீ்ங்களும் பாஜகவும் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது விஷயமாக பல இன்டர்வியூக்களை தந்துவிட்டேன் என்று கூறிவிட்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
இதையடுத்து மீண்டும் இதே கேள்வியை நிருபர் கேட்டபோது, பதிலே சொல்லாமல் எதிரே அமர்ந்திருந்த உதவியாளரிடம் தண்ணீர் குடு என்று கேட்டு வாங்கி குடித்துவிட்டு பேசாமல் அமர்ந்துவிட்டார். கடைசி வரை பதிலே சொல்லவில்லை.
காங்கிரஸ் கோரிக்கை:
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “சுப்ரீம் கோர்ட்டு அளித்தும்ள தீர்ப்பு, நரேந்திர மோடியின் கன்னத்தில் விழுந்த அறையாகும்” என்றார்.
இந்திய வைர தொழில்துறை மீண்டும் எழுச்சி பெறுகிறது
அகமதாபாத்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் இந்தியாவின் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான தேவைப்பாடு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து பெரும் அவலத்தில் சிக்கித் தவித்த இந்திய வைர தொழில்துறையில் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகம் தென்படுகின்றன. வேலையின்றி சோகத்தில் மூழ்கிக் கிடந்த இத்துறை பணியாளர்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க தொடங்கியுள்ளது.
நாட்டின் வைர தொழில்துறை ரூ.80,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்டதாகும். மேலை நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் பெரும் வீழ்ச்சியை சந்தித்த துறைகளும் இதுவும் ஒன்றாகும். இதன் காரணமாக தொழிலாளர் வேலை இழப்பு அதிகரித்தது. 4 லட்சம் பணியாளர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கினர். பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொம்ளும் அளவிற்கு நிலைமை மோசமானது.
இத்துறையில் முன்னிலை வகிக்கும் குஜராத் மாநிலத்தில்தான் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இங்கு 5,000-த்திற்கும் மேற்பட்ட வைர தொழில் பிரிவுகள் மூடப்பட்டன. இந்நிலையில் சென்ற ஒரு மாத காலமாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு தேவை உயர்ந்து வருவதை யடுத்து நாட்டின் வைரங்கம் தொழில்துறை புத்துயிர் பெற்றுள்ளது.
இதனையடுத்து சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வைர தொழில் பிரிவுகம் அவற்றின் கையிருப்பில் இருந்த வைரங்களை விற்றுத் தீர்த்து விட்டன. மேலும் வைரங்களை அறுக்கும் மற்றும் பட்டை தீட்டும் பணியாளர்களுக்கு மீண்டும் தேவைப்பாடு எழுந்துள்ளதால், பல தொழில்பிரிவுகளின் வாயில்களில் தற்போது `பணியாளர்கள் தேவை’ என்ற அறிவிப்பு காணப்படுகிறது. மேலும் மூடப்பட்டுள்ள 5,000 தொழில்பிரிவுகளும் 300 பிரிவுகம் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சூரத் வைர சங்கத்தின் பிரசிடெண்ட் சி.பி.வனானி கூறும்போது, “நாட்டின் வைர தொழில்துறையில் மீண்டும் விறுவிறுப்பு ஏற்பட்டும்ளதையடுத்து, பல நிறுவனங்கள் கச்சா வைரங்களை அதிகளவில் இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளன. எனவே இத்துறையில் 50,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது” என்று தெரிவித்தார். இந்தியாவின் வைரங்கம் தலைநகரம் என்றழைக்கப்படும் சூரத் நகரின் உயர்மட்ட அமைப் பாக சூரத் வைர சங்கம் உம்ளது. உலக அளவில், வைரங்களை அறுத்தல் மற்றும் பட்டை தீட்டுதலில், சூரத் நகரின் பங்களிப்பு மட்டும் 80 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.
“இந்திய வைரங்கம் துறையில் உத்வேகம் ஏற்பட தொடங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது. வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உம்நாட்டிலும் வைரங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கையிருப்பு முழுவதும் காலியாகி விட்ட நிலையில், தற்போதைய ஆர்டர்களை விரைவாக நிறைவேற்ற வேண்டியும்ளது. அத்துடன் கையிருப்பையும் நிலைநிறுத்த வேண் டிய அவசியம் ஏற்பட்டும்ளது” என்று கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மேஹுல் சோக்ஷி கூறினார்.