Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜன்னல் கைதிகள்!

Posted on February 28, 2009 by admin

[ இங்கு சில ஆலிம்களே, “பெண்கள் எப்படி கொஞ்சம் படித்துவிட்டு ‘ஆலிமா’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்? நாங்கள் படித்த ஏழுவருட படிப்பிற்கு ஈடாகுமா அது?” என கேள்விக்கணை தொடுப்பது ஆணாதிக்க மனப்பான்மையை பிரசவிக்கிறது! இப்பேச்சுக்கள் தாழ்வு மனப்பான்மையைத்தானே தாரகைகளுக்கு தரும்.

நாளுக்குநாள் இஸ்லாமிய வட்டாரத்தின் மறுபக்கத்தில் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்படுகிறது ஆலிம்களும் சீர்குலைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை பொது ஜன இதழ்களில் வெளிவராத செய்தியாகும்.

மலர்க்கண்காட்சிக்கு பெயர்போன மாவட்டத்தின் அடிவாரத்தில் அமைந்த, பிரபல ஆலிம்கள் நிறைந்த அமைதியான ஊர் அது. ஒரு இளவயது ஆலிம் கர்ப்பநிலையிலும் தன் மனைவியை, ஏற்கனவே ஏற்பட்ட சண்டை சச்சரவால் தாய்வீட்டுக்குச் சென்றபோதும் ஆலிம் கணவரின் “இனி அடிக்க மாட்டேன்” என்ற சத்தியத்தின் பேரில் தன்னை நம்பிவந்தவளை மீண்டும் அடியாய், உதையாய் சித்ரவதை செய்து மருத்துவமனையில் சேர்த்து கடும் வேதனை, சோதனைகளுக்கிடையே அவளின் ஆன்மா மீண்டும் மீளாவகையில் சொர்க்கம் போய்ச் சேர்ந்தது, மறக்க முடியாத ஒன்று. ஆம்! நிஜமாகவே அக்கர்ப்பிணி காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி …) ஊர் முழுக்க இப்பேச்சு.

“கண்கள் என்னவோ வெண்ணிலாவை தரிசித்த போதும், கைகள் இரண்டும் ஜன்னல் கம்பிகளில் தான்” என்ற கவிதை எவ்வளவு ஆழமானது! பெரும்பான்மையான பெண்கள் உடலியலில் உயர்ந்திருந்தாலும் மனவியலில் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதன் விளைவாய் அவர்களின் ஆளுமை சிதறுகிறது, இருபாலருக்கும் இது பொருந்தும் என்றாலும் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.]

ஜன்னல் கைதிகள்!

பிரெஞ்சுப் பெண்ணறிஞர் சிமோன்டி போவ்வியர் சொல்வார்: “ஆணுலகும், பெண்ணுலகும் ஒன்றல்ல. சமூக அமைப்பு மாற்றப்படும் வரை உலகம் ஆணுலகமாகவே நீடிக்கும்” இவரின் இதயத்துடிப்பு இன்றளவும் உலகில் ஒலித்துக் கொண்டுதானே இருக்கிறது! எத்திசை நோக்கினும் பெண்கள் இரண்டாம்பட்சமாகத்தானே மதிக்கப்படுகின்றனர்?

எத்துறையிலும பெண்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வதே இங்கு நோக்கமாகிவிட்டது. இதனால் சமூகத்திற்குத்தான் இழுக்கு, பெண்களுக்கல்ல என பெண்கள் வருத்தப்படுவதை மனமார உணரமுடிகிறது. எனினும் நடைமுறைச்சிக்கல் நாளுக்குநாள் அதிகப்பட்டுக் கொண்டுதான் வருகிறது.

இந்தியச் சமுதாய வாழ்க்கையில் பெண்களின் தன்மைபற்றியும். அந்தஸ்து பற்றியும் தெளிவற்ற கண்ணோட்டமே அதிகமாக நிலவுகிறது. ஒன்று தெய்வமாக்கப்படுகிறாள் அல்லது இழிபிறவியாய் இகழப்படுகிறாள். இவ்விருநிலைத் தோற்றம் முற்றிலும் ஒன்றுக்கொன்று முரணானவை. இந்நிலை முதலில் நடுமைப்படுத்தப்பட வேண்டும். இருபாலர் இணைந்து வாழ்வதில்தான் இணையற்ற இன்பம் இருக்கிறது என்ற யதார்த்த வாழ்வைப் புரியாமல் ஆணை அண்டிவாழும் பெண்குலத்தை எங்கும் நடமாட விடாமல், நொண்டியாக்கி வைத்திருப்பதில் என்ன பிரதிபலன் எதிர்பார்க்கப் படுகிறதோ தெரியவில்லை. தனது “ஆணியம்” அசைவு கண்டுவிடும் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இங்கு இருக்கமுடியும்?

மத்தளம், கால்நடைகளோடு கன்னியரையும் இணைத்துச் சொல்லி இருப்பது ஈண்டு நோக்கத்தக்கதன்றோ? இந்நிலையில்தான் மக்காவில் தோன்றிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

பெண்களுக்கு கல்வி, கண்ணியம், உரிமை வழங்கியதும், இதன் பிரதிபலிப்பு அப்போதே இலங்கியதும் கவனிக்கத்தக்கதாகும். மாதவிடாய் பற்றிய சந்தேகங்களைக்கூட அசிங்கப்படாமல் அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவையில் மாதர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்களென்றால் அம்மாதுகளின் அறிவுத்தாகத்தை என்னவென்று சொல்வது? நபித்தோழியர்கள் அனைவருமே குர்ஆனிய கருத்துக்கள் யாவற்றையுமே உள்வாங்கி இருந்தார்கள். இருவகை வாழ்விலுமே சிறந்து விளங்கினார்கள். ஆனால் இன்றோ?

நிஸ்வான் மத்ரஸாக்கள் நிறைய இருந்தும் இன்னும் விடியலின் வெளிச்சம் வெளிவரவே இல்லை. “பொம்பள மசாலாவையெல்லாம் ஏத்துக்கமுடியுமா? என கல்வியிலும், ஆண்கல்வி – பெண்கல்வி என பிரித்துப் பார்ப்பது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று.

ஆண்கள் சொல்லும் சட்டங்களை மட்டுமே சபையில் அங்கீகரிப்பது என்ற எழுதப்படாத சட்டத்தை ஏற்கமுடியுமா? பன்னூறு நபிமொழிகளை நபித்தோழியர்கள் அறிவித்ததைத்தானே இன்றும் இஸ்லாமியத்தில் அமுல்படுத்திக் கொண்டிருக்கிறோம்? பிறகு நாம் “ஆலிமா, முபல்லிகா” என்று அப்பெண்களின் இஸ்லாமியக் கல்வித் தரத்தில் சின்ன முத்திரையிடுவதில் அர்த்தமில்லையே! இங்கு சில ஆலிம்களே பெண்கள் எப்படி கொஞ்சம் படித்துவிட்டு “ஆலிமா” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்?

நாங்கள் படித்த ஏழுவருட படிப்பிற்கு ஈடாகுமா அது? என கேள்விக்கணை தொடுப்பது ஆணாதிக்க மனப்பான்மையை பிரசவிக்கிறது! இப்பேச்சுக்கள் தாழ்வு மனப்பான்மையைத்தானே தாரகைகளுக்கு தரும். இன்னும் இஸ்லாமை அறியாத ஆலிம்களும்(?) இருக்கத்தானே செய்கிறார்கள்.

நாளுக்குநாள் இஸ்லாமிய வட்டாரத்தின் மறுபக்கத்தில் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்படுகிறது. ஆலிம்களும் சீர்குலைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை பொது ஜன இதழ்களில் வெளிவராத செய்தியாகும். சமீபத்தில் மலர்க்கண்காட்சிக்கு பெயர்போன மாவட்டத்தின் அடிவாரத்தில் அமைந்த, பிரபல ஆலிம்கள் நிறைந்த அமைதியான ஊர் அது.

ஒரு இளவயது ஆலிம் கர்ப்பநிலையிலும் தன் மனைவியை, ஏற்கனவே ஏற்பட்ட சண்டை சச்சரவால் தாய்வீட்டுக்குச் சென்றபோதும் ஆலிம் கணவரின் “இனி அடிக்க மாட்டேன்” என்ற சத்தியத்தின் பேரில் தன்னை நம்பிவந்தவளை மீண்டும் அடியாய், உதையாய் சித்ரவதை செய்து மருத்துவமனையில் சேர்த்து கடும் வேதனை, சோதனைகளுக்கிடையே அவளின் ஆன்மா மீண்டும் மீளாவகையில் சொர்க்கம் போய்ச் சேர்ந்தது, மறக்க முடியாத ஒன்று. ஆம்! நிஜமாகவே அக்கர்ப்பிணி காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி …) ஊர் முழுக்க இப்பேச்சு இன்னும் ஆறவில்லை.

“இந்த ஆலிம்சாக்கள் அவனை இன்னும் உள்ளுரிலேயே ஒன்றும் செய்யாமல் வைத்திருக்கிறார்களே!” என்பதுதான் ஒவ்வொரு பெண்ணின் தீராத ஆதங்கமாய் இருக்கிறது. இருந்தும் என்ன செய்வது. ஒடுக்கப்பட்ட பெண்களால் என்ன செய்யமுடியும் இறைவனிடம் துஆ செய்வதை விட. இதன் எதிரொலி பெண் சமுதாயத்தை ஊனப்படுத்தும்போதுதான் பெண்களாலேயே பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எனினும் என்ன செய்வார்கள் அடிமைச்சங்கிலிகள்? சரி! பெண்ணுரிமையாவது பேணப்படுகிறதா?

நடைமுறையில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். “கண்கள் என்னவோ வெண்ணிலாவை தரிசித்த போதும், கைகள் இரண்டும் ஜன்னல் கம்பிகளில் தான்” என்ற கவிதை எவ்வளவு ஆழமானது! பெரும்பான்மையான பெண்கள் உடலியலில் உயர்ந்திருந்தாலும் மனவியலில் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதன் விளைவாய் அவர்களின் ஆளுமை சிதறுகிறது, இருபாலருக்கும் இது பொருந்தும் என்றாலும் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் இயற்கையான சக்தி உள்ளது. அது தன்னை அறியப்போராடுகிறது. இந்த அகப்பண்பு ஒடுக்கப்பெற்றால் அவர் மனநோயுறுகிறார். அவரது ஆளுமைத்திறன் சிதறுகிறது என மனிதநேய உளவியலர்கள் உரைத்துள்ளனர். “நம்மால் என்ன செய்ய முடியும்? இதை விட்டால் வேறுவழியில்லை!” என்ற மனக்குமுறலுடன்தான் அநேக காரிகைகள் காலந்தள்ளுகின்றனர். இந்திய தேசம் 1937-ல் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிற்று என்றால் எத்தனை நூற்றாண்டுகள் சொத்தைகளாய் அவர்கள் தங்கள் வாழ்வை கழித்திருப்பர். கனநேரம் சிந்திக்க வேண்டாமா?

1889-ல் பாரீஸ் நகரில் பெண்ணியம் காப்பதற்காக பெருமளவில் பெண்கள் பலரும் ஒன்று திரண்டனர். அம்மாநாட்டுப் பந்தலில் ஜெர்மனைச் சார்ந்த “க்ளாரா ஜெட்கின்” என்ற வீராங்கனையின் குரல் பாட்டாளிப் பெண்களுக்காக ஓங்கி ஒலித்தது. இப்பெண்மணியின் வேண்டுதல்படிதான் இன்றும் மார்ச் 8 உலக மகளிர் தினமாக 1910 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி தன்னுரிமையை கேட்டுத்தான் பெற வேண்டிய நிலை இதர சமுதாயங்களில் இருந்திருக்கிறது.

இஸ்லாமோ தாராளமாய் தார்மீக உரிமைகளை பெண்களுக்கு பெருமளவு தந்திருக்கிறது எனினும் யானை தன் பலம் அறியாது என்பது போல் இன்றும் காலந்தள்ளிவருவது கவலையையே அளிக்கிறது. சுதந்திரம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடன் பெற்றோரை மதியாதுமனம் போன போக்கிலே உலாவரும் நவீன இஸ்லாமியப் பெண்களை எவ்வகையிலும் இஸ்லாம் வரவேற்பதேயில்லை.

ஜப்பானிய பெண்களைப் பற்றி டோக்கியோவில் இயங்கும் சோஃபியா பல்கலைக்கழகப் பேராசிரியர் “மூரியல் ஜோலிவட்” சொல்லி இருப்பது இங்கு சீர்தூக்கி சிந்திக்கத்தக்கதாகும். 1980 கள் வரையில் தன்மானமுள்ள எந்தப்பெண்ணும் மூடாத கைகளுடன், ஏன் மூடாத கால்களுடன் வெளியே சென்றதே இல்லை” என்கிறார்.

இறைவா! எங்களுக்கு நேரான நடுநிலையான பாதையை காட்டுவாயாக! என ஐவேளை தொழுகைகளில் அயராது பிரார்த்தித்துக் கொண்டாலும் தொழுகை அறைக்கு வெளியே நடுநிலை நடைமுறையை காணமுடிவதில்லை. ஏழைக்குடும்பங்கள் நாளுக்கு நாள் ஏழ்மைப்படத்தான் செய்கிறது, உதவும் கரங்கள் இவர்களின் பக்கம் நீட்டப்படுவதில்லை. செல்வந்தர்களோ அனுதினமும் மேலைநாட்டு நாசகார நாகரீகங்களை இறக்குமதி செய்து கொண்டே இருக்கின்றனர். இரு சமூகமும் இணையும் போதுதான் வாழ்வில் வெளிச்சம் தென்படும்

‘jazaakallaahu khairan’ -சிந்தனை சரம்

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

42 + = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb