Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மறைந்திருக்கும் உண்மைகள்

Posted on February 27, 2009 by admin

“பூமியிலோ வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணு அளவும் (நபியே) உம் இறைவனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை, இவற்றைவிட சிறியதோ அல்லது பெரியதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்டாமலில்லை.” (அல்குர்ஆன் 10:61)

“ரிச்சர்டு இயர்சன்” என்பவர் ‘INVISIBLE OBVIOUS’ என்கிற கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் பல ஆய்வுகளை மேற்கொண்டு கோடிட்டு காட்டுகிறார்.

இந்த கண்ணுக்குத் தெரியாத, அறிவிற்கு புலப்படாத, நிறைய சங்கதிகள் தற்செயலாக விஞ்ஞானிகளுக்கு தெரிந்து, அதைப்பற்றி தீர்க்கமாக ஆராய்ந்து உண்மைகளை வெளியே கொண்டு வந்து நோபல் பரிசு கிடைக்குமளவுக்கு கூட அவர்களுக்கு அவர்களது கண்டுபிடிப்புகள் இருந்திருக்கிறது. அதுவரையிலும் அந்த உண்மைகள் மறைந்தே இருந்திருக்கிறது.

1928-ல் அலெக்ஸாண்டர் பிளமிங், தான் ஒருவாரத்திற்கு முன் சாப்பிட்ட ரொட்டித்துண்டின் மிச்சங்கள் மீது பூசனம் பூத்து நாற்றம் அடித்துக் கொண்டிருந்தன. அதை எடுத்து வெளியே வீசப்போன பிளமிங் திடீர் என்று ஒரு யோசனை தோன்றியது. ரொட்டியின் ப+சனத்தை மைக்ரோஸ் கோப்புக்குக் கீழே வைத்து ஆராய அங்கே நிமோனியா முதற்கொண்டு மனிதனுக்கு பலவிதமான வியாதிகள் வரக்காரணமான பாக்டீரியாக்களைப் பூத்துப் போன பூசனம் வதைத்து சாகடித்திருந்தது. (நன்றி: ‘ஜமா அத்துல் உலமா’ மாத இதழ், மார்ச் 2008)

நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொல்வதற்கு உலகத்தின் விஞ்ஞானிகள் அத்தனை பேரும் மைக்ரோஸ்கோப்புக்கு அடியில் தேடிக் கொண்டிருந்த ஆயுதம், ரொட்டிப் பூசனத்தில் ஒளிந்து கிடந்தது. இந்த பூசனத்திலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதுதான் ‘பென்சிலின்’ என்னும் மாமருந்து. இது மனித குலத்திற்கு உயிர்காக்கும் அருமருந்தாகிவிட்டது.

நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைப் படைத்தவனும் அல்லாஹ்தான், அவற்றை அழிக்கும் மருந்தை பூத்துப்போன பூசனத்தில் புகுத்தியவனும் அவன்தான்.

இதுபற்றி குர்ஆனில் அல்லாஹ்,

“பூமியிலோ வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணு அளவும் (நபியே) உம் இறைவனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை, இவற்றைவிட சிறியதோ அல்லது பெரியதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்டாமலில்லை.” (அல்குர்ஆன் 10:61)

அல்லாஹ் மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை சாதாரண பிரஜை முதல் விஞ்ஞானி வரை தற்செயலாக கவனிக்கும் பொருட்டு வெளிப்படுத்துகிறான்.

தொழில் புரட்சியைத் துவக்கிவைத்த ‘ஜேம்ஸ்வாட்’டின் கண்டுபிடிப்பு ஓர் உதாரணம். தன் வீட்டுப்பானையில் கொதித்த நீராவி அதன் மூடியை மேலெழச் செய்வதைக் கவனித்தார். அதில் நீராவி இன்ஜினுக்குரிய யுக்தி தோன்றியது. இதே பானை நீராவியை யுகம் யுகமாகப் பலர் பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதனுள் பொதிந்திருந்த யுக்தி வெளிப்படையாகத் தோன்றவில்லை.

இதுமாதிரியே மனிதக் கண்களுக்குப் புலப்படாதிருந்த நுண்ணுயிரிகளை முதன் முதலாக 1683-ல் கண்டவர் ‘லேவன் ஹாக்’ என்னும் ஹாலந்து நாட்டவர். இவர் மருத்துவரோ. விஞ்ஞானியோ அல்ல துணிமணிகள் விற்பனை செய்யும் ஒரு வியாபாரி. பொழுதுபோக்கிற்காக லென்ஸ் தயார் செய்வதும், அவற்றைக் கொண்டு உருப்பெருக்கி கருவிகளை அமைப்பதும் அந்த உருப்பெருக்கி மூலம் பலவகைப் பொருட்களைக் கூர்ந்து பார்ப்பதும் அவருடைய பொழுதுபோக்கு. தற்செயலாக தாம் கண்டறிந்த நுண்ணுயிரிகளைப் பற்றி பிரிட்டிஷ் அறிவியல் கழகத்திற்கு தெரிவித்தார்.

மறைவாக வாழ்ந்த நுண்ணுயிர்களைப் பற்றி உண்மைகளைக் கண்டவர் சாதாரண துணிவியாபாரி ‘லேவன்ஹாக்’.  இராசாயனத்துறை ஆராய்ச்சியின் முன்னோடி என்று புகழப்படுவர் ‘

அல்லாஹ் நாடிவிட்டால் மருத்துவர் தேவையில்லை. சாதாரண பிரஜைகளால் கூட சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.’

அல்லாஹ் மறைந்திருக்கும் சில உண்மைகளை சிலபேர்களின் மனதில் ஏற்படுத்தியும் சிலபேர்களின் கனவுகளின் மூலமாக தெரிவித்தும் உலகுக்கு தந்துள்ளான்.

லேவன்ஹாக்’. அல்லாஹ் நாடிவிட்டால் மருத்துவர் தேவையில்லை. சாதாரண பிரஜைகளால் கூட சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பிரீஸ்ட்டிலி’. இவர்தான் பிராண வாயுவான ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர். ஆனால் ஒரு பொருள் எரிவதற்கு மிகத் தேவையானது இதே ஆக்ஸிஜன்தான் என்பதைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டு இளம் வழக்கறிஞர் ‘ஆண்ட்ருவான்லோவோன் லவ்வாஸ்யே’ என்பவராவார். எரிவது சம்பந்தமான மறைவான உண்மைகளை அல்லாஹ் இந்த வழக்கறிருக்குத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டினான்.

லியனார்டோ டாவின்சி, உலகப்பிரசித்தி பெற்ற ‘மோனலிசா’ என்கிற ஓவியத்தை வரைந்தவர். 500 ஆண்டுகளுக்கு பின்புதான் மனிதன் கண்டுபிடிக்க இருக்கும் ஹெலிகாப்டரிலிருந்து பீரங்கி வரையிலான பல கண்டுபிடிப்புகளைத் தொலை நோக்கோடு கற்பனை செய்து காகிதத்தில் அக்காலத்திலேயே வரைந்தவர், அதோடு மட்டுமல்லாமல் இவர் பாராசூட்டைப்பற்றியும் கடிகாரம் கண்டுபிடிக்காத நாளில் அதை சிந்தித்து வரைந்துள்ளார்.

மேலும் தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை கற்பனையாக வரைந்தார். தான் வரையும் ஓவியத்தில் ஒளியையும் நிழலையும் ஒரு சேரக்கொண்டு வந்த உலகின் முதல் ஓவியர். இந்த யுக்திதான் பிற்காலத்தில் காமிரா கண்டுபிடிக்க அடிப்படைத் தத்துவத்தைக் கொடுத்தது.

இதிலே மிகப்பெரிய பிரமிப்பு என்னவென்றால், இவரின் காலத்திலே மேலே சொன்ன எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும் சிறுதுளிர் விடக்கூட ஆரம்பிக்கவில்லை என்பதுதான். பின் எப்படி இவைகளைப் பற்றியெல்லாம் கற்பனையில் வரைந்தார்? அல்லாஹ்தான் அவர் மனதில் அப்படிப்பட்ட எண்ணத்தை வளர்த்திருக்க வேண்டும். மறைந்திருக்கும் உண்மைகளான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அவருடைய தூரிகை வாயிலாக வெளி உலகுக்கு வந்தது.

மனிதனால் கண்டுபிடிக்க முடியாத பல பலவற்றுக்கு தீர்வு அல்லாஹ் படைத்திருக்கும் ஜீவராசிகளில் கிடைத்திருப்பதை குர்ஆனில் அல்லாஹ்,

“தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டுடிமன்பதை அவருக்கு அறிவிப்பதற்காக, அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிக்கும் பொருட்டு) பூமியைத் தோண்டிற்று…” (அல்குர்ஆன் 5:31)

மனிதன் இறந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பதை காகத்தின் மூலமாக அடக்கம் செய்வதை ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனாருக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.

கடலின் ஆழத்தை அளக்கும் கருவி, ஒலியை எழுப்பி அதை கடலின் அடிமட்டம் வரைப் போய் மோதித் திரும்பும் எதிரரொலியின் நேரத்தைக் கொண்டு கடலின் ஆழத்தை அளக்கிறார்கள். இந்த தத்துவம் வெளவாலுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் இயல்புகளிலிருந்து விஞ்ஞானிகள் கண்டனர்.

வெளவால் இருட்டில் மோதாமல் பறப்பதற்கு அது (Ultra Bonic) கேளாஒலியை எழுப்பி, முன்னால் இருக்கும் தடுப்புகளில் பாய்ச்சி திருப்பி வரும் எதிரொலியை கணக்கிட்டு மோதாமல் பறக்கிறது. இந்தத் தத்துவத்தால்தான் ‘கடல் ஆழமானி’யை உருவாக்க முடிந்தது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb