ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்கள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.(புகாரி) மேற்கண்ட ஹதீஸின் தரம் பற்றி, ஹதீஸ் கலை வல்லுநர்களுக்கும், அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவகளின் ஏராள அமுத மொழிகள், இசைக்கும், பாடலுக்கும் அது சார்ந்த இசைக் கருவிகளுக்கும் எதிராகவே அமைந்துள்ளன. ஆத்தகைய இசைக் கருவிகளை இசைப்பதை இஸ்லாமிய ஷஷரீஅத் சட்டங்கள் தடையும் செய்துள்ளன. ஆனால், சில நிபந்தனைகளுடன் கூடிய விதிவிலக்கான நிலைகளில், ஷரீஅத் சட்டம் அனுமதியளிக்கும் நிலைகள் உள்ளன. ஆத்தகைய சந்தர்ப்பங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத மொழிகள் தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளன. பாடக் கூடிய பாடல் வரிகள் அமைப்பையும், இசைக்கக் கூடிய இசைக் கருவியின் வகை, அளவையும் கூட மிகத் துள்ளிதமாகக் கூறி நிற்கின்றன.
ஆனால், துரதிருஷஷ்டமாக, சில மார்க்க அறிஞர்கள், இசைக்கும், பாடலுக்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் எதிராக வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை அல்லது புனைந்துரைக்கப்பட்டவை என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். அத்தகைய அவர்களின் தவறான கருத்தைப் போக்கும் முகமாக இது விஷஷயத்தில் நாம் தீவிர ஆய்வில்
1. ஹதீஸும் அதன் தரங்களும் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்ள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.(புகாரி) (See Fathul Bari vol.10.p.51)
மேற்கண்ட ஹதீஸின் தரம் பற்றி, ஹதீஸ் கலை வல்லுநர்களுக்கும், அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
மேற்கண்ட அறிவிப்பாளர் வரிசையில் முதலில் இடம் பெறும் ஹிஸாம் இப்னு அம்மாருக்கும், இமாம் புகாரி அவர்களுக்கும் இடையே தொடர்பு அருந்துள்ளது என இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் குறிப்பிட்டு, இந்த ஹதீஸ் ஏற்புடையதல்ல என்றும் அதனால், இதைக் கொணடு பாடல், இசை, இசைக் கருவிகளுக்கு எதிரான ஆதாமாக மேற்கண்ட ஹதீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்.
ஆனால், மிகப் பெரும் ஹதீஸ் கலை வல்லுனராகிய ஷேக் இப்னுஸ் ஸலாஹ் தனது, உலூமுல் ஹதீஸ் என்னும் நூலில் மேற்கண்ட ஹதீஸ் முழு ஆதாரத்துடன், அறிவிப்பாளர் வரிசை சரியான முறையில் அமைந்தும், ஒரு ஹதீஸ் தரமானதாக அறியப்பயன்படும் அனைத்து முறைகளுக்கும் அதன் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, தரமான ஹதீஸ் என் சான்றையும் பெற்றுள்ளது என்ற கருத்தை வழங்கியுள்ளார். மேற்கண்ட இப்னு ஹஸ்ம் அவர்களின் கூற்றை மறுக்க, இப்னுஸ்ஸலாஹ் உடைய கூற்றே போதுமானது என இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரிக்கான விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார். (For Details, refer to vol.10. p.52. of the Salafi Edi. Cairo)
மேலும், இப்னு ஹஜர் அவர்களின் தனிப்பட்ட நூலான, தஃலீகத் தஃலீக் என்னும் நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகின்றது. இதன் மூலம் அல் ஜாமீஈ அஸ் – ஸஹீஹ் எனும் நூலில் பலவீனமான ஹதீஸாகத் தவறான முறையில் குறிப்பிடப்பட்டிருப்பதை, மேற்கண்ட தஃலீகத் தஃலீம் என்ற நூல் மறுத்து, தரமான ஹதீஸ் என்ற சான்றைத் தருகின்றது.
மேலும் இப்னு ஹஜர் அவர்கள், இப்னு ஹஸ்ம் அவர்களின் கூற்றை மறுத்து, மேற்கண்ட ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் அமைந்துள்ளது எனவும், தனது நூலான தஃலீகத் தஃலீக் – ல் சான்று பகர்ந்துள்ளார்.
மேலும் நவீன கால அறிஞர்களிடம் ஹதீஸ் பற்றி சரியான அணுகு முறை அல்லது ஞானம் இல்லாததின் காரணமாக, தவறான முடிவை அறிவித்து விடுகின்றார்கள்.
உதாரணமாக, யூசுப் அல் கர்ளாவி அவர்கள் தனது, அல் ஹலால் வல் ஹராம் ஃபில் இஸ்லாம் எனும் நூலில், இசை பாடல் சம்பந்தமாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை, அதன் கருத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றது அல்லது பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன என ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் கலை வல்லுநர்கள் கூறுகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு : மேலும், யூசுப் அல் கர்ளாவி அவர்கள் குறிப்பிடும், ஃபிக்ஹ் கலை வல்லுநர்கள், ஷரீஅத் சட்ட ஆராய்ச்சி பற்றி அறிஞர்கள் ஆவார்கள். புக்ஹ் கலை வல்லுநர்களுக்கும், ஹதீஸ கலை வல்லுநர்களுகு;, வித்தியாசம் உண்டு.
மேலும் ஹதீஸ் பற்றி விமர்சிக்க யூசுப் அல் கர்ளாவி அவர்கள், அல் புகாரி போன்றோ அல்லது அஹமத், இப்னு முயீன், அபுதாவூத், இப்னு அபி ஹாதிம், இப்னுஸ்ஸலாஹ், அல்- இராக்கி, இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஜர் போன்ற ஹதீஸ் கலை வல்லுநர் அல்ல.
அவர் பொதுவான மார்க்க அறிஞர்களான அல் கஸ்ஸாலி, இப்னுல் – அரபி, இப்னு ஹஸ்ம் போன்றவரே. இவர்கள் வழியாகத் தான் மேற்கண்ட ஹதீஸை யூசுப் அல் கர்ளாவி அவர்கள் பலவீனமானத என அறிவிக்கின்றார்கள். எனவே இது ஏற்புடையதல்ல.
மேலும் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் ஏராளமான ஸஹாபாக்களும், தாபியீன்களு; பாடல்களை ரசித்ததாகவும், அதில் அவர்கள் எந்த வித குற்றமும் காணவில்லை என்ற தவறான தகவலை தனது ஹலால் வல் ஹராம் ஃபில் இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 293 ல் குறிப்பிடுகின்றார்.
மேலும் யூசுப் அல் கர்ளாவி அவர்களும், இப்னுல் – அரபி, இப்னு ஹஸ்ம் அவர்களும் மார்க்க அறிஞர்கள் எனும் தங்களது தகுதியைத் தவறான முறையில் பயன்படுத்தி, தவறான தீர்ப்பு வழங்கியுள்ளார்கள் என இந்நூலின் மூல ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஏனெனில், எந்த ஹதீஸும் இல்லை என்பதற்கு முன், எனக்குத் தெரிந்த வரை என்ற வார்த்தையைச் சேர்த்திருப்பின் அவர்களது அடக்கத்தைக் காட்டியிருக்கும். (See Music and singing – Abu Bilal Musthafa A-Kanadip.17, FN No.58 and 59.)
மற்றும் காதி அபுபக்கர் இப்னுல்அரபி அவர்கள், பாடுவதைத் தடை செயக் கூடியதாக எந்த ஹதீஸும் இல்லை என்றும் இப்னு ஹஸ்ம் அவர்கள் பாடுவதையும், இசையையும் தடை செய்யும் அனைத்து ஹதீஸ்கள் தவறானவை, புனைந்துரைக்கப்பட்டவை என்கிறார்கள்.
மேற்கண்ட ஆய்வில், நாம் சுட்டிக் காட்டி இருக்கும் ஹதீஸானது, தரமானது என்ற நிலையைப் பெற்று, பாடல், இசைக்கு எதிரான தடையையும் அதற்குரிய சரியான ஆராதமாகவும் திகழுகின்றது.
2. புகாரி :
ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف
ஸஹீஹ் புகாரியிலிருந்து நாம் மேற்கோள் காட்டியுள்ள ஹதீஸின் அரபி மூலத்தில், நம் ஆய்வுக்குத் தேவையான பாகம் மட்டும் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதாவது, ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்கள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.
இதில் நம் ஆய்வுக்கு உட்படும் வார்த்தை معازف (மஆஸிஃப்) என்பது மட்டுமே. இது தான் இசைக் கருவிகளைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்லாகும். அரபி மொழியின் மூல அகராதியாகிய லிசானுல் அரப் என்ற நூலில் மஆஸிஃப் என்பது مزاف மிஸாஃப் அல்லது أزف அஸ்ஃப் என்ற சொல்லின் பன்மை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அர்த்தமாக, ஒரு பொருளைக் குறிப்பிடுவது அல்லது இயக்குதற்குரிய கருவி அல்லது பொழுது போக்கிற்காக அவர்களின் சப்தத்திற்கு ஏற்றவாறு தாளமிடக் கூடியது என்ற பொருள்களைத் தருகிறது. மேலும் மிஸாப் என்ற சொல், ஒருமையில் பெரிய மரத்தாலான மத்தளம் என்று எமன் மக்களால் அர்த்தம் கொள்ளப்பட்டதும் ஆகும். பேயர்ச்ச சொல்லாகிய அஸ்ஃப் ஆனது, معازف மஆஸிஃப் – ஐ இயக்கக் கூடிய செயலைக் குறிக்கும். அதாவது, கை மத்தளம் அல்லது அது போல அடித்து ஓசை எழுப்பக் கூடிய மற்ற கருவிகளை இசைப்பதைக் குறிக்கும்.
மேலும், மிகப் பழமையான அகராதியாகிய அல்-ஜவ்ஹரி அவர்களின் அஸ்-ஸிஹாஹ் – ல், மஆஸிஃப் என்பது இசைக் கருவிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அல்-ஆஸிஃப் என்பது, பாடுபவரையும், அஸ்ஃப் என்பது காற்றைக் கொண்டு ஒலி எழுப்பக் கூடியதாய் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்-ஸபீதி என்பவர் தனது, தாஜுல் அரூஸ் மின் ஜவாஹிரில் காமூஸ், என்னும் நூலில் மஆஸிஃப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். முஆஸிஃப் என்பது பொழுது போக்கிற்காகப் பயன்படுத்தக் கூடிய கருவிகள், அக் கருவிகள் மீது அடித்து ஒலி எழுப்பதலும் அல்லது புல்லாங்குழல் போல ஊதி ஒலி எழுப்புதலும் அல்லது மேளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தலும் அல்லது கைக் கொட்டு போன்றவற்றில் ஒலி எழுப்புதலும் அல்லது இது போன்ற இசைக் கருவிகளை பயன்படுத்துவதும் ஆகும் எனக் குறிப்பிடுகிறார். (Taajul -Aroos min Jawaahiril Qamoos vol.6 P.197)
மேலும் பாலைவனத்தில் மரங்களினூடே காற்று புகந்து எழுப்பும் விசில் போன்ற சப்தத்திற்கு, ஜின்களின் சப்தம் அதாவது அரபியில் ஆஸிஃபுல் ஜின் என்பர். ஆந்த ஆஸிஃப் என்ற வார்த்தை மஆஸிஃப், அஸ்ஃப் என்ற வார்த்தையாக இருக்கும் பொழுது, இசைக் கருவிகளை இசைப்பதையும், இசைக் கருவிகளையும் குறிப்பிடுகிறதோ அதே போல, அவ்வாறு எழும் ஒலி அலைகளுக்கு ஆஸிஃபுல் (ஆஸிஃபுல் ஜின் – ஜின்களின் சப்தம்) எனக் குறிப்பிடப்படுகிறது என இப்னுல் அஃதீர் என்பவர் தனது அந்-நிஹாயா ஃபீ கரீபில் ஹதீஸ் என்ற நூலில் குறிப்பிடுகிறார். (vol.3, p.230 of An-Nihaayah)
இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸஹீஹ் புகாரிக்கான விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில், அஸ்ஃப் என்பது பாடுவதைக் குறிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். (Fathhul Baari, vol.10. p.55)
மேற்கண்ட அறிஞர்கள், உலமாப் பெருமக்களின் கூற்றுப்படி மஆஸிஃப் என்ற சொல் கீழ்க்கண்ட அர்த்தங்களைப் பெற்றிருக்கிறது என தெளிவாகிறது.
அதாவது, இசைக்கருவிகள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அதுபோல உள்ள இசைக்கருவிகளிலிருந்து எழும்பக் கூடிய ஓசை அல்லது இசை, இசைக் கருவிகளுடன் இயைந்து பாடுவது என்பன போன்ற அர்த்தங்களைத் தாங்கி நிற்கின்றது என்பதை நாம் உணர முடிகின்றது. இவ்வளவு தெளிவிற்குப் பின்னும் அதற்கு வேரொரு அர்த்தம் புனைவது என்பது, மேற்கண்ட அறிஞர்களின் கருத்தை மறுப்பதுவும், தமக்கு இயைந்த வகையில் பொருள் கொள்ள நினைப்பதையுமே அச் செயல் குறிப்பிடும்.
மேலும், மேற்கண்ட விளக்கங்களின் மூலம் இசையும் அல்லது இசையுடன் இணைந்த பாடலும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆடுத்து, மஆஸிஃப்-டன் இணைந்து வரும் விபச்சாரம், மது, பட்டு அணிதல் போன்றவைகள் இஸ்லாத்தினால் தெளிவாகத் தடையைப் பெற்றிருக்கும் பொழுது, அதனுடன் இணைந்த மஆஸிஃப் (இசை, பாடல்) – ம் தடை செய்யப்பட்டதே என்பதை சொல்லாமலேயே விளங்க முடியும்.
இதை மறுப்பவர்கள், இஸ்லாத்தில் இசையும் பாடலும் அனுமதிக்கப்பட்டவையே என வாதிப்பவர்கள் மேற்கண்ட தடை செய்யப்பட்ட விபச்சாரம், மது, பட்டு அணிதல்ழூ ஆகியவையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என வாதிடுவார்களா? ஆக, தம் இச்சைக்கு அடி பணிந்து, தடைக்கு எதிராக வாதிடுபவர், இசைக்கான தடையை மட்டும் மாற்ற முனையவில்லை, இஸ்லாத்தினால் தெளிவாகத் தடை செய்யப்பட்டிருக்கும் விபச்சாரம்,மது, பட்டு அணிதல் ஆகியவற்றுக்கும் உள்ள தடையை நீக்க முனைகிறார் என்றே அர்த்தம் கொள்ள வேண்டி வரும். ழூ ஆண்கள் பட்டு அணிதல் ஹராம். பெண்கள் அணிந்து கொள்ளலாம்.
நாம் மேற்கண்ட தலைப்புக்கு, ஸஹீஹ் புகாரி குறிப்பிடும் மேற்கண்ட ஒரு ஹதீஸே சரியான ஆதாரமாகும். ஏனினும் இன்னும் அதை வலுப் பெறச் செய்ய மறற ஹதீஸ் கிரந்தங்களையும் பார்வையிடுவது அவசியமாகின்றது.
3) இப்னு மாஜா :
حدثنا عبد الله بن سعيد، قال : حدثنا معن بن عيسى عن معاويه بن صلح عن حاتم حريث ، عن مالك بن أبي مريم، عن عبدالرحمن بن غنم الأشعرئ عن مالك الأشعرى، قال : قال رسول الله صلى الله عليه وسلم ((ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها ، يعزف على رؤوسهم بالسعازف والمغنيات ، يخسف الله بهم الأرض ، ويجعل منهم القردة والخنازير
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜா – கிதாபுல் ஃபிதன்)
இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் ஸஹீஹான தரத்தில் அமைந்துள்ளது. மேலும், இதே வார்த்தை அமைப்புடன் பைஹக்கீயிலும், இப்னு அஸாக்கிர் – லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ் கலை மற்றும் பிக்ஹ் கலை அறிஞரான இப்னுல் கைய்யும் அவர்கள் ஸஹீஹான ஹதீஸ் என குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷேஷக் முஹம்மது நஸிருத்தீன் அல்-அலபானி அவர்கள் தனது, சில்சிலத்துல் அஹதீத் அஸ்-ஸஹீஹ் பாகம்.1 ஹதீஸ் எண்.90, பக்கம் 136-139 ல் ஸஹீஹான ஹதீஸ் என சான்று வழங்கியுள்ளார்கள். மேலும், காயத்துல் மராம், தக்ரீஜுல் ஹலாலி வல் ஹராம் எனும் அவரது நூலிலும் இது ஸஹீஹான ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
4) முஸ்னத் அஹ்மது :
حدثنا عبد الله ، حدثنا أبي ، حدثنا أبو أحمد ، حدثنا سفيان عن علي بن بذيمة ، حدثني بن حبير قال : سألت ابن عباس عن (أمور… وفيه سئل النبي صلى الله عليه وسلم عن أمور أجاب عليها في آخرالحديث): قال صلى الله عليه وسلم : ((إن الله حرم على أو حرم الخمر والميسر والكوبة ، وكل مسكر حرام)) قال سفيان قلت تعلي بن بذيمة : ماالكوبة؟ قال الطبل (رواه الإمام أحمد فى المسند)
முஸ்னத் அஹ்மது. பாகம்.1. பக்.289., பாகம்.2 பக்கம்.158 மற்றும் 171-172)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ் மது (அருந்துவதையும்) சூது (ஆடுவதையும்)| மற்றும் அல்-கூபாவையும் தடை செய்துள்ளான். மேலும் ஒவ்வொரு நச்சுப் பொருளும் தடை செய்யப்பட்டதே. இந்த ஹதீஸை தனக்கு அறிவித்த அலி பின் பதீமா அவர்களிடம் சுஃப்யான் அவர்கள், அல் கூபா என்றால் என்ன என்று வினவிய போது, அல்-கூபா என்றால் மத்தளம் என்று பதில் கூறினார்.
Ahmed’s Musnad vol.1. pp.289 and 350 : vol.2. pp.158.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
إن الله حرم على أمتي الخمر والميسر والمزر والكوبة والقنين، وزادني صلاة الوتر(رواه أحمد في مسند) முஸ்னத் அஹ்மத் பாகம்:2 பக்கம் 165 மற்றும் 167
நிச்சயமாக அல்லாஹ் மதுவையும், சூதாடுவதையும், தானியங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்டவைகளையும், மத்தளம் அல்லது மேளத்தை யும் (நரம்பினால் ஓசை எழுப்பக் கூடிய) கிதார் போன்றவற்றையும் எனது உம்மத்துக்கு தடை செய்துள்ளான். மேலும், (ஒற்றைப்படைத் தொழுகையான) வித்ரு – என் மீது அதிகப்படியாகக் கடமையாக்கி உள்ளான்.
இமாம் பைஹக்கீ அவர்கள் தனது சுஉபுல் மிஸ்காத்துல் மஸாபீஹிலும் இந்த ஹதீஸ் சரியான ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புhகம்.2 பக்.1276. எண்.4503.
அல் அல்பானி அவர்களுடைய ஸஹீஹுல் ஜாமிஇஸ் சகீர் – ல் சரியான விரிவான ஆதாரங்களுடன் சரிபார்க்கப்பட்டு, நல்ல தரமான ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகம் 1-2. புக்கம்.106 ஹதீஸ் எண்.1743-1744.
மேலும், அல்-அஹதீஸ் அஸ்ஸஹீஹ் எனும் நூலிலும் சரியான தரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகம்:4, பக்.283-285. ஹதீஸ் எண்:1708 மற்றும் பக்கம்422, ஹதீஸ் எண்:1806.
5. அல் ஹாக்கிம் :
ஆல்-ஹாக்கிம் அவர்கள் தனது நூலான அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன், எனும் நூலில் பதிவு செய்துள்ள ஹதீஸ் பின்வருமாறு அமைந்துள்ளது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் எனும் தோழருடன் கோர்த்துக் கொண்டு, நோயுற்று மரண நிலையிலிருக்கும் தன் மகன் இப்றாஹீமைக் காணச் செல்கின்றார்கள். தம் மகனை உயிர் பிரியும் வரை மார்பில் கிடத்தி வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உயிர் பிரிந்ததும் தம் மகனைத் தரையில் கிடத்தி விட்டு, கண்ணில் நீர் சொறிய அழுத விழிகளுடன் இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள், யா! ரசூலுல்லாஹ் தாங்களுமா அழுகின்றீர்கள்? என வினவ கீழ்க்கண்டவாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலிறுக்கின்றார்கள் :
قال صلى الله عليه وسلم (( إني لم أنه عن البكاء، ولكنى نهنيت عن صوتين أحمقين فاجرين : صوت عند نغمة لهم ولعب، ومزاميرالشيطان، وصوت عند مصيبة، لطم وجوه، وشق حيوب، وهذه ومن لا يرحم ل يرحم)).. .. الحديث (رواه الحاكم باسناد حسن)
Entitled Al-Mustadrak -alas saheehayn ; the hadeeth appears on p.40 of vol.4.
நிச்சயமாக நான் அழுவதைத் தடைசெய்யவில்லை. மாறாக,இரண்டு சப்தங்களைத் தடை செய்துள்ளேன். ஆவை வெட்கரமானதும், பாவகரமானதும் ஆகும்.
முதலாவது, ஷைஷத்தானின் கருவிகளை இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவதும்| இரண்டாவதாக, துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் தடை செய்துள்ளேன்.
எனது, இந்த அழுகையானது, மனதில் ஏற்பட்ட துக்கத்தினால் இரக்கம், கருணை காரணமாக வெளிப்பட்டதாகும். ஏவர் மனதில் கருணை இரக்கம் இல்லையோ அவர் இதனை அடைந்து கொள்ள மாட்டார்.
குறிப்பு : இந்த ஹதீஸின் தரம், அறிவிப்பாளர் வரிசை போன்ற மேலும் விபரங்கள் தேவை இருப்பின், அல் அல்பானி அவர்களின் சில்சிலத்துல் அஹதீத் அஸ்-ஸஹீஹ் பாகம்:1, ஹதீஸ் எண்.428 லும் மேலும், அல்-பகாவி அவர்களின், சர்ஹுஸ் ஸுன்னாஹ், பாகம்:5, பக்கம்431 லும் பார்வையிடவும்.
6. அபுபக்கர் அஷஷ்-ஷஷாபிஈ – அர் ருபாயியத்
மேலே அல் ஹாக்கிம் – ல் வ்நத ஹதீஸை உறுதிப்படுத்துமுகமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
عن أنس بن مالك مرفوعا : (صوتان ملعونان، صوت مزمار عند نعمة، وصوت ويل عند مصيبة)) (رواه أبوبكر الشافعي باسند حسن)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
காற்றினால் ஒலி எழுப்பக் கூடியதும் (றiனெ)| புல்லாங்குழல் (ஆணைஅயயச) போன்றும் உள்ள இரு இசைக்கருவிகளை சந்தோசமான, உற்சாகமான நேரத்திலும், மற்றும் துக்ககரமான நேரத்திலும் இசைப்பதை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
அல் பஸ்ஸார் அவர்களின் அல் முஸ்னது எனும் நூலில் சிறிய வார்த்தை மாற்றங்களுடன் மேலே உள்ள ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல் ஹாபிழ் நூருத்தீன் அல்-ஹைதமீ அவர்களின் மஜ்மாஅ அஸ்-ஸாவாஇத் பாகம்:3 பக்கம் 13 ல் சரியான அறிவிப்பாளர் தொடருடன் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதுவரை இசைக்கு எதிராக நாம் கண்டு வந்த குர்ஆனிய மற்றும் சுன்னா (ஹதீஸ்) வின் ஆதாரங்களும் மிகத் தெளிவான முறையில் தடையைக் கொண்டு அமைந்துள்ளன எனால்.
கடைசியாக உள்ள மூன்று ஹதீஸுகளிலும் கையாளப்பட்ட இசைக்கருவிகளாவன :
இசைக் கருவிகள் (பொதுவாக அனைத்து இசை எழுப்பக் கூடிய கருவிகளும்.
புகாரி, இப்னு மாஜா
المعازف
மத்தளம்
அஹ்மது
والكوبة
கிதார் (நரம்பு கொண்டு இசைக்கும் கருவிகள்.)
பொதுவாக அரபு நாடுகளில் பயன்படுத்தப்படும் கிதார் போன்ற ஒரு வகை இசைக்கருவி)
அஹ்மது
والقنين
காற்று கொண்டு ஊதி இசைக்கும் கருவிகள் – ஐஷஷத்தானின் ஊதுகுழல்)
அல் ஹாக்கிம்
ومزاميرالشيطان
காற்று கொண்டு ஊதி இசைக்கும் கருவிகள் – ஷைஷத்தானின் ஊதுகுழல்)
அர் ருபாயியத்
مزمار
மேலே தொகுத்துத் தரப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸுகளில் கையாளப்பட்டவைகளாகும். இன்றுள்ள இசைக் கருவிகள் அனைத்தும் மேலே உள்ள தன்மையில் ஏதாவது ஒன்றைப் பெற்றுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். மேலும், நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸின் தரங்களும் நல்ல தரமானவையாகவே உள்ளன எனும் போது, நிச்சயமாக இறைவன்! இந்த சமுதாயத்தின் மீது இசையையும் அதனுடன் பாடப்படும் பாடலையும் தடை செய்தே வைத்திருக்கின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதற்கு மேல் மேலதிக விளக்கம் தேவை இல்லை என்பது உண்மையான முஃமினுக்கு உள்ள அடையாளம் என்பதை கீழ்வரும் குர்ஆனிய வசனம் குறிப்பிட்டுக் கூறி நிற்கிறது.
எவருக்கு (அவர்களை அழித்தது பற்றி சிந்தித்துணரும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு அல்லது மனமுவந்தவராக செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது.) (காஃப்:51:37)
முஸ்லிம்
‘இது கூடும்’ ‘இது கூடாது’ என்று நாமாக சுயமாக சொல்வதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் எந்த மனிதருக்கும் கொடுக்கவில்லை. ஒன்றை நாம் வெறுப்பதால் அது ஹராமாகவோ ஒன்றை நாம் விரும்புவதால் அது ஹலாலாகவோ ஆகி விடாது. நம்முடைய விருப்பு வெறுப்பைக் கடந்து இதற்கான இஸ்லாமிய வழிகாட்டல் என்னவென்று அறிவதே அறிவுடமையும், இறைவனுக்கு பிடித்தமான செயலுமாகும்.
வட்டிப் போன்று, விபச்சாரம் போன்று, போதையை உட்கொள்ளுதல் போன்று மாற்றுக்கருத்து இல்லாமல் தடுக்கப்பட்ட நிலையில் இசையை வைத்துப் பார்ப்பதற்கு ஆதாரங்கள் எதுவுமில்லை.
வேற்று மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட தமிழ் இஸ்லாமின் இசைப்பற்றிய கட்டுரையையே ஒன்றுக்கு பலமுறை படியுங்கள். இசை ஹராம் என்று சொல்லுவதற்கான ஆதாரங்களை தெளிவாக எடுத்துக்காட்ட முடியவில்லை. மூலக்கட்டுரை இப்படியும் அப்படியுமாக சமாளித்துதான் தன் கருத்தை நிலைநாட்டியுள்ளது.
சினிமா பாடல்கள் கேட்கலாமா…?
சினிமாப்பாடல்களில் அர்த்தமுள்ளப் பாடல்களும் உண்டு, சினிமாவைத் தவிர்த்த கிராமிய கூத்து, கிராமியப்பாடல்கள், இஸ்லாமிய?ப் பாடல்கள் போன்றவற்றில் மோசமானவையும் உண்டு. அர்த்தத்திற்காக பாடல்கள் ரசிக்கப்பட்டால் பாடல்களின் அர்த்தத்தைப் பொருத்துதான் கூடும் கூடாது என்று சொல்ல முடியும். இசைக்காக பாடல் ரசிக்கப்படுகின்ற நிலை வந்தால் அது வெறும் கேலி பொழுது போக்கு, நேரத்தை வீணடித்தல் போன்ற காரியங்களில் நம்மை இழுத்துச் செல்லும் என்பதால் தவிர்த்து விட வேண்டும்.
source: தமிழ் இஸ்லாம்.com abdul azeez, abudhabi.