நமது வாழ்வில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை என்று சொன்னால், அதில் மன அழுத்தம் கண்டிப்பாக இருக்கின்ற ஒன்றாகும். அவை பற்றி பேசுவதற்குக் கூட இன்று நம்மில் பலரும் தயாராக இல்லை. ஏனென்றால், அவை நம் வாழ்க்கையினுடைய ஒரு பகுதியாக தான் கருதுகிறார்கள். இது சரியும் கூட.
ஆனால், மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற இடையூறுகளை புரிந்துகொண்டால் மட்டுமே, இதனை விலக்கி வைப்பதற்கான தேவையை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
பொதுவாக மன அழுத்தம் இரண்டு வகையில் உள்ளன.
1. உங்களுக்கு சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தம்.
2. வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியாத மன அழுத்தம்.
ஆனால், சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தத்தை நம்மால் ஓரளவு விலக்கிக் கொள்ள முடியும்.
மன அழுத்தத்தால் ஏற்படும் இடையூறுகள்
மன அழுத்தத்தால் நம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. முதுகு வலி, அதிகமாக பசி எடுப்பது, அதிமான தலைவலி போன்றவை மன அழுத்தத்தாலும் ஏற்படுவதுண்டு.
ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சனை இல்லாமல் இருப்போர் மிகச் சொற்பம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்றால், இந்த முதுகுவலிக்கு முக்கியக் காரணமாக இருப்பது, ‘டென்ஷன்’ தான் என்பது! இதைப் போலவே மற்றொரு பிரச்சனைதான் அதிகமாக பசி எடுப்பதும்!
அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது பலருடைய வழக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிரந்தரமான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிந்துகொள்ளலாம்.
மன அழுத்தம் மன ரீதியான ஒன்றுதான் என நம்புவதால், இதற்கு உடம்பு வலி ஏற்படுத்த முடியாது என்று முடிவு செய்துகொள்வது தவறு. உங்களுக்கு ஏற்படுகின்ற பல நோய்களுக்கும் காரணமாக இருப்பதில் ஒரு முக்கியப் பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு.
நகத்தைக் கடிப்பது, தலையைச் சொறிவது, எப்போதும் கைகளால் ஏதாவது செய்துகொண்டிருப்பது போன்றவை எல்லாம் பழக்கமாவது மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில்தான்.
மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்
சில நேரங்களில் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போது, காரணமே இல்லாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்படலாம். சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளாக இருந்தால், அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த நேரங்களில் ஒரு ரப்பர் பேண்டால் கைகளைக் கட்டிக் கொள்ளலாம்.
பேப்பரைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதால் சிலருக்காவது மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கின்றது. பேப்பரைக் கிழிக்கும்போது கேட்கின்ற சத்தமும், கிழித்து முடித்தவுடன் ஏற்படுகின்ற உணர்வும், அதாவது நாம் எதையோ செய்துவிட்டோம் என்று தோன்றுவது. இது நல்லதுதான். இது மன அழுத்தத்துக்கு தீர்வாக இருக்கிறது.
ஒரே விஷயம்தான் உங்களை மீண்டும் டென்ஷன் ஆக்குகிறது என்றால், கண்களைக் கொண்டு தீர்வு காணலாம் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த விஷயம் உங்களை அலட்டுகின்றதோ, அந்த விஷயத்தை நன்றாக யோசித்த பிறகு, தலை அசைக்காமல், கண்ணின் மணிகளை இரு பக்கங்களிலும் வேகமாக அசைக்கவும்.. இதை இருபது தடவை செய்து பார்த்த பிறகு நமது நாடியைப் பிடித்துப் பார்த்தால், கண்டிப்பாக
மன அழுத்தம் குறைந்திருப்பதை உணரலாம். இது பலருக்கும் உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிக அளவில் உணவை உட்கொள்பவர்கள், சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் தூங்குவது நல்லது. இதனால் புத்துணர்வு அதிகமாவதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கலாம்!
“Jazaakallaahu khairan” skn_azeesudeen@yahoo.com