Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அமெரிக்காவால் சைனாவுக்கு பாதிப்பு!

Posted on March 16, 2009 by admin

அமெரிக்க சலுகை திட்டங்களால் சைனா நாட்டிற்கு பாதிப்பு!

மார்ச் 15:அமெரிக்க அரசு, அந்நாட்டின் பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் வகையில் 78,700 கோடி டாலர் (ரூ.40,13,700 கோடி) மதிப்பிற்கு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை அதிகரித்து, டாலரின் மதிப்பு மிகவும் குறைய வாய்ப்பும்ளது என பொருளாதார நிபுணர்கம் தெரிவித்துள்ளனர். இதனால், சைனாவிற்கு பாதிப்பு ஏற்படும் என சைனா நாட்டு பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏனென்றால், அமெரிக்காவின் கடன்பத்திரங்களில் சைனா ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. டாலரின் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியால், சைனாவின் முதலீட்டு மதிப்பில் கடும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அதிக அளவில் சலுகைகளை வழங்கி, டாலரின் மதிப்பை குறைத்து விட வேண்டாம் என அமெரிக்க அரசை, சைனா கேட்டுக் கொண்டுள்ளது.

பெண்களை ஆண்கள் சோதனையிட முடியாது: உச்ச நீதிமன்றம்

மார்ச் 15: பெண்கள் போதைப்பொருள் வைத்திருப்பதாக சந்தேகித்தாலும் அவர்களிடம் ஆண் அதிகாரிகள் சோதனையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த குர்ணம் கெüர், அவரது மருமகள்கள் ரஞ்சித் கெüர், குர்ஜித் கெüர் ஆகியோர் அண்மையில் அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், எங்களது வீட்டில் திடீரென சோதனை நடத்திய போலீஸôர் எங்களை கைது செய்தனர். அத்துடன், நாங்கள் ஹெராயின் போதைப்பொருள் கடத்தும் தொழில்புரிவதாகவும் பொய் குற்றச்சாட்டு சுமத்தினர். ஆண் அதிகாரிகளே எங்களிடம் சோதனை நடத்தினர். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த நிலையில் இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அந்த மூவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் மாநில அரசினால் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது மாநில அரசு. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சின்ஹா, முகுந்தகம் சர்மா, தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பெண்கள் போதைப்பொருள்கள் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தாலும் அவர்களிடம் ஆண் அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடாது. பெண் அதிகாரிகள் கொண்டே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உத்தவிட்டது.

இந்தியாவிடம் அரிசி வாங்கியதால் ஐ.நா.வுக்கு ரூ.2,150 கோடி மிச்சம்

மார்ச் 15: உலக நாடுகளுக்கு உதவுவதற்காக இந்தியாவிடம் கடந்த ஆண்டு அரிசி வாங்கியதால் ஐக்கிய சபைக்கு ரூ.2150 கோடி மிச்சமாகியுள்ளது.

ஐ.நா.வின் உணவுப் பொருள் கொள்முதல் செய்யும் பிரிவின் தலைவர் நிகோலே மெனேஜ் இதை இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அரிசி மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதனால் கடந்த ஆண்டு இந்தியாவிலேயே அரிசி கொள்முதல் செய்தோம். அந்த வகையில் ஆயிரக்கணக்கான டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இதன் மூலம் ஐ.நா.சபைக்கு ரூ.2150 கோடி மிச்சமாகியுள்ளது.

இந்தியாவிடம் கொள்முதல் செய்யப்பட்ட அரிசி பசியால் வாடும் 22 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆசிய கண்டத்தில் கிழக்கு தைமூருக்கு அரிசி அளிக்கப்படவுள்ளது.

 

7 பேரவைத் தொகுதிகளில் பெண்கள் அதிகம்

சென்னை, மார்ச் 15: சென்னையில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்.

தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்கள் 31 லட்சத்து 22 ஆயிரத்து 96. இதில் ஆண்கள் 15 லட்சத்து 68 ஆயிரத்து 759. பெண்கள் 15 லட்சத்து 53 ஆயிரத்து 337.

பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

ராதாகிருஷ்ணன் நகர்: பெண்கள்- 84,198; ஆண்கள்- 83,600.

திருவிக நகர் (தனி): பெண்கள்- 77,677; ஆண்கள்- 76,595.

ராயபுரம்: பெண்கள்- 69,363; ஆண்கள்- 68,694.

எழும்பூர் (தனி): பெண்கள்- 76,975; ஆண்கள்- 76,522.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி: பெண்கள்- 82,817; ஆண்கள்- 82,691.

ஆயிரம் விளக்கு: பெண்கள்- 86,600; ஆண்கள்- 85,600.

மயிலாப்பூர்: பெண்கள்- 96,558; ஆண்கள்- 93,230.

ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ள 11 தொகுதிகள்: சென்னையில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் அதிகம். இதன் விவரம்:

திருவொற்றியூர்: ஆண்கள்- 88,933; பெண்கள்- 85,855.

பெரம்பூர்: ஆண்கள்- 97,070; பெண்கள்- 95,886.

கொளத்தூர்: ஆண்கள்- 85,194; பெண்கள்- 84,332.

வில்லிவாக்கம்: ஆண்கள்- 79,024; பெண்கள்- 78,759.

துறைமுகம்: ஆண்கள்- 67,532; பெண்கள்- 62,468.

அண்ணாநகர்: ஆண்கள்- 98,336; பெண்கள்- 97,537.

விருகம்பாக்கம்: ஆண்கள்- 87,347; பெண்கள்- 84,823.

சைதாப்பேட்டை: ஆண்கள்- 90,807; பெண்கள்- 89,927.

தியாகராய நகர்: ஆண்கள்- 81,694; பெண்கள்- 81,349.

வேளச்சேரி: ஆண்கள்- 94,950; பெண்கள்- 93,932.

சோளிங்கநல்லூர்: ஆண்கள்- 1,30,940; பெண்கள்- 1,24,281.

வாக்கு எண்ணும் மையங்கள்: சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:

வட சென்னை- ராணி மேரி கல்லூரி; மத்திய சென்னை- லயோலா கல்லூரி; தென் சென்னை- அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.

இம் மையங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாநகர காவல் ஆணையர் கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

வாக்கு எண்ணும் இடங்கள், பத்திரிகையாளர்களுக்கான அறைகள், தேர்தல் அலுவலர்கள்- முகவர்களுக்கான அறைகள், பாதுகாப்பு வசதிகள், தடுப்பு வேலிகள் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்துக் கட்சி ஆய்வுக் கூட்டம்: இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் மாவட்டத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு ஆய்வு: தமிழக அளவில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக டிஜிபி கே.பி. ஜெயின் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb