நீடூர், A.M. சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
“அன்பளிப்பு” ஓர் அலசல் – 1
ஆங்கிலத்தில் GIFT என்று சொல்லப்படுவதற்கும், முஸ்லிம் சட்டத்தில் ஹிபா என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒருவர் தன் சொத்துக்களை மற்றவருக்குப் பிரதி உபகாரம் எதிர்ப்பார்க்காமல் வழங்கி, அந்தச் சொத்துக்களை அவருக்கு உரிமையாக்குவதே அன்பளிப்பு எனப்படும். முஸ்லிம் சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற அன்பளிப்பிற்கு மூன்று முக்கிய நிபந்தனைகள் உண்டு.
1. அன்பளிப்பு அளிப்பவர், அன்பளிப்புக் கொடுப்பதாக உறுதிப்படுத்த வேண்டும்.
2. அந்த அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டதாக, அன்பளிப்பைப் பெற்றவர் தெரிவிக்க வேண்டும்.
3. அன்பளிப்பு வழக்கியவரிடமிருந்து அன்பளிப்பு பெற்றவருக்குப் பொருள் கை மாற வேண்டும்.
இவற்றில் முதலாவது நிபந்தனை அன்பளிப்பு வழங்கியவரின் நோக்கத்தையும், இரண்டாவது நிபந்தனை அன்பளிப்பு பெற்றுக் கொண்டவரின் இசைவையும் தெரிவிக்கின்றன. மூன்றாவது நிபந்தனை முஸ்லிம் சட்டத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது. அன்பளிப்பு வழங்க வேண்டும் என்ற உண்மையான எண்ணமின்றி, பொய்யான வெகுமதியாகவோ, பினாமி மாற்றமாகவோ இருப்பின் அந்த அன்பளிப்பு செல்லாது.
முஸ்லிம் சட்டப்படி அன்பளிப்பு வழங்குவது எழுத்து மூலம் இருக்க வேண்டிய அவசியமில்லை; வாய்மொழியாகவும் இருக்கலாம். வீ.P.புஉமி 1292 2வது சட்டத்திலிருந்து முஸ்லிம் சட்டத்திற்கு விதி விலக்கு உண்டு.
எடுத்துக்காட்டாக ”A” என்பவர் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால் தன்னுடைய நிலங்களை ”B” என்பவருக்கு வெகுமதியாகக் கொடுத்துவிட்டதாக அறிவித்து, அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமையையும் ”B” என்பாரிடம் கொடுத்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த அன்பளிப்புக்காகப் பத்திரம் எழுதுவதோ, பதிவு செய்வதோ அவசியம் கிடையாது. எனினும் சாட்சியைப் பதிவு செய்து கொள்வது நன்று. மேலும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படின், பதிவு(ரிஜிஸ்ட்டிரேன்) செய்து கொள்வதும் நன்று. ஆனால், அனுபவிக்கின்ற உரிமை கைமாறாத வரைப்பதிவு செய்தாலும் கூட அன்பளிப்பு செல்லாது.
செல்வதும் செல்லாததும் :
புத்தி சுவாதீனமுள்ள மைனர் அல்லாத எந்த முஸ்லிமும் தன் உடைமைகளை அன்பளிப்பாகக் கொடுக்கலாம். கடன்காரர்களை ஏமாற்றுவதற்காகக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள், கடன் கொடுத்தவர்களின் அனுமதியின் பேரிலேயே செல்லுபடியாகும். பிறக்காத குழந்தைக்கு அன்பளிப்பு கொடுப்பது செல்லாது. இஸ்லாமியச் சட்டப்படி, ஒருவர் தன் வாரிசுகளில் சிலருக்கு, மற்ற வாரிசுகளின் அனுமதியின்றி உயில் மூலம் சொத்துக்களை வழங்க முடியாது. ஆனால் ஒருவர் தன் வாரிசுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
முஸ்லிம் தன் வாரிசுகளுக்கு எந்தவிதச் சொத்துக்களையும் கொடுக்காமல் உறவினர் அல்லாத வேறு ஒருவருக்கு தன் சொத்துக்களை முழுவதையும் கூட அன்பளிப்பாகக் கொடுக்க முடியும். ஆனால் இது போன்ற அன்பளிப்புக்களை மரணத் தருவாயில் வழங்க முடியாது. வாடகைக்கு விடப்பட்டிருக்கும் சொத்துக்கள், ஜப்தியில் உள்ள சொத்துக்களை இன்சூரன்ஸ் பாலிசி, ஒரு சொத்தின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வருகின்ற வருமானம் ஆகியவற்றை அன்பளிப்புகளாக வழங்கலாம்.
ஹிபா பற்றி ஹிதாயா
ஹிதாயா என்னும் சட்டப்புத்தகத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. கொடுக்கப் படுகின்ற சொத்திலிருந்து பெறுபவனுக்கு வருமானமோ, இலாபமோ கிடைக்க வேண்டும் என்பதே ஹிபா என்னும் அன்பளிப்பின் நோக்கமாகும். அன்பளிப்பு பெறுபவரிடமிருந்து மாற்றாக எதையும் பெற்றுக் கொள்ளாமல், ஒரு பொருளை அவருக்கு உரிமையாக்கித் தருவதுதான் அன்பளிப்பு.
அன்பளிப்பு ஓர் அலசல் – 2
அசையாப் பொருள் அன்பளிப்பு
கணவன் Š மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கும் அசையாப்பொருள் அன்பளிப்பு பற்றி செக்ன் 152(3) விவரிக்கிறது. கணவன் தன் மனைவிக்கு ஒரு வீட்டை அன்பளிப்பாக கொடுத்து விட்டான். ஆனால் அதே வீட்டில் மனைவியுடன் அவனும் குடியிருக்கிறான். இந்த அன்பளிப்பு செல்லும். இது போன்ற வழக்குகளில் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால், கணவன் தனக்காக வாடகை வாங்காமல், மனைவிக்காக வாடகை வாங்குகிறானா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.
ஆமீனா பீவி Š Vவி கதீஜா பீவி என்ற வழக்கில் கணவன் Š மனைவி இருவரும் தங்கியிருந்த ஒரு வீட்டை மனைவிக்காக கணவன் அன்பளிப்பு கொடுக்கிறார். அந்த வீட்டோடு சேர்ந்த பக்கத்து வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. மனைவிக்காகவே கணவன் வாடகை வசூலித்த காரணத்தினால் இந்த அன்பளிப்பு செல்லும் எனத் தீர்ப்பானது.
மாமி Vவி. கலந்தரம்மாள் என்னும் வழக்கில் கணவன் ஒரு வீட்டை மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறார். நகரசபைப் பதிவுகளில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு மனைவியே அந்த சொத்தின் உரிமையாளர் என்று குறிக்கவும் பட்டுவிட்டது. பிரிவு கவுன்சில் இந்த வழக்கில் தீர்ப்புக் கூறும் போது “கணவன் மைதீனால் நகரசபைப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் தன் மனைவிக்கு வீட்டை அன்பளிப்புக் கொடுத்தவுடன் பெயர் மாற்றம் செய்தது நீரூபிக்கப்பட்டால், கணவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் மனைவிக்காகத் தான் செய்யப்படுகின்றன என்றே நாம் கருதிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது”.
முஹம்மது சாதிக் Vவி பக்ரஜமான் என்ற வழக்கில் (1932 Š லக்னோ) கணவன் தன் மனைவிக்கு அன்பளிப்பு கொடுத்த சொத்தின் அனுபவிக்கும் உரிமையை அளித்துவிட்டதாக அன்பளிப்புப் பத்திரத்தில் குறிப்பிட்டு, அந்தப் பத்திரத்தை அவளிடம் ஒப்படைத்திருந்தான். அன்பளிப்பு செல்லுபடியாகும் என்றும், பெயர் மாற்றம் தேவையில்லை என்றும் தீர்ப்பாகியுள்ளது.
மைனர்களின் அன்பளிப்பு :
மைனர்களுக்கு தகப்பனாரோ, காப்பாளரோ கொடுக்கும் அன்பளிப்புகளில் அனுபவிக்கும் உரிமையைக் கூட ஒப்படைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அன்பளிப்புக் கொடுத்தவரின் உண்மையான எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டால் போதுமானது.
மைனர் குழந்தையோடு மற்றொரு மேஜருக்கும் சேர்த்து அன்பளிப்பு கொடுக்கப்படுமேயானால் அனுபவிக்கும் உரிமையை ஒப்படைத்தாக வேண்டும். உதாரணமாக மைனர் மகளுக்கும், அவளுடைய மேஜர் கணவனுக்கும் அன்பளிப்புக் கொடுக்கப்படுமேயானால் அனுபவிக்கும் உரிமையை அளித்தாக வேண்டும் என்று சுக்ரபாய் Š Vவி முகம்மது அலி (1934Šபம்பாய்) வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
1960-ல் கேரளாவில் ஒரு வழக்கு ”வலியபீடிக்கன்படி கதீஜா உம்மா Š Vவி – பதக்களம்; 1960 கேரளா எல்.ஆர்” வழக்கு என்பது அதன் பெயர். ஒரு ஹனபி முஸ்லிம் மைனராக இருந்த தன் மனைவிக்கு பதிவு செய்த பத்திரத்தின் மூலம் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட தன் சொத்துக்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய மனைவிக்காக மனைவியின் தாயார் அந்த அன்பளிப்பை பெற்றுக் கொண்டார். அந்த வீட்டில்தான் கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பெண்ணின் தந்தையோ, தந்தையின் தந்தையோ உயிருடன் இல்லை. மேலும் அப்பெண்ணின் தாயிடம் அன்பளிப்புப் பத்திரத்தைக் கொடுத்து அனுபவ உரிமையை சிவில் கோர்ட் நியமிக்கும் ஒரு காப்பாளரிடம் ஒப்படைக்கவும் இல்லை. அப்படியிருந்தும் சட்டப்படி இந்த அன்பளிப்பு செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அன்பளிப்புப் பத்திரத்தை கணவன் தன் மனைவியிடமே கொடுத்திருந்தால் முஸ்லிம் சட்டப்படி அன்பளிப்பு செல்லுபடியாகியிருக்கும்.
தந்தையின் தந்தையால் (பாட்டனால்) பேரன்களுக்கு அவர்கள் மைனர்களாக இருக்கும் போது அசையாப் பொருள் சொத்துக்கள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அந்த மைனர்களுக்காக அப்போது உயிரோடு இருந்த அவர்களின் தகப்பனாரிடம் அனுபவிக்கும் உரிமையை அளிக்காமல், அவர்களின் தாயிடம் அது வழங்கப்பட்டது. இந்த அன்பளிப்பு முற்றுப் பெறவில்லை என 1960 Š பம்பாய் Š 210 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. (டி.பி.ஆக்ட் 1882, செக்ன் 122) தாய்க்கும், மைனர் குழந்தைக்கும் சேர்த்து அன்பளிப்புக் கொடுக்கப்பட்ட சமயத்தில் அதன் பொசினை தாய் மட்டும் பெற்றுக் கொண்டாலும், மைனர் குழந்தைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டதாகவே கருத வேண்டும் என்று 1962 ஜே.கே.4(7) என்னும் வழக்கில் தீர்ப்பாயிற்று.
மைனர் என்பதற்காகவே அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதை முஸ்லிம் சட்டம் தடுக்கவில்லை186).
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.