Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சுவனம் சேர்க்கும் மவுனம்

Posted on February 17, 2009July 2, 2021 by admin

சுவனம் சேர்க்கும் மவுனம்

  அபூ ஜமீல்   

ஆதமுடைய மக்களின் அநேக தவறுகள் அவர்களுடைய நாவுகளால் உண்டாகின்றன.

“இபாதத் (வழிபாட்டில்) மிகவும் எளிதானது மவுனம் கொண்ட நாவும், நற்குணமும் ஆகும்.”

“நீ நல்லதையே பேசு, இலைலையேல் மவுனமாக இரு.”

“யார் வாய்மூடி விட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார். வயிறு, வெட்க உறுப்பு, நாவு இவற்றின் தீங்கை விட்டும் காக்கப்பட்டவர் எவரோ அவர் முழுவதும் காக்கப்பட்டவர் ஆகிறார்.”

“எவன் அதிகம் பேசுவானோ, அவன் அதிகம் தவறு உள்ளவனாக இருப்பான். எவன் தவறுகள் உள்ளவனாக இருப்பானோ, அவன் அதிகம் பாவம் உள்ளவனாக இருப்பான். அவனுக்கு நரகம் மேலானதாகும்.” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

“இபாதத் பத்து பங்கு என்றால், மவுனம் ஒன்பது பங்காகும் மக்களை விட்டு தனித்து இருப்பது ஒரு பங்கு ஆகும்.”– நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்

“சிறையில் அடைக்க வேண்டிய பொருள் ஒன்று உண்டு என்றால் அது நாவுதான்.” – இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு

மேற்கண்ட பொன்மொழிகள் அனைத்தும் நாவை அடக்குவது பற்றியதுதான். நாவை தாராளமாக புழங்கவிட்டால் என்ன என்ன ஆபத்துகள் எல்லாம் ஏற்படும் என்பதை நாம் அறிவோம் ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவது அந்த நாக்குதான். நல்லவனை கொலையாளியாக்குவதும், கொலையாளியை குணவாளியாக்குவதும் அதே நாக்குத்தான். அதே நாக்குத்தான் கவனத்துக்கும் கொண்டுபோகும், நரகத்திலும் தள்ளிவிடும்.

நாக்கு ஒரு சதைத்துண்டுதான். சில அங்குலம்தான். அது செய்யக்கூடிய அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. கொடுமைக்கார அரசனின் நாவினால் (உத்தரவினால்) கோழக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைவார்கள். அதே நாவை நல்வழிக்கு திருப்பினால், இந்த உலகம் பூத்துக் குலுங்காதா?

நாக்கு சின்னதுதான். அதன் ஆற்றலைப்பார்த்தீர்களா? இனிப்பு, உரப்பு, துவர்ப்பு, கசப்பு, கைப்பு இவற்றை நன்கு பிரித்துக்காட்டும். குளர்ச்சியா, சூடா என்பதையும் தெரிவித்து விடும் உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளையும் சரளமாகப் பேசும். அவற்றில் உள்ள வல்லினம், மெல்லினம் இடையினம் எல்லாம் அதற்கு கைவந்த கலை. கொலை செய்ய வேண்டுமா? தூண்டும் மன்னிக்க வேண்டுமா? மன்னித்து விடும்.

நாவே வேலை வாங்கித்தரும் தேயிலை நிறுவனங்களில் எத்தனையோ வகையான தேயிலைகள் ரகம் ரகமாக பிரித்து தருவது இந்த நாக்குத்தான். இது எல்லாம் நாக்களாலும் முடியாது. இது சிலருக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட அருள்கொடை.

நொன்பு நோற்பது நல்லது தான். அந்த நாக்கை அடக்கிவைத்தால்தான் நோன்பு நிறைவேறும் இல்லையேல் பட்ழனி கிடந்ததுதான் மிச்சம். இந்த நாக்கு யாரையும் விட்டு வைக்காது. ஏழை, பணக்காரன், அறிஞன் யாரையும் பணிய வைத்துவிடும்.

நோன்பு நோற்பது நல்லதுதான். அந்த நாக்கை அடக்கிவைத்தால்தான் நோன்பு நிறைவேறும். இல்லையேல் பட்டினி கிடந்தது தான் மிச்சம். இந்த நாக்கு யாரையும் விட்டு வைக்காது ஏழை, பணக்காரன், அறிஞன் யாரையும் பணிய வைத்துவிடும்.

நாவினால் பேசிப்பேசி நரகம் போவதை விட ஊமையாக பிறந்தால் கவனம் போய்விடலாம். இன்று ஊமையர்கள், நாவன்மை படைத்தவர்களை விட சாதனைகள் புரியவில்லையா? சாதனை புரிய நாக்கு அவசியம் என்பது இல்லை. இன்று நாக்கினால் நல்லது நடைபெறுவதைவிட, தீமைகள்தான் பெருகிவிட்டன.

இரண்டு உதடுகளுக்கு இடையில் உள்ளதையும் இரு தொடைகளுக்கு இடையில் உள்ளதையும் யாது பாதுகாக்கிறார்களோ, அவர்களுக்கு கவனம் கிடைக்க உறுதி அளிக்கிறேன் என்பது ஹதீஸின் கருத்து தெரிந்ததுதான். இதை எத்தனை பேர் கடைபிழக்கிறார்கள்?

உஹது போரின்போது ஒரு வாலிபர் ஷஹீத் ஆகிவிட்டார். அவரை தேடி எடுத்த போது, பசியின் காரணமாக வயிற்றில் ஒரு கல்லை கட்டி இருந்தது தெரியவந்தது. அவரது தாயார் அவருடைய முகத்தில் ஒட்டி இருந்த மண்ணை துடைத்து விட்டு, “உனக்கு சுவனம் கிடைக்கும்” என சோபனம் கூறினார். இதைக்கேட்டுக் கொண்டு இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனக்கு என்ன தெரியும்? அற்பமான பொருளில் அவர் கருமித்தனம் செய்து இருக்கலாம். அல்லது தனக்கு தேவை இல்லாத விஷயத்தில் தலையிட்டு இருக்கலாம் என்று கூறினார்கள்.

இன்னொரு சமயம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இந்த வாசல் வழியாக கவனவாசி ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். சிறிது நேரத்தில் ஹஜ்ரத் அப்துல்லா இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த வாசல் வழியாக வந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன விஷயத்தை அவரிடம் கூறி அப்படி என்ன அமல் செய்தீர்கள் என்று ஸஹாபாக்கள் கேட்க, எனது அமல்கள் கொஞ்சம் தான். எனக்கு எது சம்பந்தம் இல்லையோ அந்த விஷயத்தில் நான் தலையிடுவதில்லை. மக்களுக்கு ஒரு தீங்கையும் நாடமாட்டேன் என்று கூறினார்கள்.

தனக்கு சம்மந்தம் இல்லாத விஷயத்தில் தலையிடும் போதுதான் எல்லாப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர், எல்லாப் பிரச்சினையையும் விட்டுப் பாதுகாப்புப் பெற்றுவிடுகிறார்.

ஒவ்வொருவரிடமும் ஒரு வானவர் இருக்கிறார் என்றும் அவர் பேசக் கூழய ஒவ்வொன்றும் குறிப்பேட்டில் எழுதிக் கொள்கிறார் என்றும், இந்த ஏடு நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் சமூகம் சமர்ப்பிக்கப்படும் என்றும் இதுபற்றி கடுமையாக அவன் விசாரிப்பான் என்றும் ஒருவன் நினைப்பாராகில், நிச்சயமாக அவர் மவுனியாகி விடுவார். அவர் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் இது தேவைதானா என்று ஆராய்ந்து பேசக் கூடியவர் ஆகி விடுவார்.

ஒவ்வொரு வார்த்தையைப் பற்றியும் அணுவணுவாக அல்லாஹ{த்தஆலா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டால், அவன் தப்பிப்பது எப்படி? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: மறுமையில் அல்லாஹ{த்தஆலா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டால் அவன் நாசமாகி விடுவான் என்று.

நினைத்துப் பாருங்கள்! எப்போதும் “சளசள”வென்று பேசக்கூடியவர்கள், அதிலும் பள்ளிவாசலினுள் இருந்து உலக வி~யங்களை அரட்டை அடிப்பவர்கள். நேரம் போகவில்லை என்று ஆங்காங்கே கூடிக்கூடி பேசி நேரத்தை கொல்பவர்கள் நாளை மறுமையில் பெரிய கனமாக அஃமால் நாமா செயலேட்டை கொண்டு வரும்போது, இதுபற்றி எப்போது விசாரணை முடிந்து கரை ஏறுவார் என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்.

எல்லாவற்றுக்கும் தீர்வு மனம்தான். மவுனமாக இருந்தால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். மீதி உள்ள காலங்களில் தேவையானவற்றிற்கு மட்டும் பேசி, நாவை கட்டுக்குள் வைப்போமாக. நாவை கட்டுப்படுத்தும் ஆற்றலை தந்தருள அல்லாஹ்வை வேண்டுவோமாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்!

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb