Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹுதைபிய்யா மக்காஹ் வெற்றிக்கு ஓர் அடிக்கல்

Posted on February 25, 2009 by admin

Image result for hudaibiyah treaty

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறியது போன்று ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வெற்றி தானா? நபி பெருமானார்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களே அதை வெற்றி என்று சொன்ன பிறகு அதிலென்ன சந்தேகம் இருக்க முடியும்! 

உம்ரத்துல் களா

ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்த ஆண்டு, அதாவது ஹிஜிரி 7ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில், ஹ{தைபிய்யாவில் விட்ட உம்ராவை களாச் செய்தார்கள்.

குறைஷிகளிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (மக்காவை விட்டு) வெளியேறும் படி உத்தரவிட, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வெளியேறி விட்டார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு,  நூல் புகாரி 4252)

முதல் மூன்று சுற்றுக்களில் ஓட்டம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்த போது,’யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்’ என்று இணை வைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வத்துக்குமு; ருக்னுல்யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கட்டளையிடவில்லை. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்  ரளியல்லாஹு அன்ஹு,  நூல்: புகாரி 1602)

அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஒப்பந்த விதிகளுக்குக் கொஞ்சமும் மாறு செய்யாமல் மிகக் கண்ணியமான முறையில் தமது உம்ராவை நிறைவேற்றி விட்டு, மூன்று நாட்களில் திரும்பச் சென்றார்கள். (பார்க்க: புகாரி 2701)

அடிவாங்கிய ஆலயத் தடுப்பு

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு உண்மையில் இது மகத்தான வெற்றியாகும். கஅபா எங்கள் கைவசம் உள்ளது. இங்கு முஹம்மது வருவதற்கு உரிமை கிடையாது என்று ஜம்பம் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் தங்களுடைய உரிமையை நிலைநாட்டி விட்டுப் போய் விட்டார்கள். இனி மேல் எப்போது ஹஜ் செய்யலாம்; உம்ரா செய்யலாம் என்பதையும் நிலைநாட்டினார்கள். இது நபிصلى الله عليه وسلمஅவர்களுக்கு ஹுதைபிய்யாவின் மூலம் கிடைத்த வெற்றியாகும்.

தாங்கள் சாதித்து விட்டோம் என்ற குறைஷிகள் சந்தோஷப்படுவதற்குரிய ஒரே நிபந்தனை, ஆலயத்திற்குள் வர விடாமல் தடுத்தது தான். ஆனால் இதில் அவர்களது ஆலயத் தடுப்பு நடவடிக்கை அடையாளம் தெரியாமல் ஆனது. இந்த வகையில் இது குறைஷிகளுக்குத் தோல்வியாகவே அமைந்தது.

எதிராய் முடிந்த இதர நிபந்தனைகள்

அவர்களுக்குச் சாதகம் என்று கருதிய நிபந்தனைகளில் மற்றொன்று மக்காவிலிருந்து யார் முஸ்லிமாக வந்தாலும் அவரைத் தங்களிடமே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதாகும். இந்த நிபந்தனையும் மண்ணைக் கவ்வியது. அதை இப்போது பார்ப்போம்.

Image result for hudaibiyah treatyகொள்கையை ஏற்ற குறைஷியர்

(சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த கால கட்டத்தில்) இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் நபி صلى الله عليه وسلمஅவர்களிடம் வந்தனர். உடநே நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள் அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். 91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள்’ என்னும் (60:10) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.

உடனே உமர் رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள், இணை வைக்கும் மார்க்த்திலிருந்த காலத்தில் தமக்கிருந்த இரு மனவிமார்களை அன்று தலாக் (விவாகரத்து) செய்து விட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொரு வரை ஸஃப்வான் பின் உமய்யா அவர்களும் மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு, நபி صلى الله عليه وسلمஅவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள்.அப்போது குறைஷிகளில் ஒருவரான  அபூபஸீர்رَضِيَ اللَّهُ عَنْهُஎன்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரை தேடிப் பிடிக்க குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர்.

அவர்கள் (நபிصلى الله عليه وسلم) அவர்களிடம்வந்து,’நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்’ என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபிصلى الله عليه وسلمஅவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹ{லைஃபாவை அடைந்தனர். அவர்கள் தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்று கொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள்.

அபூபஸீர் رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம் ‘அல்லாஹ்வின் மீதாணையாக!இன்னானே உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்’ என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, ‘ஆம், அல்லாஹ்வின் மீதாiணாக! இது மிக நல்ல வாள் தான். நான் இதை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்; மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்’ என்று சொன்னார். 

அபூபஸீர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள், ‘எனக்குக் காட்டு அதை நான் பார்க்கிறேன்’ என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோட மதீனா வரை சென்று விட்டார்;ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார் அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلمஅவர்கள் அவரைக் கண்ட போது’இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்’என்று கூறினார்கள்.

