“நேர்வழியை அடைந்த சிலர் நேர்வழி பெற்றப் பிறகு, வீண் தர்க்கத்தை செய்தே தவிர வழிகெடுவதில்லை“ என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதீ, இப்னுமாஜா
“ஒருவர் வீண் தர்க்கத்தை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் கீழ் பகுதியில் ஒரு வீடு கட்டித்தரப்படும், ஒருவர் தகுதியானதாக இருப்பினும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் நடுவில் அவருக்காக வீடு கட்டப்படும். ஒருவர் தன் குணத்தை அழகாக்கி வைத்துக்கொண்டால் சொர்க்கத்தின் உயர்ப்பகுதியில் வீடு கட்டப்படும்.“ என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, பைஹகீ
“அல்லாஹ்விடம் மனிதர்களில் அதிக கோபத்திற்குரியவர்கள் வீண் தர்க்கம் புரிவதில் கைதேர்ந்தவர்கள்தான்” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ
“குர்ஆன் விஷயத்தில் தர்க்கம் புரிவது, இறை மறுப்புச் செயலாகும்..” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பாளர்: அபுஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபுதாவூத், இப்னுஹிப்பான்.
“யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி‘ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)