உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்பார்கள். உரசிப்பார்த்தால் அதன் நன்மைகள் எண்ணிலடங்கா வெங்காயம் விக்கிற வெலையிலே பெரிசா வெங்காயத்தைப் பற்றி எழுதவந்துட்டாரு வெங்காயம் என ஒதுக்கிடாது தொடர்ந்து படியுங்கள்.
இது உண்மையாகவும் மருந்தாகவும் பயன்படும் முக்கிய மூலிகை இனங்களில் ஒன்று அன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படுவதால் இதை அறியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இது வெப்பத்தை சமனஞ்செய்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது மற்றும் உடல் நலத்துக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டவும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன் படுத்தப்படுகிறது.இதில் வெள்ளை வெங்காயம், சிகப்பு வெங்காயம் என இரண்டும் பெருவெங்காயம் என ஒரு வகையும் உள்ளது வெள்ளை வெங்காயம் சிறியதாகவும் சற்று காரத் தன்மை குறைந்ததாகவும் உள்ளதால் மருந்துக்கே விசேசமான பயன்படுகிறது. வெள்ளை வெங்காயம் கிடைக்காத போது சிவப்பு நிறத்தில் உள்ள சிறிய வெங்காயம் பயன்படுத்தப் படுகிறது. முக்கிய மாக பல மருந்துக்களில் வெங்காயம் சேரமானமாகக் சேர்க்கப்படுகிறது. நார்ப்பொருள் அதிகம் உள்ளதால் வெங்காயமும் அதன் தண்டும் மலச் சிக்கலை நீக்குவதில் மிகவும் விசேசத் தன்மை கொண்டது.
உபயோகம்:
வெங்காயத்தைக் கசக்கி கண்ணில் கலிக்கமிட ஜன்னி விஷம் நீங்கும்.
வெங்காயச் சாற்றில் சுண்ணாம்பைக் கலந்து கொட்டுவாயில் தடவ தேள்கடி விஷம் தீரும்.
வெங்காயமும், ஊமத்தங்காயும் அரைத்து அல்லது உரைத்து தடவ புழு வெட்டினால் மயிர் கொட்டி சொட்டையான இடத்தில் மயிர் வளரும்.
உரித்த வெங்காயம் ஒரு கைப்பிழயளவு கந்தகம் ஒன்று அல்லது இரண்டு கிhம் ஆமணெக்கெண்ணெயில் இவற்றை இட்டு வதக்கி வெங்காயத்தை உள்ளுக்குச் சாப்பிட்டு எண்ணெயை மேலே தடவ சிரங்கு தீரும் மற்றும் அரிப்பு ஊறல் போன்ற பல சரும நோய்கள் நீங்கும்.
வெங்காயமும் திருமேனி இலையும் இடித்து சாறு எடுத்து ஒரு கையளவு சுமார் 50 அட கொடுக்க தமரக சுவாசம் (மூச்சு வாங்கல்) நீங்கும் மற்றும் மகோத்தரம் நீங்கும்.
வெங்காய சாற்றில் கந்தகத்தை 40 நாள் அரைத்து வைத்துக் கொண்டு கால் கிராம் முதல் அரை கிராம் வரை சாப்பிட பல சரும நோய்கள் நீங்கும்.
வெங்காயச் சாறு கால் பழ அப்பக் கோவைச்சாறு, கால்படி நல்லெண்ணெய் கால்பழ ஒன்றாகக் கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு சிறு கரண்டியளவு சாப்பிட சளி, இருமல் நீங்கும், கணைச் சூடு – கணைக் காய்ச்சல் நீங்கி உடல் தேறும்.
அம்மை ஏற்பட்டவர்கள் வெங்காயமும், பழைய கம்பு சாதமும் சாப்பிட்டு வர சூட்டை குறைத்து புண்களை ஆற்றி உடலைத் தேற்றும் இது நமது நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயமும், பீநாறி இலையும், மஞ்சளும் சேர்த்து அரைத்து மார்பில் தடவ தாய்ப்பால் வற்றும்.
சஞ்சீவி லேகியம்:
வெங்காயச் சாறு 1 படி,
பனை வெல்லம் 500 கிராம்
எருமை வெண்ணெய் 350 கிராம்
இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி லேகிய பதமாக எடுத்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர உடல் உஷ்ணம், வயிற்றுக் கடுப்பு உஷ்ண வாயு மூலச் சூடு, இவைகள் குணமாகும்.
நன்றி: உடன்குடி S.A. செய்யது ஹத்தாது, தூத்துக்குடி – ஈரோடு ‘மனைவளக்கலைஞன்‘ மாத இதழ்
www.nidur.info