அவர் நபி صلى الله عليه وسلمஅவர்களிடம் சென்ற நின்ற போது, அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்’ என்று கூறினார்.உடனே அபூபஸீர்

رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் வந்து’அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி விட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்’ என்று கூறினார்கள். நபிصلى الله عليه وسلمஅவர்கள்,’இவரது தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்’ என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள், நபிصلى الله عليه وسلمஅவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.

சுஹைலின் மகன் அபூஜந்தல் رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்களும் குறை~pகளிடமிருந்து தப்பியோடி அபூபஸீர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பிறகு, குறை~pகளில் எவர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில் (இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர். (புகாரி 2731)

நிபந்தனையை மாற்றிய குறைஷியர்

ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப் பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களுடைய செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப் பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே (அபூபஸீரும் அபூஜன்தலும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்பழ அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் குறைஷிகள் கேட்டுத் தூதனுப்பினார்கள்.

மேலும், குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி صلى الله عليه وسلمஅவர்களிடம் வருகின்றாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்’ என்று கூறிவிட்டனர்.அப்போது தான் அல்லாஹ்

‘மக்காவின் மையப் பகுதயில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும் அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்… (ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்திய போது அல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும் நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்து தகுதியுடையோராகவும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்’என்னும் (48:24-26) வசனத்தை அருளினான். (புகாரி 2731,2732).

மக்காவிலிருந்து முஸ்லிமாக யார் மதுpனாவுக்கு வந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற குறைஷிகளின் இரண்டாவது நிபந்தனையும் சமாதியானது. அவர்களே அந்த நிபந்தனையை மாற்றி மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் முஸ்லிம்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறும் அளவுக்கு நிலைமை தலைகீழானது. இந்த அடிப்படையில் இது முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது.

புத்தாண்டு காலப் போர் நிறுத்தம்

மக்கள் அமைதியாக வாழ்வதற்காக (அடுத்த) பத்து ஆண்டுகளில் (இரு தரப்பினருக்கும் இடையில்) போர் இல்லை என்று உடன்படிக்கை ஏற்பட்டது. (அறிவிப்போர்: மிஸ்வர், மர்வான்நூல்: அபூதாவூத் 2385)

இந்த நிபந்தனைகளில் ஒன்று மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிளையினர் நபி (ஸல்) அவர்களுடனோ, அல்லது குறை~pகளுடனோ இணைந்து கொள்ளலாம் என்பதாகும். இதன்படி பனூகுஸாஆ கிளையினர் நபிصلى الله عليه وسلمஅவர்களுடன் இணைந்தனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளுடன் இணைந்தனர்.இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. ஹ{தைபிய்யா ஒப்பந்தத்தில் இணைந்த பிறகு பனூபக்ரி குலத்தைச் சேர்ந்த நவ்ஃபல் பின் முஆவியா என்பவர் பனூகுஸாஆ குலத்தைச் சேர்ந்த முனப்பிஹ் என்பவரை ஒரு நீர் நிலை தொடர்பான தகராறில் கொன்று விட்டார். இது இரு குலத்தாருக்கிடையில் மோதலாக அமைந்தது.  இச்சமயத்தில் மக்கா குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை மீறி, பனூபக்ர் குலத்தாருக்கு ஆயுத உதவி செய்ததுடன் அவர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் பனூகுஸாஆ குலத்தாரைத் தாக்கியும் வந்தனர்.இதனால் பனூகுஸாஆ குலத்தார் நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் உதவி கேட்டு வந்தனர். எனவே நபிصلى الله عليه وسلمஅவர்கள் குறைஷிகளைத் தட்டிக் கேட்கத் தமது தோழர்களைத் தயார் படுத்தினார்கள். (ஃபத்ஹுல் பாரி).

இந்த ஒப்பந்தமும் குறைஷிகளுக்குப் பாதகமாக அமைந்தது மட்டுமல்லாமல், இது தான் வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியான மக்கா வெற்றிக்கு அடிக்கல் நாட்டியது! அஸ்திவாரம் போட்டது!

இதைத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ், உமக்குத் தெளிவான ஒரு வெற்றியை அளித்தோம் என்று 48:1 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இந்த அத்தியாயத்தைத் தான் ஹ{தைபிய்யா ஒப்பந்தத்தின் போது உணர்ச்சிப் பிழம்பாய் மாறியிருந்த உமர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்களிடம் நபிصلى الله عليه وسلمஅவர்கள் மிகப் பொருத்தமாகவே ஓதிக் காட்டினார்கள். பின்னால் வெற்றியாக அமைந்த இந்த ஒப்பந்தம் குறித்து நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் நாம் கடுமையாக நடந்து கொண்டோமே என்று வருந்தி உமர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் பல வணக்கங்களைச் செய்கிறார்கள்.

நான் இப்படி (அதிருப்தியுடன் நபியவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன். (அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்: புகாரி 2731)

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 − = 19

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb