[ ஒரு புறம் பாலுணர்வைத் தூண்டும்படியான சினிமாக்கள், அதனை தன்னுடைய வியாபாரத்திற்காக மூலைமுடுக்கெல்லாம் கூவி விற்கும் ஊடகங்கள். இதனால் தூண்டப்பட்டவர்களுக்கு ஆசையைத் தீர்க்க மறு புறம் விபச்சாரத்திற்கு அனுமதி. இதனால் வரும் நோயிலிருந்து பாதுகாக்க ஆணுறை!. இதில் எங்கே ஒழுக்கப் பயிற்சிக்கு இடம் ]
ஹோமியோபதி மருந்துக்கும் அலோபதி மருந்துக்கும் என்ன வித்தியாசம்? அலோபதி மருந்துகள் நோயை விரைவாகக் குணப்படுத்துகின்றன. ஹோமியோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்த அலோபதி மருந்துகளை விட கொஞ்சம் அதிக காலம் எடுத்தும் கொண்டாலும் நோய்க்காரணிகளையும் அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன.
சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சி சேனலில் எயிட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பரத்தைக் காண நேர்ந்தது. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ, அத்தனை வகையிலும் விளம்பரப் படுத்துகிறார்கள்.
தாயும் வயது வந்த மகளும் பொது இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது, மகள் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய விளம்பரத்தைக் கவனிக்காமல் கடந்து செல்கிறாள். தன் மகளை அந்த விளம்பரத்தைக் கவனிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தாய், தன் கைப்பையை கீழே தவறவிட்டு கொஞ்சம் தாமதிப்பார். தாயைத் தேடும் மகள் எதிரே சுவரொட்டியில் காணப்படும் எயிட்ஸ் விளம்பரத்தைப் பார்ப்பதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது. இக்காட்சியின் நோக்கம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வைச் சொல்லத் தாய் தயங்கக் கூடாது என்பதுடன் அதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் பிரபல ஆங்கில சினிமா நடிகருடன் தென்னிந்திய சினிமா நடிகர்கள் கலந்துகொண்டு நடத்திய “ஹீரோஸ்” என்ற அமைப்பின் எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காட்டினார்கள். அதில் கலந்து கொண்ட நடிகர்களும் நடிகைகளும் எழுதிக் கொண்டுவந்த அல்லது முன்பே தயார் செய்யப்பட்டக் கருத்துக்களைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
ஒருவர் கூட இனி தங்கள் சினிமாக்களில் “எயிட்ஸுக்குக்குக் காரணமான பாலுணர்வைத்தூண்டும் காட்சிகள் இடம் பெறா” என்றோ அல்லது “பாலுணர்வைத்தூண்டும் காட்சிகளில் நாங்கள் நடிக்க மாட்டோம்” என்றோ வாய் தவறியும் சொல்லவில்லை.
பிரபல ஹாலிவுட் நடிகருக்கு வந்த பிறகுதான் எயிட்சின் தீவிரம் உலக மக்களுக்கு உரைக்க ஆரம்பித்தது. மனித இனம் தோன்றியதிலிருந்து பாலுணர்வும், செக்ஸுக்கான தேவையும் இருந்தே வருகின்றது. அப்படி இருக்கும் போது கடந்த 20-30 வருடங்களில் மட்டும் ஏன் எயிட்ஸ் என்னும் கொடிய அரக்கன் விசுவரூபம் எடுத்தான்? என்று நாம் சிந்திக்காமல், ஆணுரை அணிந்து எயிட்ஸை கட்டுப்படுத்தலாம் என்ற ரீதியில் எயிட்ஸ் விழிப்புணர்வைச் செய்து வருகிறோம்.
ஆணுரை அணிந்தால் எயிட்ஸைக் கட்டுப்படுத்தலாம் என்பது முட்டாள்தனமான விழிப்புணர்வு என்பது என் கருத்து. முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரத்தில் ஆணுரைகளின் அறிமுகம் பரவலாக்கப்பட்ட பின்பும் எயிட்ஸ் அதிவேகமாகப் பரவிக் கொண்டுதானே இருக்கிறது? எயிட்ஸை ஒழிக்கவேண்டும் என்று கடந்த வருடங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களால் எயிட்ஸ் அரக்கனைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்து விட்டன;ஏன்?
“புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு” என்று சிகரெட் பெட்டியில் விளம்பரப்படுத்திக் கொண்டே, சிகரெட் விற்பது போல்தான் உள்ளது எயிட்ஸ் விழிப்புணர்வு விளம்பரங்களும்! பாலியல் உணர்வுகளைத் தூண்டும் சினிமாக்களையும் சூழல்களையும் ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்தியும் இனி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது என்ற நிலையிலா உலகம் எயிட்ஸின் கொடும்பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது?
எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கங்களின்/விளம்பரங்களின் தற்போதைய நோக்கம் ஆணுரை அணிந்து முறையற்ற உறவு கொள்வதன் மூலம் எயிட்ஸைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைக்கு தாழ்ந்து விட்டது. என்ன கொடுமையான விழிப்புணர்வு இது? “விழிப்புணர்வு” என்பதிலிருந்து “தற்காப்பு” என்ற சுயநல நிலைக்கு இறங்கி விட்ட எயிட்ஸ் விழ்ப்புணர்வு விளம்பரங்களால் என்ன பயன்? என்பதைக் காலம்தான் உணர்த்தும்!
ஒரு புறம் பாலுணர்வைத் தூண்டும்படியான சினிமாக்கள், அதனை தன்னுடைய வியாபாரத்திற்காக மூலைமுடுக்கெல்லாம் கூவி விற்கும் ஊடகங்கள். இதனால் தூண்டப்பட்டவர்களுக்கு வெறியைத் தீர்க்க மறு புறம் விபச்சாரத்திற்கு அனுமதி. இதனால் வரும் நோயிலிருந்து பாதுகாக்க ஆணுறை!. இதில் எங்கே ஒழுக்கப் பயிற்சிக்கு இடம்.
ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்தி யாரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த? பெண்களின் ஆடை எந்த இடத்தில் விலகுகிறது என்று கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி அலையும் சினிமா பித்தர்களிடமா?
அல்லது மேனாட்டு மோகத்தால் அரைகுறை ஆடையுடன் “அலைவது” தான் நாகரீகம் எனக் கருதும் “ஒழுக்க சீலர்களிடமா?”
ஒரு புறம் பாலுணர்வைத் தூண்டும்படியான சினிமாக்கள், அதனை தன்னுடைய வியாபாரத்திற்காக மூலைமுடுக்கெல்லாம் கூவி விற்கும் ஊடகங்கள். இதனால் தூண்டப்பட்டவர்களுக்கு வெறியைத் தீர்க்க மறுபுறம் விபச்சாரத்திற்கு அனுமதி. இதனால் வரும் நோயிலிருந்து பாதுகாக்க ஆணுறை!. இதில் எங்கே ஒழுக்கப் பயிற்சிக்கு இடம்.
தற்போதைய தேவை ஆணுரை அணிந்து தற்காலிகமாக எயிட்ஸை கட்டுப்படுத்தும் அலோபதி விழிப்புணர்வா? எயிட்ஸுக்கான காரணிகளையும் அழித்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கும் ஹோமியோபதி விழிப்புணர்வா என்பதைச் சிந்தித்தால் எயிட்ஸை ஒழிக்கப் போதுமான விழிப்புணர்வு கிடைத்துவிடும்!
முறையற்ற இன்பம்! முடிவற்ற துன்பம்! எயிட்ஸ் ஒழிக! அதற்கான காரணிகள் அதனினும் ஒழிக!!
நன்றி: நல்லடியார், தமிழோவியம்.காம்